Breaking

Showing posts with label All Employment News. Show all posts
Showing posts with label All Employment News. Show all posts

Friday, February 27, 2026

Wednesday, August 02, 2023

August 02, 2023

Today Education & Employment News - 02.08.2023 - PDF



இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள்

Today Education & Employment News - 02.08.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, April 19, 2023

April 19, 2023

தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா்

தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா் Tamilnadu SC, ST backward vacancies to be filled soon - Minister

தமிழ்நாடுஎஸ்சி., எஸ்டி., பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு ரூ.4,281.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3,512.85 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பின்னடைவு காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ‘மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், ரூ.930 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதனால், அந்தத் தொகை வரவு செலவு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்கள் தொடா்பாக தலைமைச் செயலாளா் தலைமையில் கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் எந்தெந்த மயானங்களுக்கு பாதைகள் தேவைப்படுகின்றன என்பன குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.

Wednesday, March 15, 2023

March 15, 2023

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 18.03.23

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 18ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இந்த முகாம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Friday, January 20, 2023

January 20, 2023

நாளை சனிக்கிழமை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்! District level employment camp tomorrow Saturday!

District level employment camp tomorrow Saturday!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக , நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாயற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண், திருநர்கள்) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நல்லம்பள்ளி ஒன்றியம் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ , பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண், பெண், திருநர்கள்/ திருநங்கைகள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Thursday, January 19, 2023

January 19, 2023

மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin

மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin

வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள். ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Wednesday, January 18, 2023

January 18, 2023

இந்திய வன ஆராய்ச்சி மையத்தில் 72 பணி இடங்கள் - 72 job vacancies in Indian Forest Research Centre

இந்திய வன ஆராய்ச்சி மையத்தில் 72 பணி இடங்கள்

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் உத்தரகாண்ட், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் உள்ளிட்ட 72 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Technician (Field/ Lab Research): 23 இடங்கள் (பொது-10, எஸ்சி-2, எஸ்டி-2, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-7). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ்2 தேர்ச்சி.

2. Technician (Maintenance): 6 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது வரம்பு: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Information Technology/Electronics Mechanic/ Pump operator cum Mechanic. இதில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி.

3. Technical Assistant (Para Medical): 7 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது வரம்பு: 21 லிருந்து 30க்குள். தகுதி: Nursing/Pharmacist/Physiotherapist/Lab Technician/Radiographer ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. 4. Lower Division Clerk: 5 இடங்கள் (பொது-3, எஸ்டி-1, ஓபிசி-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்கக வேண்டும்.

5. Forest Guard: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ்2 தேர்ச்சி.

6. Stenographer (Grade II): 1 இடம் (பொது). வயது; 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Computer Application ல் சான்று பெற்றிருப்பதோடு டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

7. Store Keeper: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ்2 தேர்ச்சி.

8. Driver (Ordinary Grade): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகனத்துக்குரிய டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 9. Multi Tasking Staff: 22 இடங்கள் (பொது-10, எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

உடற்தகுதி: ஆண்கள்- 165 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீயும் இருக்க வேண்டும். மேலும் 4 மணி நேரத்தில் 25 கி.மீ., தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும்.

பெண்கள்- 150 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 74 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 79 செ.மீயும் இருக்க வேண்டும். மேலும் 4 மணி நேரத்தில் 14 கி.மீ., தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். கட்டணம்: பொது/ ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,500/-, எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேணடும். https://fri.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2023.

Monday, January 16, 2023

January 16, 2023

இஸ்ரோவில் உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணி!

இஸ்ரோவில் உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணி!

இஸ்ரோவில் உள்ள 526 உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

அறிவிப்பு எண்.ISRO:ICRB:02(A-JPA) 2022

நிறுவனம்: Indian Space Research Organization

மொத்த காலியிடங்கள்: 526

பணி: Assistant

பணி: Junior Personal Assistants (JPA)

பணி: Upper Division Clerks (UDC)

பணி: Stenographers

வயதுவரம்பு: 9.1.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in/

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, January 14, 2023

January 14, 2023

HCL நிறுவனத்தில் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2023

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எச்சிஎல் நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். HCL/KCC/HR/Rectt/22/01

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Mining Mate
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.18,480 - 45,400

பணி: Blaster
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.18.180 - 37,310

பணி: WED 'B'
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.18.180 - 37,310

பணி: WED 'C' 
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.18.080 - 35,960

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைககள் வழங்கப்படும். 

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2023

Monday, January 02, 2023

January 02, 2023

தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.1.2023

தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகம், குரோம்பேட்டையில் தற்காலிக அடிப்படையில் கணினி தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரல்லாத பணியான தொழில்முறை உதவியாளர்-I (கணினி தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.821 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.022-2022/MIT/Non-Teaching. தேதி: 29.12.2022

பணி மற்றும் இதர விவரங்கள்: நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்


பணி: Professional Assistant-I(Computer Technology)

காலியிடங்கள்: 6

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நாள் சம்பளம் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் அதிகயளவில் வரப்பெற்றால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai 600044

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.1.2023

Friday, December 30, 2022

December 30, 2022

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages ) - PDF

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages )
202-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....

இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் - 30-12-2022

Today Education And Employment News ( 30.12.2022 -

CLICK HERE TO DOWNLOAD

Thursday, December 29, 2022

December 29, 2022

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளா்கள் ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவிப்பு

போட்டித்தோ்வு பயிற்சியாளா்கள் ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோா் ஜன.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி.என்.பி.எஸ்சி., டி.என்.யூ.எஸ்.ஆா்.பி., எஸ்.எஸ்.சி., ஆா்.ஆா்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.ஆா்.பி. போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயிற்சி பெறுகின்றனா். இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள, முன்அனுபவமுள்ள ஆசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள், போட்டித்தோ்வில் வெற்றி பெற்றவா்கள் https.//bicly/facutvregistrationform என்ற கூகுள் இணைப்பில் விண்ணப்பத்தை ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044-22501006, 22501002 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

Saturday, December 24, 2022

December 24, 2022

ரூ.1,12,800 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.12.2022

ரூ.1,12,800 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 87 பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.10730/HR1/2022

பணி: Coach

மொத்த காலியிடங்கள்: 87

விளையாட்டுப் பிரிவவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Archery - 1
2. Athletics (Sprints) - 8
3. Athletics (Jumps) - 7
4. Athletics (Throws) - 5
5. Para Athletics (reserved for orthopaedically challenged) - 3
6. Boxing - 3
7. Basketball - 7
8. Cricket - 1
9. Cycling - 1
10. Fencing - 3
11. Football - 5
12. Gymnastics - 2
13. Handball - 3
14. Hockey - 7
15. Judo - 2
16. Kabaddi - 4
17. Kho-Kho - 2
18. Swimming (Diving) - 2
19. Swimming - 4
20. Squash - 1
21. Taekwondo - 2
22. Tennis / Soft Tennis - 2
23. Volleyball - 7
24. Weightlifting - 3
25. Wrestling - 1
26. Wushu - 1

சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 21 முதல் 37க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 42 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 47க்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் ஏதாவதொன்றில் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதி, பயிற்சியாளர் பணி அனுபவம், பத்தாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரையிலான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.12.2022

Wednesday, October 26, 2022

October 26, 2022

28.10.2022 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Press Release No : 1868 ] From the Director of Employment and Training - On Private Job Fair on 28th October 2022

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர். வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள . ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tuesday, October 04, 2022

October 04, 2022

சுமார் 5 லட்சம் காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? - About 5 Lakh Vacancies... How to Apply?


சுமார் 5 லட்சம் காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? - About 5 Lakh Vacancies... How to Apply?

தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள வேலை தேடுவோர் தேசிய வேலைவாய்ப்பு இணையதள இணையதள பக்கத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

இந்த இணையதளத்தில் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்துவதற்கான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 

முழுமையான விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog