Honble Minister
April 27, 2025
Showing posts with label Honble Minister. Show all posts

Sunday, April 27, 2025
Sunday, January 12, 2025
Sunday, November 17, 2024
Wednesday, June 26, 2024
Tuesday, June 11, 2024
Wednesday, February 07, 2024
semester Exams
February 07, 2024
Plan to hold college semester exams early: Minister Rajakannappan announced
Plan to hold college semester exams early: Minister Rajakannappan announced கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். │பார்லி., தேர்தலுக்கு முன்பாக கல்லூரி |செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
தேர்தலுக்கு முன்பே தேர்வுகள் - தமிழக அரசு ஏற்பாடு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கட்டிடங்கள் திறப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அந்த பிரிவு மாணவ-மாணவிகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தென்காசி, ராமநாதபுரம், பெரம்பலூர், மாவட்டங்களில் மொத்தம் ரூ.16.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதி கட்டிடங்களை அமைச்சர் ராஜகண்ணப்பன், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது திறந்து வைத்தார். தேர்தலுக்கு முன்பே தேர்வு பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி வருமாறு:- பல்கலைக்கழகங்களில் தமிழ் தெரிந்த துணை வேந்தர்கள் இருந்தால், அவரிடம் மக்கள் பேசக்கூடிய அளவில் இருக்கும். தற்போது 3 துணை வேந்தர் காலியிடங்கள் உள்ளன. அதற்கான குழு பரிந்துரை செய்த பிறகு நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான ஒப்புதலை கவர்னர் அளிப்பார் என்று நம்புகிறேன். துணை வேந்தர் தமிழ் தெரிந்தவராக இருந்தால் பல்கலைக்கழகத்திற்கு நல்லது. பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள், ஆசிரியர்களிடம் பேசி தீர்வுகாண எளிதாக இருக்கும். சேலம் துணை வேந்தர் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அதைப்பற்றி இங்கு பேச முடியாது. சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், திறந்த நிலை பி.எட்., எம்.எட். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணை வேந்தர்கள் நியமனம் பற்றி முதல்-அமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும். கவர்னரின் ஒப்புதலுக்காக சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
அதுபற்றி கவர்னரிடமே முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். இதில், அரசியல் அமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதற்கு கவர்னர் சரி என்று கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது, தேர்தலுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், தேர்தலுக்கு முன்பே அவற்றை முடிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் 3-ம் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள். அதை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, December 14, 2023
NEWS
December 14, 2023
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர்

காலியாக உள்ள ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு புதுச்சேரி அரசு பள்ளிக்கல்விதுறை சார்பில் மண்டல அறிவியல் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, இந்திரா நகர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நடந்தது.கடந்த 2 நாட்கள் நடந்த மாநில அளவிலான கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:புதுச்சேரி கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 900 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு போட்டி தேர்வுகளில் நம் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அடிப்படையாக உள்ளது.
அதனால் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டு வந்துள்ளோம். பல ஆண்டுகளாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில் 143 பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் எந்தவீத தலையீடு இன்றி திறமை, தகுதி அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தற்போது 300 பட்டதாரி ஆசிரியர், 67 மொழி ஆசிரியர், 91 விரிவுரையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பினால் தான் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க முடியும். அதனால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பயிற்சி அளிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று தலை சிறந்தவர்களாக உருவாகி நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார்.அரசு கொறடா ஆறுமுகம், கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tuesday, November 14, 2023
Udayanidhi Stalin
November 14, 2023
ஆசிரியர்களுக்கு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
ஆசிரியர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வேண்டுகோள்!
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பள்ளிகளில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டு வீரர்களாக மாற்றுங்கள், மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள் விளையாட்டுப் பாட நேரத்தை கடன் வாங்காதீர்கள் வேண்டுமானால் உங்கள் பாட நேரத்தையும் மாணவர்களுக்கு கொடுத்து விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள்."
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்.
Wednesday, October 11, 2023
NEWS
October 11, 2023
அறிவேள்வி நுால்: அமைச்சர் வெளியீடு
அறிவேள்வி நுால்: அமைச்சர் வெளியீடு Knowledge Manual: Ministerial Publication
இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, 50 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளடக்கிய, அறிவேள்வி என்ற நுாலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், பல்கலை ஆராய்ச்சி நாள் - 2023 நேற்று கொண்டாடப்பட்டது. அதில், கல்லுாரிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற, 64 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்த, தலா மூன்று மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, ஆராய்ச்சி கட்டுரைகளில் சிறந்த, 50 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பான, அறிவேள்வி என்ற நுாலை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

Wednesday, August 02, 2023
Honble Minister
August 02, 2023
14,000 பள்ளி மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - மத்திய இணையமைச்சர் தகவல்
மணிப்பூர் ஏற்பட்ட வன்முறை காரணமாக 14,000 பள்ளி மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
மணிப்பூர் விவகாரம் மத்திய இணையமைச்சர் தகவல்
மணிப்பூர் அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த 14 ஆயிரத்து 763 பள்ளி மாணவர்களில் 93.5% பேர் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் உறுப்பினர் டோலா சென் கேள்வி எழுப்பியதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல்
மணிப்பூர் கலவரத்தால் 14,000 பள்ளி மாணவர்கள் இடப்பெயர்வு: மத்திய கல்வி அமைச்சகம்
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 14,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இன்று (ஆகஸ்ட் 2) மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவலை மாநிலங்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து பூர்வமாக தெரிவித்தார். இதில் சுமார் 93 சதவீதம் மாணவர்கள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். “மணிப்பூரில் நிலவும் சூழல் காரணமாக சுமார் 14,763 பள்ளி செல்லும் மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் பள்ளியில் சேர்க்கை பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் அனைத்து நிவாரண முகாமுக்கும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்த மாணவர்களில் 93.5 சதவீதம் பேர் அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்க்கை பெற்றுள்ளனர்” என அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 20, 2023
Friday, May 26, 2023
Monday, April 17, 2023
Saturday, February 25, 2023
NEET
February 25, 2023
' நீட் ' புதிய வழக்கு ஏன்? அமைச்சர் விளக்கம்!...
சென்னை: 'உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க., அரசால் தவறாக பதியப்பட்டு நிலுவையில் இருந்த, 'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்று, சரியான சட்ட விதிகளின் அடிப்படையில், தி.மு.க., அரசு புதிய வழக்கு பதிவு செய்துள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'நீட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சட்ட விதிகளை ஆராயாமல், அவசர கோலத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, 2020 ஜன., 4ல், அ.தி.மு.க., அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தவறான சட்டப் பிரிவுகளின்படி தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்தினால், அது, 'நீட்' தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்துக்கும், நம் மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என, சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே, உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யவும், அ.தி.மு.க., ஏற்கனவே தவறான சட்ட விதிகள் அடிப்படையில் தாக்கல் செய்து, நிலுவையில் இருக்கும் வழக்கை திரும்பப் பெறவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு செயல்வடிவம் தரும் வகையில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்ட விதிகளை எதிர்த்தும், புதிய வழக்கு தொடர்ந்து, உரிய மனுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க., அரசின் தவறான வழக்கை திரும்ப பெற்றதை, ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்ப பெற்று விட்டது போலவும், தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கை மறைத்து, திசை திருப்பும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.
நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவது மட்டு மின்றி, பொருளாதார நிலையிலும், சமூக நீதி அடிப்படையிலும், பின் தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட, நீட் தேர்வை அகற்ற, கொள்கை பிடிப்புடனான சட்டப் போராட்டத்தை, தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும். இவ்வாறு, சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Wednesday, August 24, 2022
wage settlement
August 24, 2022
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
14வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியூ செயலாளர் சௌந்தரராஜன் பேட்டி
இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.
பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை
CLICK HERE TO DOWNLOAD