Breaking

Showing posts with label BUDGET. Show all posts
Showing posts with label BUDGET. Show all posts

Saturday, March 15, 2025

Friday, March 14, 2025

Sunday, February 02, 2025

Wednesday, February 21, 2024

February 21, 2024

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும்



அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் !

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் ! தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மீதான கருத்து பதிவுகளாக அகில இந்தியச் செயலாளர் ஐபெட்டோ அண்ணாமலை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மா. நம்பிராஜ், பொதுச் செயலாளர் அ. வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் க.சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் இன்று சட்ட பேரவையில் தாக்கல் செய்து படித்துள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் நிதியமைச்சராக இருந்த பொழுது தாக்கல் செய்த விவரத்தினையும் பதிவு செய்தார்கள்.

64 பக்க அறிக்கையில் மூன்றரை கோடி மக்கள் பயனடையும் வகையில் இடம்பெற்றதாக அறிஞர் அண்ணா சொன்னதாக தெரிவித்த போது நெஞ்சம் நெகிழ்ந்தது. வரவேற்கக் வேண்டிய பொது அம்சங்கள்:

* தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ( 6 முதல் 12 ஆம் வகுப்பு ) வரைக்கும் படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூபாய்1000/- வழங்கப்படும் *ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள அறிவிப்பாகும். அரசுப் பள்ளியில் படிக்கும் அக்காவிற்கு சலுகை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தங்கைக்கு சலுகைகள் இல்லையா? என்றெல்லாம் எழுதினோம்.

அதே போல் அரசு பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு “தமிழ்ப்புதல்வன் ” திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கபட இருக்கிறது. சலுகைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதை மனந்திருந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கும், இந்த நேரத்தில் நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற நாளில் போராடி வருகிறார்கள். ஆனால், போராடி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்துதான் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்து போராடி வருகிறார்கள். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்ற கொள்கை முடிவினை கூட ஆளுநர் உரையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தினையும் அதிருப்தியையும் அளிக்கிறது. அதுபோல் நிறுத்தி வைக்கப்பட்ட, முடக்கி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பினுடைய அனுமதியும் தொடரும் என்ற அறிவிப்பாவது வெளிவரும் என்று எதிர்பார்த்தார்கள் அதுவும் வெளிவரவில்லை. மற்றபடி கல்வித்துறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 90% *ஆசிரியர்ளை பெரிதும் பாதிக்கு உள்ளாக்கி வரும் அரசாணை எண் 243 ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உட்பட அறிக்கைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிதி ஒதுக்கீட்டினை பொருத்த வரையில் கடந்த ஆண்டை விட அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கூடுதலாக செய்துள்ளார்கள். கல்வித்துறையை பொருத்தவரையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44000/- கோடி ஒதுக்கியுள்ளார்கள். சென்ற ஆண்டு ரூ40299/- கோடி நிதிநிலை ஒதுக்கி இருந்தார்கள். உயர் கல்வித்துறையை பொறுத்தவரையில் சென்ற ஆண்டு ரூ6967/- கோடி ஒதுக்கி இருந்தார்கள்.

இந்த ஆண்டு ரூ8212/- கோடி ஒதுக்கி உள்ளார்கள். அதேபோல் அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கி உள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் என முடிவு செய்துள்ளார்கள். அதேபோல் ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை பெற கல்வி கடன் ரூ2500/-கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார்கள். அகில இந்திய அளவில் நிதி ஆயோக் புள்ளி விவரப்படி சுமார் எட்டு கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 14 லட்சம் பேர் (2.2%பேர்) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதில் 5 லட்சம் பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ரூ50000/- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து உள்ளார்கள். வரி வருவாயை பொருத்தவரையில்ரூ 1.49 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது பற்றாக்குறை ரூ44907/- கோடி.

நிதித்துறை முதன்மை செயலாளரைப் பொறுத்தவரையில் நிதி நிலையை ஆரோக்கியமாக நம்மால் வைத்திருக்க முடியுமென்று உறுதியளித்துள்ளார்.

தேசிய அளவைவிட பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி என்ற ” லோகோ “வுடன் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. மேற் சொன்ன பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாய் தமிழக முதலமைச்சர் அவர்களையும், தமிழக நிதியமைச்சர் அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பெரிதும் வேண்டி கேட்டு கொள்கிறோம். ” என்பதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப் பிரிவு.
February 21, 2024

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு. மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம்

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு

Monday, February 19, 2024

February 19, 2024

ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூ.63,722 கோடி: எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா?.

February 19, 2024

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

சென்னை: “வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

> அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட உண்டு. உறைவிட மாதிரிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் 352 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. > நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 ரூபாய் செலவில் 8,200 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi Tech lab) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. மேலும், வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

> கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இல்லத்தில் முடங்கிக் கிடந்தவை குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது கல்விக் கனவும் தான். அதனை மீட்டு அவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கவும் கற்றல் இழப்பை ஈடுசெய்யவும், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் முதல்வரால் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை மீட்டெடுத்ததில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. > வாசிப்பை நேசிக்கும் மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிடும் உயரிய நோக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022.23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில், சுமார் 55 லட்சம் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும், இக்கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72 இளைஞர்கள் அறிவுசார் தளத்தில் உயர்ந்திட நூலகங்கள் முதன்மைக் களமாக உள்ளன. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு - செலவத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

# அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

# தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு # உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

# பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

# இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி
February 19, 2024

TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு.



TN Budget 2024 - Allocation of Rs.960 crore for primary education sector to educate students in modern technology. TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு. நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும் , அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 கோடி ரூபாய் செலவில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - Tech lab ) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Classroom ) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன . மேலும் , வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் .

Friday, February 02, 2024

February 02, 2024

வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது ஏமாற்றம் : ஆசிரியர்கள் கருத்து



வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது ஏமாற்றம் : ஆசிரியர்கள் கருத்து Disappointment not to raise income tax ceiling: Editors opin

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது ஏமாற்றம் அளிக்கிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப் பாண்டியன் கூறியதாவது :

இந்த பட்ஜெட் அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது . நேர்மையாக வரி செலுத்துவோரை கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாததால் ஒரு மாத ஊதியத்தை விட அதிகமாக வரி செலுத்தும் நிலை உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது அரசு ஊழியர்களை கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். பட்ஜெட் குறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறுகையில் , மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அறிவிப்பு இல்லை . வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது . ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தி , துறைமுகங்கள் இணைப்பாக 3 புதிய ரயில் பாதைகள் அமைப்பது வரவேற்கத்தக்கது . இதில் மதுரை - காரைக்குடி - தொண்டி வரை புதிய ரயில் வழித்தடத்தை சேர்க்க வேண்டும் . 40 ஆயிரம் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் பெட்டிகளாக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

தொழில்வளர்ச்சி குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. புதிய விமான நிலையங்களை ஏற்படுத்துவதில் செட்டிநாட்டையும் சேர்க்க வேண்டும் என்று கூறினார் .

Total Pageviews

Search This Blog