Breaking

Showing posts with label AWARENESS. Show all posts
Showing posts with label AWARENESS. Show all posts

Friday, November 29, 2024

Saturday, November 23, 2024

Monday, April 29, 2024

Friday, April 05, 2024

Wednesday, March 20, 2024

Monday, March 18, 2024

Thursday, February 22, 2024

February 22, 2024

நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் நச்சு பொருள் இருக்கிறது தெரியுமா? - மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்.



நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் நச்சு பொருள் இருக்கிறது தெரியுமா? - மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்.

சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு?

ரோடமைன் பி என்பது என்ன?

ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை. ரோடமைன் பி தடை செய்யப்பட்டதா?

ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது.

ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர்.

ரோடமைன் பி எந்தெந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது?

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றொரு உணவுப் பொருளான ரோஸ் மில்க்-ல் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் அவர் பேசும் போது, "பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது" என்கிறார்.

"உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், இந்த ரோடமைன் பி எந்த உணவுப் பொருளிலும் துளி அளவும் இருப்பதற்கு அனுமதி இல்லை" என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. ரோடமைன் பி இருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா ?

ரோடமைன் பி கலக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் நுகர்வோர் பார்த்த உடனேயே ரோடமைன் பி இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியாது. எனினும், சில உணவுப் பொருட்களில் ரோடமைன் பி உள்ளதா என கண்டறிய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய சோதனைகள் உள்ளன.

ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கலக்கக்கூடியதாகும். இந்த தன்மையை கொண்டு ரோடமைன் பி இருப்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

உதாரணமாக சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். சிறிதளவு பஞ்சை தண்ணீர் அல்லது எண்ணெயில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

அதை கிழங்கின் மேற்பரப்பில் லேசாக தடவிப் பார்க்கும் போது, அந்த பஞ்சு இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் பி கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பஞ்சு நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் ரோடமைன் பி கலக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதே போன்ற பரிசோதனை மூலம், கேழ்வரகில் ரோடமைன் பி கலந்திருப்பதையும் கண்டறிய முடியும்.

ரோடமைன் பி மற்றும் இது போன்ற தடை செய்யப்பட்ட வேறு வேதிப் பொருட்கள் உணவுப் பொருளில் இருப்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று விளக்கும் வீடியோக்களை இந்திய அரசின், https://www.youtube.com/@fssai_india என்ற தளத்தில் காணலாம். பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா?

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருக்கிறது இல்லையா என்பதை நுகர்வோர் உறுதி செய்ய முடியாது. அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதித்த பிறகே, ரோடமைன் பி உள்ளதா என்று உறுதி செய்ய முடியும்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவை பாதுகாப்பற்றவை என்று உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

"ஒரு உணவுப் பொருளில் தடை செய்யப்பட்ட நிறமி இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிட்டு ஒருவரால் பார்த்த உடனே துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணம் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது" என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார். ரோடமைன் பி ஏன் தடை செய்யப்படுகிறது?

ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.

ரோடமைன் பி-யினால் புற்றுநோய் ஏற்படுமா?

ரோடமைன் பி உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் தெரிவிக்கிறார்.

“ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ரோடமைன் பி-க்கும் கல்லீரல் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதே” என்றார். ரோடமைன் பி-யினால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் ?

ரோடமைன் பி உட்கொள்வதால், கல்லீரல் தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிறு மூளை செயல்பாடுகளில் தடை ஏற்படும். மேலும் நரம்பு தளர்ச்சி, முதுகு தண்டுவட பாதிப்பு ஆகியவையும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.

ரோடமைன் பி ஒரு முறை உட்கொண்டாலே பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

ஆனால், “சில நேரங்களில் ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தி பொருத்தும், உணவுப் பொருளில் எவ்வளவுன் ரோடமைன் கலக்கப்படுகிறது என்பதை பொருத்தும் இது ஏற்படும். அப்படி தீவிர நச்சுத்தன்மை உடனடியாக ஏற்பட்டால் அது மூளையை பாதிக்கும்” என்று பிபிசியிடம் பேசிய போது விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர்.

Saturday, February 17, 2024

February 17, 2024

பேராபத்து.. உஷார் மக்களே..! 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்.



பேராபத்து.. உஷார் மக்களே..! 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட். Perabatu.. be careful people..! Bird flu alert for 5 districts.

பேராபத்து.. உஷார் மக்களே..!

- 5 மாவட்ட மக்களுக்கு அதிரடியாக பறந்த அலர்ட்.

5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலெர்ட்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது

பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி

5 அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு.

Tuesday, February 13, 2024

February 13, 2024

Monkey fever - குரங்கு காய்ச்சல் பாதிப்பு 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

After exposure to the virus or post-tick bite, in a week a person will have early symptoms such as fever, chills, severe exhaustion, headache, body ache, and conjunctiva inflammation ( redness in the eye). One of the alarming symptoms is itchy and painful rashes on the body

குரங்கு காய்ச்சல் பாதிப்பு 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!! Monkey fever warning for 4 districts!!!

குரங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழக எல்லையோர நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடாவில், கியாசனுார் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு, 53 பேர் பாதிக்கப்பட்டு; இருவர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உத்தர கர்நாடகம், ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக, இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தபோக்கு போன்றவை, இதன் முக்கிய அறிகுறிகள்.

பாதிப்பு ஓரிரு வாரங்களில் குணமாகி விடும்; சிலருக்கு தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வகை காய்ச்சலை, பி.சி.ஆர்., மற்றும் ரத்த பரிசோதனைகள் வாயிலாக உறுதி செய்யலாம்.


இந்நிலையில், கேரளா, கர்நாடக எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்க, தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

* காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்

* கால்நடைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்; அவை, காடுகளுக்குள் செல்லாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்

* தொற்றை பரப்பும் உண்ணி பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், கலெக்டர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்

Saturday, February 03, 2024

February 03, 2024

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!



KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் ஆா்பிஐ இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கேஒய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும் அறிமுகமில்லாத நபா்களிடம் பொதுமக்கள் பகிரக் கூடாது.

இது தொடா்பாக தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபா்கள் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவா்களிடம் டெபிட், கிரெடிட் காா்டு தகவல்கள், கடவுச்சொல், ஓடிபி உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.

கைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி மட்டுமின்றி மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இதுபோன்ற மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றுகூறி பதற்றத்தை உண்டாக்கி மோசடி செய்யும் விஷமிகளும் உள்ளனா்.

எனவே, இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

KYC புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது அல்லது வங்கி சேவைக்கான தொடா்பு எண்ணை பயன்படுத்துவதே முறையான செயல்முறையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Friday, January 19, 2024

January 19, 2024

வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 21-ந் தேதி வினாடி வினா போட்டி

வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 21-ந் தேதி வினாடி வினா போட்டி Quiz competition on 21st for voter awareness

வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 21-ந் தேதி வினாடி வினா போட்டி தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்கச் செய்யும் ஸ்வீப் என்ற திட்டத்தின்படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டியை வரும் 21-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 11.15 மணிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.

அந்த இணையதளத்தில் விவரங்களை 18 மற்றும் 19-ந் தேதிகளில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். ''இந்தியாவில் தேர்தல்கள்'' என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும்.

மேலும் விவரங்களைப் பெற, https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளம்; 1800-4252-1950 என்ற மாநில உதவி மைய எண்; 1950 என்ற மாவட்ட உதவி மைய எண் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

Saturday, January 13, 2024

January 13, 2024

செல்போனில் ‘*401#’-க்கு தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய தகவல் தொடா்புத் துறை எச்சரிக்கை



செல்போனில் ‘*401#’-க்கு தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய தகவல் தொடா்புத் துறை எச்சரிக்கை

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில்,

‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை.

அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 12, 2024

January 12, 2024

பள்ளிகளில் இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!



ஆபாச படங்கள்:

"பதிவிறக்கம் செய்வது குற்றமல்ல; பகிர்வதுதான் குற்றம்

90s kids எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல 2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்

பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் - சென்னை உயர் நீதிமன்றம்

"ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல"

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல

மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் .

- சென்னை உயர் நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல; மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம்

90's kids எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல் 2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர் அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்


பள்ளிகளில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

Total Pageviews

Search This Blog