Breaking

Showing posts with label NEET coaching. Show all posts
Showing posts with label NEET coaching. Show all posts

Wednesday, August 02, 2023

August 02, 2023

பள்ளி நேரங்களில் கோச்சிங் சென்டர்கள் இயங்க தடை

பள்ளி நேரங்களில் கோச்சிங் சென்டர்கள் இயங்க தடை

நீட், JEE போன்ற நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க பீகார் மாநில அரசு தடை விதித்துள்ளது!

பள்ளிகளுக்கு செல்லாமல் 9 - 12 வகுப்பு மாணவர்கள், கோச்சிங் சென்டர்கள் செல்வதால் வருகைப்பதிவு பெருமளவில் குறைந்ததை தொடர்ந்து நடவடிக்கை

Thursday, April 06, 2023

April 06, 2023

நீட் பயிற்சி மாணவி தற்கொலை... ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்தார்

நீட் பயிற்சி மாணவி தற்கொலை... ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்தார்

ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடலூர்: வடலூர் ரெயில் நிலையம் அருகே இன்று தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான நிஷா என்ற பெண், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று மாலை பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரெயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீட் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

Wednesday, January 18, 2023

January 18, 2023

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசின் வேட்புமனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது

Friday, September 16, 2022

September 16, 2022

NEET coaching classes for government school students - அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை NEET coaching classes for government school students from next month!

Chief Minister M.K. NEET coaching classes for government school students from next month. Stalin started it. The action has been taken when the pass rate of government school students in the NEET examination has fallen sharply.

It has been said that the NEET training which usually starts in December is going to start earlier this year. Officials of the school education department have said that improved NEET training will be provided to increase the pass rate.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கயுள்ளார். நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog