Breaking

Showing posts with label History Of Today. Show all posts
Showing posts with label History Of Today. Show all posts

Saturday, September 04, 2021

September 04, 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி - செ.கு.எண்:54 - நாள்:04.09.2021

செ.கு.எண்:54
நாள்:04.09.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின்
ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள்! பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்' அவர்களின் பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள்! இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்!'
"வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
கள்வராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது"
எனப் போற்றப்படும் கல்வி. அதனைப் பயிற்றுவிக்கும் பணியினை ஈடுபாட்டோடு செய்து வரும் ஆசிரியர்கள், சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்.
ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று. அது,
மனிதர்களை அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி;
புனிதப்பணி!
கைதேர்ந்த சிற்பிகளால்தான் கல்லையும் சிலையையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையைக் கல்வியறிவு என்னும் கத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளைப் புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார். உழவர் மேடு பள்ளங்களைச் சமன் செய்து நீர்பாய்ச்சி, உழுது உரமிட்டுப் பயிர் செய்து அறுவடை செய்கிறார். ஆசிரியர் ஏற்றத்தாழ்வும், அறிவின்மையும், வறுமையும் உடைய மாணவர்களின் மனதைப் பண்படுத்தி அவர்களிடமிருந்து அறிவை அறுவடை செய்கிறார். மாணவர்கள் இடைநிற்றலின்றி கற்கவும் தரமான கல்வியைப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூகத்தை வளப்படுத்தவல்ல ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்பத் தம்மை வலுப்படுத்திக் கொண்டு,மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப, கல்வி வளர்ச்சியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வளர்ந்து வரும் உலகின் அத்தளைப் பரிமாணங்களையும் மாணவர்களை அறியச் செய்து, நேர்மை, ஒழுக்கம், உண்மை என்ற அறநெறிகளில் பிறழாது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாக உருவாக்கும் தன்முனைப்போடு செயல்பட வேண்டுமாய் ஆசிரியர்கள் அளைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னரும் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்று இன்புறச் செய்யும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 04, 2021

ஆசிரியப் பணி அறப்பணி!!

"ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி மாணவர்களுக்கு உண்டு. அந்த மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு. அதனால்தான் நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். வேறு எந்தப் பணிக்கும் இல்லாத சிறப்புகள் பல ஆசிரியர் பணிக்கு உண்டு. ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒவ்வொரு ஊரிலும் தனி மரியாதை இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆசிரியர் சொல்லுக்குத் தனி மரியாதைதான். ஒரு பிரச்னையில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்க பலர் காத்திருப்பதுண்டு. ஆசிரியர்களும் விருப்பு வெறுப்பற்று தங்கள் கருத்துகளை தைரியமாக எடுத்துக் கூறினர். அப்போதெல்லாம் ஒரு கிராமத்துக்குள் ஆசிரியர் நுழைகிறார் என்றால் மாணவர்கள் அவர் எதிரில் செல்லவே பயப்படும் சூழ்நிலை இருந்தது. அப்போது ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்தாலும் பயந்துதான் செய்தார்கள். ஆசிரியர்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதினார்கள் ஊரார்.

ஆனால் இப்போது ஆசிரியர் தொழில் என்பது அதிக ஊதியம், குறைந்த உழைப்பு, எதற்கும் பொறுப்பேற்கவேண்டிய அவசியம் இல்லாதது என்றாகிவிட்டது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி கொண்டு வரப்பட்டது. ஒருவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடிக்கும்போது அவருக்கு 17 வயது ஆகும். அதன்பின் அரசுப் பணிக்கு வருவதற்காக ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது இவ்வளவு போட்டியில்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு வழங்குவது போல ஊதியம் வழங்கப்பட்ட பின் இப்பணிக்குக் கடுமையான போட்டி உருவானது. அதனால் பணி வாய்ப்பு பெறுவதற்கே பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மத்திய - மாநில அரசுகள் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கின்றன. மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்வதுடன் நினைவுப் பரிசுகளையும் அளிக்கின்றனர். ஆசிரியர் என்பவர் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கணித்து அவர்களுக்கு உதவுபவராக அமைந்தால் அது பேரின்பமே. தமிழகத்தின் தென்கோடியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடுமையான உழைப்பால் குடியரசுத் தலைவரானவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அவருடைய ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர், நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக உயர்ந்து காட்ட வேண்டும் என்று கலாமை ஊக்கப்படுத்துவாராம். இதைத் தனது "அக்னிச் சிறகுகள்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கலாம். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு வீடு கட்டித் தந்த மாணவர்கள், பெங்களூரு இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பெண் பேராசிரியை பெயரில் பல கோடி செலவில் கட்டடங்களைக் கட்டிய மாணவர்கள், சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்காக கோடிகளில் பணம் கொட்டித் தங்கள் வழிகாட்டிகளைப் படிக்க வைக்கும் மாணவர்கள் என ஆசிரியர்களால் உயர்ந்த மாணவர்களின் செயல்கள் மனதை நெகிழ வைக்கின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் ஏதாவது ஒருவகையில் தங்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத்தான் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கற்பித்தலில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது இங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டாக வேண்டியுள்ளது. இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. அவர்கள் கற்பித்தலில் தங்கள் மாணவர்களுக்குக் காட்டிய அக்கறைக்காகவும் புதுமையைப் புகுத்தியதாலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல நூறு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தைத் தாண்டியும் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். அதுவும் கடந்த ஆண்டை உலகம் முழுவதையும் கரோனா பாதித்து மறக்க முடியாத ஆண்டாக்கியது. அப்போது நல்ல உள்ளம் கொண்ட பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் கற்கவும் அவர்களின் குடும்பங்கள் வயிராற உண்ணவும் தங்கள் சொந்தக் காசைச் செலவு செய்தனர். பணம் செலவு செய்தது பெரிய விஷயமில்லை. ஆனால் மனித நேயம் மரத்துப்போகவில்லை என்பதை இது உறுதிப்படுத்தியது. இதைப் பார்க்கும் அடுத்த தலைமுறை மாணவர்களிடம் மனித நேயம் தொடர்ந்து மலரும் என்பது உறுதி. வல்லரசான அமெரிக்கா, கடுமையான புயலால் பாதிக்கப்படும்போதெல்லாம், இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் அங்குள்ளவர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள்கூறுவது, தமது ஆசிரியர்கள் கற்றுத் தந்த கலாசாரமும், மனிதாபிமான பண்பும்தான் என்கிறார்கள். இது நமது கலாசாரத்துக்கும் அதனைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கிடைத்த பெருமை எனலாம். ஆசிரியப் பணி என்பதை தொழிலாகப் பார்க்காமல் எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யும் சேவையாகப் பார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்கள். ஆசிரியர்கள் யாரும் வித்தியாசமானவர்களாக இல்லை. ஆனால் வித்தியாசமான செயல்களைச் செய்யும் ஆசிரியர்களே மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஆசிரியர்கள்தான் சமுதாயத்தை முன்னேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களைப் பொருத்தவரையில் அந்த ஆசிரியர்கள் எப்போதும் நல்லாசிரியர்களே. ஆசிரியப் பணி அறப்பணி என்பதை உணர்ந்து, அதற்கே தன்னை அர்ப்பணித்து வாழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள். நாளை (செப். 5) ஆசிரியர் நாள்."

Sunday, August 15, 2021

August 15, 2021

75 வது சுதந்திர தின விழா இன்று பள்ளிகளில் கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

வழிகாட்டு நெறிமுறைகள் :
1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை . சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் . சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

4. கொரோணா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம். குறிப்பு :
சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக் கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட்- 19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும். மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Rag Code of India 2002 - ன் படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் ( Covld -19 ) தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 15.08.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று இந்திய திருநாட்டின் 75 - வது சுதந்திர தின விழாவினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினவிழவினை கொண்டாடிட கல்வித்துறை உத்தரவு.

Wednesday, July 14, 2021

July 14, 2021

பள்ளிக் கல்வி - முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Monday, July 12, 2021

July 12, 2021

வானில் இன்றும், நாளையும் சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கி தோன்றும் அரிய நிகழ்வு: வெறும் கண்களால் பார்க்கலாம்

வானில் சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வுஇன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்க உள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய் கோள்களுக்கு அருகேசந்திரன் தென்படும். மிக அற்புதமான இந்த காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காணமுடியும்.

இதுபோன்ற நிகழ்வு கடந்த 2019 ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்றது. ஆனால், சூரியனுக்கு மிக அருகில் இருந்ததால் தெளிவாக காணமுடியவில்லை. இதேபோன்ற நிகழ்வு மீண்டும் 2024 பிப்ரவரி 22-ம் தேதி தென்படும்.

ஆனால், இன்றைய நிகழ்வு போல மிக நெருக்கமாக காண்பதற்கு 2034 மே 11-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகள்,அவ்வப்போது வானில் நிகழக்கூடியவை என்றாலும், நாம்வெறும் கண்களால் அவற்றை தெளிவாக காண இயலாது. எனவே, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய இந்த நிகழ்வைஅனைவரும் தங்கள் குடும்பத்தினருடன், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்டு மகிழ வேண்டும்.

படங்களை அனுப்பலாம்...

இந்த நிகழ்வை புகைப்படம் எடுப்பவர்கள் outreach@iiap.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படங்களை அனுப்பி வைக்கலாம். தேர்வாகும் படங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
July 12, 2021

வாழும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் N. சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

வாழும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் N. சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!


இந்திய விடுதலைக்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துத் தனது மாணவப் பருவம் தொடங்கி, போராடியவர் தோழர் என். சங்கரய்யா.

விடுதலைக்குப் பிறகும், உழைக்கும் மக்களின் உரிமைக்காக, சமத்துவச் சமூகத்தைக் கட்டமைத்திடத் தொடர்ந்து போராடியவர். சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை எனப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

பாடப் புத்தகத்தில் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்களைக் குறித்துப் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் விடுதலைக்காகப் போராடியப் பெருமகனார், நூறாண்டு காலம் நம்மோடு வாழ்கிறார் என்பது அரிதான, மகிழ்வான அனுபவமாகும்.

வாழும் வரலாறாகத் திகழும் தோழர் என். சங்கரய்யா பிறந்த நூற்றாண்டைக் கோவில்பட்டியில் அவர் பயின்ற பள்ளியும், மதுரையில் அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரியும் உரிய முறையில் கொண்டாட வேண்டும்.

வாழும் விடுதலைப் போராட்ட வீரர் நூற்றாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை; அத்தகைய வாய்ப்பு, தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைத் தக்க முறையில் பயன்படுத்தி, பெரும் மகிழ்ச்சியுடன், மக்களோடு இணைந்து அரசும் கொண்டாட வேண்டும். எளிமையின் சின்னமாக, நேர்மையின் எடுத்துக் காட்டாக, உழைப்பின் உருவமாக நம்மோடு வாழும் தோழர் என். சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகத் தமிழ் நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

முனைவர் பி. இரத்தினசபாபதி

தலைவர்
முனைவர் முருகையன் பக்கிரிசாமி

துணைத் தலைவர்

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
July 12, 2021

கல்வி வளர்ச்சி நாளில் தணியுமா குழந்தைகளின் கல்விப்பசி?

தேசிய புள்ளியியல் அலுவலகம் 2017-18 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குடிமக்களின் சமூக நுகர்வு குறித்த தேசிய மாதிரி ஆய்வு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 11.6%, நகர்ப்புறங்களில் 24.7% என ஆக மொத்தம் 18.1% வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.4%, நகர்ப்புறங்களில் 24.8% என மொத்தம் 19.6% வீடுகளில் மட்டுமே இணையதள வசதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 27% ஊரக மற்றும் நகர்ப்புற 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே முறையே கணினி, இணைய வசதிகளைப் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

இதுதவிர, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொரோனா காலத்தில் கடந்த ஏப்ரல் 2020 இல் ஆய்வு மேற்கொண்ட ஸ்மைல் பவுண்டேசன் இந்தியா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம், 56% மாணவர்களிடம் அறிதிறன் பேசி இல்லாத காரணத்தால் இணைய வழிக்கல்வி பெற முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கிகிறது. இந்த உண்மையை புரிந்து கொண்டு கடந்த ஆட்சியில் தொலைக்காட்சி வாயிலாகக் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி நிகழ்ச்சிகள் பல்வேறு திட்டமிடல்கள் மூலம் வழங்கப்பட்டு வருவது அறிந்ததே. இதற்கான காணொலி பாடத்திட்டம் உருவாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாநில, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்றவை கடும் முயற்சி மேற்கொண்டு பெருந்தொற்றுக் காலத்திலும் இருபால் ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. எளிமை, இனிமை, புதுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு.

எனினும், ஏழை, எளிய, விளிம்பு நிலையில் காணப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் இவை போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தத்தைத் தருகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக குடும்பத்துடன் விவசாய வேலைகள், கால்நடை மேய்த்தல், மீன்பிடித்தல், கட்டிட வேலைகள் முதலானவற்றிற்காக செல்வது இக்காலத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கற்றலில் சராசரி மற்றும் அதற்கு கீழேயுள்ள மாணவ மாணவியரிடையே இத்தகைய நோக்கும் போக்கும் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓரளவிற்கு சென்று சேருகின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார வல்லுநர் குழுவினரின் ஜூலை 10 அன்று கூட்டிய முதல் காணொலிக் கூட்டத்தில் மேனாள் RBI ஆளுநர் அவர்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு இருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக மாணவ சமுதாயம் உள்ளது. கல்வி கிடைக்காமல் குடும்ப வறுமையைப் போக்க மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாக உருவெடுக்க அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், இணையவழிக் கல்வி நடைமுறையில் மாணவச் சமூகத்தினரிடையே ஒருவித சமச்சீரற்ற நிலையைத் தோற்றுவித்ததன் காரணமாகவே, பல்வேறு விரும்பத்தகாத வேதனை மிகுந்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. தொலைக்காட்சி வழிக் கல்வி ஓரளவிற்கு அனைத்து வகை மாணவர்களுக்கும் உரியதாக உள்ளதை மறுப்பதற்கில்லை.

எனவே, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான அலைவரிசைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் அவற்றிற்குரிய இணையத்திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் தங்குதடையின்றி மாணவர்கள் தம் கற்றலை மேம்படுத்திக் கொள்ள கற்பித்தலுக்கான நேரத்தைப் போதிய வகையில் கட்டாயம் ஒதுக்கித் தர ஒன்றிய, மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டியது இன்றியமையாதது. எதிர்வரும் ஜூலை 15 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்நன்னாளை மேலும் மெருகேற்றும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வியைக் கசடற மட்டுமல்லாமல் தடையறக் கற்க தமிழ்நாடு அரசு இணைய வசதியுடன் கூடிய எளிய கைக்கணினியை வழங்கி உதவிடுதல் வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தொலைக்காட்சி வழிக் கல்வியை தக்க செய்தி வழியாகக் கற்கவும் கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்கு தத்தம் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் உரையாடல் துணைக்கொண்டு தீர்வு காணவும் வழியேற்படும். பள்ளிக்கல்வித்துறை பள்ளிப் பிள்ளைகளின் கல்விப் பசியைப் போக்குமா?

முனைவர் மணி கணேசன்

Wednesday, June 16, 2021

June 16, 2021

அனைத்து மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் UGCன் புதிய அறிவுறுத்தல்

வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் வீட்டிலிருந்தபடியே, யோகா பயிற்சி செய்ய யு.ஜி.சி. அமைப்பு அறிவுறுத்தல்!

Friday, April 23, 2021

April 23, 2021

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனுக்காக அமேசான் கிண்டிலில் ஆடியோ புத்தகங்கள் இலவசம் - அமேசான் அறிவிப்பு.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனுக்காக ஆடியோ புத்தகங்கள் இலவசம் என அமேசான் அறிவிப்பு.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு அமேசான் கிண்டிலில் இலவச புத்தகங்கள் உட்பட பல்வேறு சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தக வாசிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆன்லைன் புத்தக வாசிப்பு தளமான அமேசான் கிண்டிலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி உலகின் பல்வேறு மொழிகளை சேர்ந்த குறிப்பிட்ட 10 புத்தகங்களை சந்தாதாரர்கள் இல்லாத அனைவரும் ஆங்கில வடிவில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்துங்கள் : தமிழக அரசு
மேலும் புதிதாக இணையக்கூடியவர்களுக்கும், வாடிக்கையாளர்கள் 2 மாதத்திற்கான சந்தாவை 229 ரூபாய் என்ற சலுகை விலையிலும் அமேசான் ஆடுரல் தளத்தில் ஆடியோ புத்தகங்களாக இலவசமாக பயன்படுத்த 30 நாள் டிரைலரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - 50% ஊழியர்களை பயன்படுத்த வலியுறுத்தல்!
மேலும் பிரைம் வாடிக்கையாளர்கள் 2 மாதத்திற்கான கிண்டில் அன்-லிமிடெட் சந்தாவை 80 சதவீத சலுகையான 99 ரூபாயில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இலவசமாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆடியோ புத்தகங்களுக்கான 3 மாத டிரைலும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் ஏப்ரல் 25ம் தேதி நண்பகல் 12.29 மணிக்கு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 08, 2021

March 08, 2021

பெண்மையின் உண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினம் வந்த வரலாறு

தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் , ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான் நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர்.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
பெண்கள் என்றால், வீட்டு வேலை செய்வது, அதிக பட்சமாக ஆசிரியர், செவிலியர் பணிக்குத் தான் என்ற எழுதப்படாத சட்டம் மாறிவிட்டது.விமான பைலட், ரயில் இன்ஜின் டிரைவர், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது என, பெண்கள் தனித்துவமாக விளங்குகின்றனர். நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெண்கள் போராட்டம் ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட, உலக மகளிர் தினம், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து, பெண்கள் உரிமையை வென்றெடுத்த நாள் என, கருதப்படுகிறது. அந்த உரிமை யை வலியுறுத்துவதற்காகவே, ஆண்டுதோறும் மார்ச், 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில், 18ம் நுாற்றாண்டில் தொழிற்சாலை, அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். வீட்டு வேலை செய்வதற்காக, பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தனர்.அந்த காலக்கட்டங்களில் பெரும்பாலான பெண்களுக்கு, ஆரம்ப கல்விக் கூட கற்க அனுமதி அளிக்கப்படவில்லை.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
இந்நிலையில், கடந்த, 1856ம் ஆண்டு, நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலை நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய, முதன் முதலில் வாய்ப்பு தரப்பட்டது.அதன் வாயிலாக, பெண்களாலும் தொழிற்சாலைகளில் பணிபுரிய முடியும் என்பது, உலகிற்கு உணர்த்தப்பட்டது. ஆனால், ஆண்களுக்கு நிகராக பணி வாய்ப்பு வழங்கப்பட்டாலும், ஊதியம் அளிப்பதில் அநீதி இழைக்கப் பட்டது. இதனால், வருத்தமடைந்த பெண்கள் இணைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, குரல் கொடுத்தனர். அதை அமெரிக்க அரசு கண்டு கொள்ளாமல் விட்டது. இதில், கொதிப்படைந்த பெண்கள், 1857, மார்ச் 8ல், இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை, அரசின் ஆதரவுடன், தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒடுக்கினர். உலக மகளிர் தினம் அதன் பின், 1907ம் ஆண்டு, சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் மீண்டும் போராடத் துவங்கினர். அதன் தொடர்ச்சியாக, 1919ம் ஆண்டு, டென்மார்க்கில், பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்பட்டது.இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த, பெண்களின் அமைப்பினர் பங்கேற்றனர். அதே மாநாட்டில் கலந்து கொண்ட, ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, பெண்கள் முதன் முதலில் போராடிய, மார்ச் 8ம் தேதியை, மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என, வலியுறுத்தினார்.
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
மாநாட்டில் அந்த தீர்மானம், சில காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், 1920ம் ஆண்டு, சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில், பெண்கள் உரிமை கோரி மீண்டும் போராட்டம் நடத்தினர்.அதில், பங்கேற்ற ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ஐ, உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என, பிரகடனம் செய்தார்.இதையடுத்து, 1921ம் ஆண்டு முதல், மார்ச் 8ல், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின், 1975ம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினத்தை, ஐ.நா.,வும் பிரகடனப்படுத்தியது.இன்று மகளிர் தினம், உலகில் குடும்ப பந்தம், பாசம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை உள்ளிட்ட, சகலத்திற்கும்ஆதாரமாக விளங்கும் பெண்களை, மதிப்போம், போற்றுவோம், வணங்குவோம். மகளிர் தினத்தில் என்ன பரிசு கொடுக்கலாம்? பெண்கள், நாட்டின் கண்கள் என்பது போல, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும், அந்த வீட்டின் மகாராணி தான். எனவே, வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது சகோதரிக்கு, மகளிர் தினத்தன்று, ஏதாவது பரிசுகளை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தி கவுரவிக்கலாம்.கொடுக்கும் பரிசு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. ஆனால், இந்நாளை மறக்காமல் மனதில் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளைக் கொடுக்க வேண்டும்.அது, அவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அன்பையும் அதிகரிக்கும்.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
இப்போது எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம் என்று பார்ப்போம். * சாதாரணமாக ஏதாவது ஒரு சிறப்பு என்றால், கொடுக்கும் பரிசு தான் உடைகள். எனவே, இந்த தினத்திலும் சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை வாங்கிக் கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் * மகளிர் தினம் என்பதால், நிறைய வண்ணமயமான நிறத்திலும், டிசைனிலும் வாழ்த்து அட்டைகள், மார்க்கெட்டில் வெளிவந்துள்ளன. அதில், அவர்களை பற்றி, உங்கள் மனதில் இருப்பதை எழுதிக் கொடுக்கலாம் *பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இந்த மகளிர் தினத்தன்று, அவர்களுக்கு பூங்கொத்துக்களையோ அல்லது பூச்செடிகளையோ வாங்கிக் கொடுக்கலாம். 'அட்லீஸ்ட்' ஒரு முழு பூவாவது வாங்கிக் கொடுக்கலாம் * உங்கள் வசதிக்கு ஏற்ப பெண்களுக்கு பிடித்த, மேக்கப் செட், அணிகலன்களை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்° அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், மூதாட்டிகளுக்கு சிறு பரிசு, இனிப்பு வழங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். இதுவே அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
* அவர்களது போட்டோவை, சற்று வித்தியாசமாக, பிரேம் செய்தோ அல்லது கப்-பில், போட்டோ இருப்பது போன்றோ செய்து கொடுக்கலாம் * மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்றால், இன்று ஒருநாள் சமையல் அறையில் இருந்து, அவர்களுக்கு விடுப்பு கொடுங்கள். உங்களுக்கு தெரிந்ததை செய்து கொடுங்கள். அதைவிட அவர்களுக்கு பெரிய சந்தோஷம் இருக்காது.

Thursday, February 25, 2021

February 25, 2021

பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு!

" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.
1-1-2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு! CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Saturday, January 23, 2021

January 23, 2021

NATIONAL VOTERS DAY 2021 - CELEBRATE ON 25.1.2021 - VOTERS DAY PLEDGE

VOTERS' PLEDGE
Wc, the citizens of India, having abiding faith in democracy, hcrcby pledge to uphold the democratic traditions of our country and the dignity of free, fair and peaceful clections, and to vote in every clection fcarlessly und without being influenccd by considerations of rcligion, race, caste, community, language or any inducement.
வாக்காளர் உறுதிமொழி
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.

Wednesday, January 13, 2021

January 13, 2021

பொங்கலுக்கு ‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது?

பொங்கலுக்கு ‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது? எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
பொங்கல் பானை என்பது ஒரு சிலர் புதிதாக வாங்குவது வழக்கம். பொங்கலுக்கு மண்பானை, வெண்கலம் அல்லது பித்தளை பானை வாங்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாய முறையாகும். இப்போது இருக்கும் நவீன யுகத்தில் பொங்கல் செய்வதற்கு எவர்சில்வர் பாத்திரத்தையும், ஒரு சிலர் குக்கரை கூட உபயோகிக்கிறார்கள். இது மிகவும் தவறான செயலாகும். இப்படி நீங்கள் பொங்கலை கொண்டாடுவதற்கு, கொண்டாடாமல் இருக்கலாம். புதுப்பானையில் பொங்கல் வைப்பது தான் தமிழருடைய பாரம்பரிய சாராம்சமாகும். புதிதாக பொங்கல் வைக்க நினைப்பவர்கள் கட்டாயம் மண்பானையை வாங்குவது நல்லது. அப்படி வாங்கும் பொழுது நிறைய விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். மண்பானை இல்லாவிட்டாலும், பொங்கலை புதுப்பானையில் எப்படி வைக்கலாம்? இதைப் பற்றிய விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். தைத்திரு பொங்கல் நாளன்று புதிதாக மண் பானை வாங்க நினைப்பவர்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பானையின் அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பானையில் விரிசல்கள் இல்லாமல் இருக்கிறதா? என்பதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பானை கனமாகவும் இருக்க வேண்டும். புது பானையை வாங்கும் பொழுது தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். நன்கு சுட்ட மண் தட்டினால் பலமாக ஓசை வரும். அப்படியான பானையைப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். மண்பானை செய்பவர்கள் உள்ளேயும், வெளியேயும் பானை பலமாக மாற மேற்ப்படியில் மண்ணைப் பூசி வைத்திருப்பார்கள். நீங்கள் புது பானை வாங்கி பொங்கல் செய்யும் பொழுது மண்பானையை முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதில் பூசப்பட்டிருக்கும் மேலே உள்ள மண் கலவைகள் நீங்கி வரும். இல்லை என்றால் பொங்கலில் மண் கலந்து விடும். மண்பானையை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து உள்ளேயும், வெளியேயும் தேங்காய் நார் அல்லது நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் நாரை உபயோகித்து நன்கு தேய்த்துவிட வேண்டும். இப்படி செய்யும் பொழுது மண் ஒட்டி இருந்தாலும் தனியாக வெளியில் வந்துவிடும். பொங்கலுக்கு முந்தைய நாளே பானையை வாங்கி இப்படி கழுவி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மண்பானை வாங்க முடியாதவர்கள் பித்தளை அல்லது செம்பு பானையை உபயோகித்து பொங்கலை வைக்கலாம். இவையும் இல்லாதவர்கள் எவர்சில்வர் பாத்திரத்தை புதிதாக வாங்கி வைக்கலாம். பொங்கல் செய்யும் பொழுது எச்சில் படாத பானையாக இருப்பது நலமாகும். நம் வாழ்வு காக்க சூரியனுக்கு படைக்கப்படும் இந்த பொங்கல் பானை மிகவும் விசேஷமானது. இதனை புதிதாக எச்சில் படாத பானையாக வாங்கி வைப்பது தான் மிகவும் நல்லது. புதுப்பானையில் மஞ்சள், குங்குமம் இட்டு அல்லது விபூதி பூசி பூமியில் விளைந்த மஞ்சள் கொத்து பானையின் கழுத்தில் கட்டி விட வேண்டும். பானைக்கு அடியில் கரி பிடிக்காமல் இருக்க மண்ணை நீரில் குழைத்து அடியில் தடவி விடுவார்கள். இதனால் நீங்கள் பானையை தேய்க்கும் பொழுது சுலபமாக இருக்கும். கேஸ் அடுப்பில் பொங்கல் செய்ய நினைப்பவர்கள் முந்தைய நாளே அடுப்பை சுத்தம் செய்து அடுப்படியில் கோலம் போட்டு, கேஸ் அடுப்பிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பொங்கல் அன்று பொங்கல் பானையில் இருந்து தண்ணீர் நுரைத்து வழிந்து கீழே ஊற்ற வேண்டும். அப்போது தான் பொங்கல் பூஜை நிறைவுபெறும். அடுப்பை சுத்தம் செய்ய வேண்டுமே! என்று சோம்பல்பட்டு பொங்கலை கிளறி விட்டு விடாதீர்கள். பொங்கல் பானை பொங்கி வழியும் போது தான், நம்முடைய வாழ்வும் பொங்கி நிறையும் என்பது ஐதீகம். வாழ்க்கையில் அனைத்து வளங்களும், நலங்களும் பெற புதுப்பானையில் பொங்கல் வைத்து, பொங்கலை வழியவிட்டு பொங்கலோ பொங்கல் என்று சூரிய பகவானை நோக்கி மும்முறை குலவையிட்டு பூஜையை நிறைவு செய்தால் நம் மனதும் நிறையும், வாழ்வும் நிறையும் என்பதைக் கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.
January 13, 2021

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

The best time to celebrate Pongal!
பண்டிகைகள் அனைத்துமே குதுகலத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் ஏற்பட்டவையே. மேலும் நன்றி சொல்லும் விதமாகவும் பண்டிகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உழவுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உள்ளதுதான் பொங்கல் திருநாள். தை மாதத்தின் பிறப்புதான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
குடும்பமும் உறவுமாகச் சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. இதனை சூரியப் பொங்கல் என்றும் சொல்லுவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். புதிதாக மண்பானை வாங்குவதும் அதில் பொங்கல் வைப்பதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.வீட்டில் சமையலறையில், கியாஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது என்றாலும் பெரும்பாலான வீடுகளில், வாசலில் அடுப்பிட்டு பொங்கல் வைக்கிற வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. அரிசியும் வெல்லமும் இட்டு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு அதைப் படைத்துவிட்டு, பொங்கும் தருணத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கோஷங்கள் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் மக்கள். இயற்கையான சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை, மறுநாள் கால்நடைகளைக் கொண்டாடி வணங்கிப் போற்றும்விதமாக மாட்டுப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னர், சொந்தபந்தங்களுடனும் உறவுகளுடனும் இணைந்து வம்சம் செழிக்கவும் தலைமுறை செழித்தோங்கவும் காணும் பொங்கல் எனும் வைபவமும் நடைபெறும். இப்படி, உணர்வுடன் கலந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். வருகின்ற 14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் திருநாள். அன்றைய நாளில், பொங்கல் வைக்கும் நேரமாக, உகந்த நேரமாக, சிறப்புக்கு உரிய நேரமாக... ஆச்சார்யர்கள் நல்லநேரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
பொங்கல் வைக்க உகந்த நேரம் :
காலை :- 11.00 - 12.00
அல்லது
காலை :- 08.09 - 09.00.

அதாவது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வழிபடலாம். அதற்கு முன்னதாகவே பொங்கல் வைத்து பூஜிக்க நினைப்பவர்கள், காலை 8.09 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இயற்கையை வழிபடுவோம். சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியப் படையலிடுவோம். பொங்கல் படையலிட்டு, ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம்!
The best time to celebrate Pongal!

Total Pageviews

Search This Blog