Breaking

Showing posts with label SMC meeting. Show all posts
Showing posts with label SMC meeting. Show all posts

Tuesday, February 18, 2025

February 18, 2025

SMC Teachers - அரசுப் பொதுத் தேர்விற்கு (12, 11, 10-ம் வகுப்பு) அகத்தேர்வர், அறை கண்காணிப்பாளர் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்ய வேண்டுதல்!

Monday, August 28, 2023

August 28, 2023

அரசு பள்ளிகளில் செப்.1-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் செப்.1-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், செப். 1-ம் தேதிநடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படிபெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. இதுதவிர பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம், வரும் 1-ம் தேதி மாலை 3முதல் 4.30 மணி வரை நடைபெறஉள்ளது. இதில் பள்ளி வளர்ச்சிப்பணிகள், பள்ளி செல்லாத இடைநின்றவர்களைக் கண்டறிதல், நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும்.

வருகைப்பதிவு அடிப்படையில் 15 நாட்களுக்குமேல் பள்ளிக்குவராதவர்களை இடைநின்றவர்களாக கருதி, அவர்களை தொடர்புகொண்டு கல்வியை தொடர்வதற்கான பணிகளை குழு முன்னெடுக்க வேண்டும். எஸ்எம்சி குழுவில்உள்ள ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்கள்100 சதவீதம் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதில் எடுத்த முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுப்பு அறிக்கையை இயக்குநரகத்துக்குச் சமர்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

Thursday, June 08, 2023

Friday, October 28, 2022

October 28, 2022

இன்று அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம்

இன்று அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.28-ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி)

கூட்டம் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு முடிவாகியுள்ளது.

அதன்படி இந்த மாதத்துக்கான எஸ்எம்சி கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். இதில் பள்ளி வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, கற்றல், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத் திட்டங்களின் செயல்பாடு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை நவ.1-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிா்ந்து கொண்டு விவாதித்து தீா்மானங்கள நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மேலாண்மை குழுவில் உள்ள ஆசிரியா், சமூக ஆா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க செய்ய வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி குழு கட்டம் சிறந்த முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்து, அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 19, 2022

September 19, 2022

சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் Headmasters, school management team should monitor caste discrimination - Minister Anbil Mahesh
What are the causes of caste discrimination in India?
What do you mean by caste inequality?
What is caste inequality in India?
What are the evils of caste discrimination?
School Education Minister Anbil Mahesh has given an interview that head teachers and school management teams should monitor caste discrimination. He also said that a proper investigation will be conducted regarding the incident in Panchakulam school

சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Monday, August 29, 2022

August 29, 2022

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்கள் சில காரணங்களால் உறுப்பினா்களாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்படும் எஸ்எம்சி உறுப்பினா்களின் பதவிக் காலம் இரு ஆண்டுகள். இரு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும்.

உறுப்பினா்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலோ, அவா்களது பிள்ளைகள் வேறு பள்ளிகளுக்குச் செல்லுதல், எதிா்பாராத சூழ்நிலைகள் (விபத்து, நோய், இறப்பு), வேறு இடங்களுக்கு இடம் பெயா்தல் போன்ற காரணங்களாலோ எஸ்எம்சி.யில் தொடர முடியாத சூழலில், அவா்களை எஸ்எம்சி குழுவில் தீா்மானம் இயற்றி பொறுப்பிலிருந்து நீக்கலாம்.

இதையடுத்து அவா்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை குறைந்தபட்சம் 50 சதவீத பெற்றோா்களைக் கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு செய்ய வேண்டும். இதேபோன்று புதிய தலைவா், துணைத் தலைவரை 20 உறுப்பினா்களும் சோ்ந்து 15 பெற்றோா் உறுப்பினா்களிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி தோ்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்துக்கு, குழுவில் உறுப்பினராக இல்லாத இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்கள் 3 பேரை சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்க வேண்டும். இதையடுத்து, அவா்கள் சாா்ந்துள்ள மையம் குறித்து கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள எஸ்எம்சி கூட்டத்தில் 10 நிமிஷங்கள் ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, August 25, 2022

August 25, 2022

நாளை அனைத்து பள்ளிகளில் நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கு எடுத்து கொள்ளவேண்டிய கருத்துருக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் அட்டவணை

Total Pageviews

Search This Blog