Breaking

Showing posts with label Bonus. Show all posts
Showing posts with label Bonus. Show all posts

Friday, January 03, 2025

Thursday, January 02, 2025

Saturday, January 20, 2024

January 20, 2024

போனஸ் என்றால் என்ன What is a bonus?



போனஸ் என்றால் என்ன ?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு, வாரச் சம்பளம் முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!(வருடத்துக்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாதச் சம்பளம் முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் எனக்கு கணக்கிட்டு, மாதச் சம்பளமாக கொடுத்தனர்...!(12*4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்துக்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்துக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

Monday, January 08, 2024

January 08, 2024

பொங்கல் போனஸ் அரசாணைகள் வெளியீடு

பொங்கல் போனஸ் அரசாணைகள் வெளியீடு

பொங்கல் பண்டிகை, 2024 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

#தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் & பணியாளர்களுக்கு

G.O-7- Click here- pdf #ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு

G.O-8 Tamil version- Click here-Pdf

G.O-8 English version- Click here-Pdf

Wednesday, October 25, 2023

October 25, 2023

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு



தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% (42%ல் இருந்து 46%ஆக ) உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை கணக்கிட்டு வழங்கப்படும்.

இதனால், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.*

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 42% அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள்.

அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ₨2,546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் செய்தி வெளியீடு எண்: 2130

நாள் : 25.10.2023

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

இதன்படி, தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, கடந்த ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்  கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Friday, January 13, 2023

January 13, 2023

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள் உரிய காலத்தில் சம்பளம், பொங்கல் போனஸ் எடுக்க முடியாத வகையில் IFHRMS வெப்சைட் முடங்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) வெப்சைடில் பில்களை ஏற்றி கருவூலகம் வழியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களை காட்டிலும், ஆசிரியர்கள் வெப்சைட் உடன் போராட வேண்டியுள்ளது.தற்போது பொங்கல் போனஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர். போனஸ் பெறுவதற்காக இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சில நாட்களாக இந்த வெப்சைட் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம், போனஸ் பெற முடியாமல் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியது:தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) சாப்ட்வேர் தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு தனியார் நிறுவனம் வசம் தரப்பட்டது. அந்நிறுவனமும் சம்பள பில் தயாரிக்கும் ஊழியர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெப்சைட்டில் சிக்கல் ஏற்பட்டால், சென்னையில் தான் கேட்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக 4 மாதமாக சம்பளம் பெற முடியாத நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் உள்ளனர். அரசு இத்திட்டத்தை அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Wednesday, December 28, 2022

December 28, 2022

தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் அறிவிப்பும், அகவிலைப்படி உயர்வில் மவுனம் சாதிப்பதும் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக 1.7.2022 முதல் வழங்கக் கோரியும் நாளை (டிச.29) அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.

இந்தச் சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குப் பதில் முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுகிறது.

ரூ 7 ஆயிரத்துக்குப் பதிலாக 3 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சி மற்றும் டி பிரிவில் காலியிடங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ரூ.221.42 கோடி செலவு என்பது மிகைப்படுத்தப்பட்ட தொகை.

4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து நாளை நடக்க உள்ள போராட்டத்தில் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 27, 2022

December 27, 2022

அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியீடூ

அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து C மற்றும் D” பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2021-2022-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000/- பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

2.2021-2022-ஆம் கணக்காண்டிற்கு C மற்றும் D” பிரிவு சார்ந்த, முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

பொங்கல் மிகை ஊதியம் அரசாணை வெளியீடு

Click here to download Tamil version

Click here to download English version
December 27, 2022

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சி மற்றும் டி பிரிவைச் (C மற்றும் D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம்/பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். என்றும் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog