Breaking

Showing posts with label PAN card. Show all posts
Showing posts with label PAN card. Show all posts

Wednesday, November 08, 2023

November 08, 2023

பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.



பான் கார்ட் தொலைந்துவிட்டதா? - 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்க முடியும்.

உங்கள் பான் கார்டு சேதமானால் அல்லது தொலைந்துவிட்டால் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றி பான் கார்டை வீட்டிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம்.

இதற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான அப்பிளிக்கேஷன் ப்ராசஸும் எளிமையானது தான்.

இப்படி தொலையும் போது புதிய பான் கார்டு அச்சிட பல நேரங்களில் நாம் உள்ளூர் கடைக்கு செல்லும்போது, அதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள்.

ஆனால் ஆன்லைனில் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே புதிய ஒரிஜினல் பான் கார்டைப் பெறலாம். பான் கார்டை மீண்டும் அச்சிடுவதற்கான எளிதான செயல்முறை:

முதலில் நீங்கள் NSDL (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்)

https://nsdl.co.in/அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்

அதில் இப்போது Reprint Pan Card என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

உள்ளே நீங்கள் உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் காண்பீர்கள்.

அவற்றை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.

இதில் பான் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்துகொள்ளலாம்.

அதன் பின்னர் உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு OTP கோரிக்கை வரும். அதை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

OTP ஐ உள்ளிட்டு Validate என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் கட்டணத்திற்கான பக்கம் திறக்கும்.

அதில் உங்கள் விருப்பமான கட்டண வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

கார்ட், UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

பணம் செலுத்திய பின்னரே விண்ணப்பம் வெற்றிபெற்றதாக செய்தி மற்றும் மெயில் வரும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரிஜினல் பான் கார்ட் உங்கள் வீடுவந்து சேரும்.
November 08, 2023

How much gold can be bought without PAN card? - பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?

Moreover, in case you are buying gold from a jeweller for a value over two lakh rupees whether through cash or otherwise, you have to provide the seller with your identity like a PAN card or Aadhaar Card. So you can buy gold upto Rs. 2 lakhs without having to furnish either PAN or Aadhaar number.

பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?

தங்கத்தை வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் நம் நாட்டில் உள்ளன.

அந்த விதிகளை மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் மற்றும் வரி அதிகாரியின் கவனத்திற்கு வரலாம்.

அதனால் தங்கம் வாங்கும்போது இந்த விதிகளைத் தெரிந்து அதற்கு ஏற்றபடி பர்சேஸ் செய்வது நல்லது.

ஏதேனும் ஆவணம் தேவையா?

நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் வாங்கினால், பான் எண்ணைக் காட்ட வேண்டும். வருமான வரி விதிகளின் 114பி பிரிவின் கீழ் நாட்டில் இந்த விதி உள்ளது. ஜனவரி 1, 2016க்கு முன், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் எண்ணைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. எவ்வளவு தங்கத்தை பணமாக வாங்கலாம்?

இதனுடன், ரொக்கமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், அதை கார்டு மூலமாகவோ அல்லது பான் கார்டுடன் ஆவணங்கள் சமர்ப்பித்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.

மேலும் பண பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST உள்ளது.

இதன்படி, ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே அடிப்படையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகச் செலுத்தி தங்கம் வாங்கினால், நீங்கள் விதிகளை நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.

ஆவணங்கள் மறந்தால் விதிமீறல் ஆகும்.

மேலும் இதற்கு ஒரு அபராதமும் உள்ளது, இது பணத்தை எடுக்கும் நபருக்கு விதிக்கப்படுகிறது.


யார் எவ்வளவு தங்கத்தை சேமிக்க முடியும்?

-திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.

- திருமணமாகாத ஒரு பெண் தன்னிடம் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.

- ஆடவர்கள் தன்னுடன் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும்.

Total Pageviews

Search This Blog