Breaking

Showing posts with label Siddha Medical. Show all posts
Showing posts with label Siddha Medical. Show all posts

Wednesday, October 18, 2023

October 18, 2023

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புக்கு அக்.26-ல் கலந்தாய்வு தொடக்கம்: தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி முதலிடம்



Counseling for Siddha, Ayurveda, Homeopathy begins on Oct. 26: Salem student tops rank list - சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புக்கு அக்.26-ல் கலந்தாய்வு தொடக்கம்: தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி முதலிடம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், சேலம் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். வரும் 26-ம் தேதி சென்னையில் கலந்தாய்வு தொடங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,689 பேரும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,040 பேரும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 942 பேரும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு 596 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனித்தனியாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர்வுக்குழுத் தலைவர் மருத்துவர் பா.மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில், 2,530 பேர் இடம்பெற்றுஉள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.வி.வைசாலி (நீட் மதிப்பெண் - 720-க்கு 602) முதலிடம் பிடித்துள்ளார். 968 பேர் இடம்பெற்றுள்ள நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 942 பேர் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் சென்னையைச் சேர்ந்த மாணவர் எம்.ஹரிஹரன் (நீட் மதிப்பெண் 506) முதலிடம் பெற்றுள்ளார். 556 பேர் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பட்டியலில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜி.திருமலை (நீட் மதிப்பெண் 363) பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவினருக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து, 27 முதல் 29-ம் தேதி வரை அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும், 31-ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Thursday, September 28, 2023

September 28, 2023

பதிவு எண் கிடைக்காததால் சித்தா மாணவர்கள் அவதி



பதிவு எண் கிடைக்காததால் சித்தா மாணவர்கள் அவதி

சித்தா மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், அதற்கு பதிவு எண் கிடைக்காததால், பயிற்சி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., என்ற சித்தா மருத்துவத்தை மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 2018 - 19ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் ஐந்தாண்டு முடித்துள்ளனர்.பயிற்சி மருத்துவராக பணியாற்றுவதற்கு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான பதிவு கிடைக்க காலதாமதம் ஆவதால், முதுநிலை மருத்துவம் மற்றும் அரசு பணிக்கான எம்.ஆர்.பி., தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அந்த வகையில், பதிவு எண் அளித்தால் மட்டுமே, நாங்கள் பயிற்சி டாக்டராகவும், முதுநிலை மருத்துவம் மற்றும் இதர தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. பலமுறை கேட்டாலும் உரிய பதில் தர மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, August 29, 2023

August 29, 2023

சித்த மருத்துவ படிப்பு- 4,683 பேர் விண்ணப்பம்

சித்த மருத்துவ படிப்பு- 4,683 பேர் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, 4,683 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில், 1,226 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 551; அகில இந்திய ஒதுக்கீடுக்கு 313 என, 2,090 இடங்கள் உள்ளன.
https://nischennai.org/main/admission/
இந்த மூன்று ஒதுக்கீட்டுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இந்த படிப்புகளில் சேர, அரசு ஒதுக்கீட்டுக்கு 2,689 பேர், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,048 பேர், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 946 பேர் என, 4,683 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தேர்வுக்குழு தலைவர் மலர்விழி கூறுகை யில், ''விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி துவங்கியுள்ளது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, செப்., 15ம் தேதிக்கு பின், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது,'' என்றார்.
https://nischennai.org/main/admission/

Sunday, December 25, 2022

December 25, 2022

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பு தொடக்கம்

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பு தொடக்கம்

சென்னையை அடுத்த சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிய இளங்கலை சித்த மருத்துவ பட்டப் படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) தொடங்கப்பட உள்ளது.

60 இடங்களுடன் தொடங்கப்பட உள்ள பட்டப் படிப்புக்கு இந்திய மருத்துவ தேசிய ஆணையம் அனுமதிய வழங்கியுள்ளதாக இயக்குநா் பேராசிரியா் ஆா். மீனாகுமாரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், நிகழாண்டு நீட் தோ்வுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து மாணவா் சோ்க்கை விரைவில் நடைபெறும். அதற்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்கும். தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் நிலத்தில் புதிய கல்லூரி அமைக்கப்பட உள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஏற்கெனவே 8 சித்த மருத்துவப் பிரிவுகளில் எம்.டி. (சித்தா) படிப்பையும், 6 பிரிவுகளில் சித்த மருத்துவ ஆராய்ச்சி கல்வியையும் வழங்கி வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.

Thursday, September 22, 2022

September 22, 2022

Eligibility for medical courses is now a one-time payment - மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.

ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

Tuesday, March 01, 2022

March 01, 2022

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு - பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 84 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜனவரி 18ம் தேதி மாலை 5 மணி வரை நடந்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் கடந்த ஜனவரி 18ம் தேதி மாலை 5.30 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்கள் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,721 பேர் இடம்பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் 87 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 378 பேர் இடம் பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 761 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியது. அதில் 84 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் நிரம்பியதையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் தொடங்கியது. அதில் சிறப்பு பிரிவினருக்கான 11 இடங்கள், பொதுப்பிரிவில் 65 இடங்கள் என 76 இடங்களுக்கும் நேற்றே கலந்தாய்வு நடந்தது.

இதையும் படிக்க | கொரோனா 4ம் அலை ஜூன் மாதம் ஏற்படும் - ஐஐடி ஆய்வில் தகவல்

இதை தொடர்ந்து, அரசு பள்ளி ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆவணங்களை வழங்கினர். அதை தொடர்ந்து மாணவர்கள் நேற்று முதல் கல்லூரிகளில் சேர தொடங்கினர். மேலும் தரவரிசைப் பட்டியல்கள் மற்றும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களை முழுமையாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, February 02, 2022

February 02, 2022

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்: பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு அறிவிப்பு

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்: பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு அறிவிப்பு

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழாண்டுக்கான பட்ட மேற்படிப்பு மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதன்படி வரும் 21-ஆம் தேதி அதற்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தாம்பரத்தில் அமைந்துள்ளது. எம்.டி. சித்தா பட்ட மேற்படிப்புக்கு இங்கு 58 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் வரும் 21-ஆம் தேதி நடத்தவுள்ளது. அதனுடன் முனைவா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநா் டாக்டா் மீனா குமாரி தெரிவித்தாா்.

கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை குறித்த விவரங்களை www.nischennai.org இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog