Breaking

Showing posts with label உதவித்தொகை. Show all posts
Showing posts with label உதவித்தொகை. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 - ரூ.698 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

மாணவிகளுக்கு ₨1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்.

- ₨ 698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு. - அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை

அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இதன்படி மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று கடந்த ஜூன் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரும் மாதமும் 7-ம் தேதி ரூ.1000 செலுத்தப்படும் என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

Tuesday, August 02, 2022

August 02, 2022

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இத் தொகையை பெறுவதற்கு மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு செப். 30 ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக். 31 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களது கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பிறகே விண்ணப்பங்களை சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

Sunday, July 31, 2022

July 31, 2022

கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை கல்வி உதவித்தொகை அறிவிப்பு

சென்னை:'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகை பெற, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகங்களை கொண்ட, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவாக துவக்கப்பட்ட, 'கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை' சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2022 - -23-ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.அதனால், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨, கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்கள், இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசியாக எழுதிய தேர்வில், 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள்; 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவத்தை, www.kalkionline.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மாணவர் தன் கைப்பட பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 'கீதம், முதல் மாடி, 14, நாலாவது பிரதான சாலை, கஸ்துாரிபாய் நகர், அடையாறு, சென்னை- 600 020' என்ற முகவரிக்கு, செப்டம்பர் 10-ம் தேதிக்குள், தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 28, 2022

July 28, 2022

2022ல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - வித்யாதன் உதவித்தொகை விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - PDF

Sunday, July 24, 2022

July 24, 2022

செவெனிங் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2

செவெனிங் உதவித்தொகை வெளிநாட்டு, காமன்வெல்த், வளர்ச்சி அலுவலகம் மற்றும் இதர அமைப்புகளின் நிதி உதவியுடன், யு.கே., அரசு வழங்கும் இந்த சர்வதேச உதவித்தொகை திட்டத்தில் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்: யு.கே., கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதியற்ற படிப்புகள்: பகுதிநேர படிப்பு, தொலைநிலைக் கல்வி, 9 மாதங்களுக்கு குறைவான கால அளவு கொண்ட படிப்புகள், 12 மாதங்களுக்கு அதிகமான கால அளவு கொண்ட படிப்புகள், பிஎச்.டி., டி.பில், ஆகிய படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

சலுகைகள்: கல்விக்கட்டணம், மாத உதவித்தொகை, யு.கே., சென்று வருவதற்கான விமானக் கட்டணம், விசா கட்டணம், தங்குமிட செலவு, செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்.

தகுதிகள்:

* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* யு.கே.,வில் படித்து பட்டம்பெற்ற பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.

* யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்ப்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.

* உரிய ஆங்கில மொழிப் புலமையையும் பெற்றிருக்க வேண்டும். பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்: பிர்க்பெக் லண்டன், பவுர்ன்மவுத், புரெனெல் பல்கலைக்கழகம் லண்டன், கிரான்பீல்ட், லங்காஸ்டர், எல்.எஸ்.இ., நியுகேசில், நாட்டிங்காம் டிரென்ட், குயின்மேரி லண்டன் பல்கலைக்கழகம், ரோபர்ட் கார்டன், கேம்ப்ரிட்ஜ், லீட்ஸ், கெண்ட், யார்க் டிரினிட்டி கல்லூரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2

விபரங்களுக்கு: www.chevening.org/scholarship/india

Total Pageviews

Search This Blog