Breaking

Showing posts with label assistant professors. Show all posts
Showing posts with label assistant professors. Show all posts

Monday, March 25, 2024

Tuesday, December 26, 2023

December 26, 2023

உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2024

உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2024

உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை

திருவையாறு அரசர் கல்லூரியில் கீழ்வரும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன .

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கல்வித்தகுதி , வயது , சாது மற்றும் அனைத்து தகவல்களும் அடங்கிய விண்ணப்பத்தை ஏழு நகல்களில் தயார் செய்து , புகைப்படத்துடன் ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -05.01.2024- மாலை -5 மணி

Wednesday, December 13, 2023

December 13, 2023

உதவி பேராசிரியர் பணி பதிவு அவகாசம் அளிக்க கோரிக்கை

உதவி பேராசிரியர் பணி பதிவு அவகாசம் அளிக்க கோரிக்கை

அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர் பணி விண்ணப் பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர், உதவி நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில், 232 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம், 29ம் தேதி துவங்கியது. இன்று முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவின்போது, விண்ணப்பதாரின் மொபைல்போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., என்ற ஒரு முறை பதிவு எண் அனுப்பி, அதனை விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டும்.ஆனால், இரண்டு நாட்களாக இந்த பதிவு எண் கிடைக்காமல், விண்ணப்ப பதிவை மேற்கொள்ள முடியாமல், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை, அண்ணா பல்கலை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, November 18, 2023

November 18, 2023

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை!



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை! Dismissal of 56 assistant professors in Annamalai University: action due to lack of proper educational qualification!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பல்வேறு துறைகளில் தேவைக்கும் அதிகமாகபணி நியமனங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிர்வாகப் பிரச்சினையால் 2012-ல் பல்கலை.யில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, அதே ஆண்டுஇறுதியில், பல்கலை. தனி அலுவலராக அரசின் முதன்மைச்செயலராக இருந்த சிவதாஸ்மீனா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

அவர் அளித்த அறிக்கையின்படி, 2013-ல் தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா, பல்கலைக் கழகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட சிவதாஸ்மீனா, மற்றொரு அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார். அதில், பல்கலை.யில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பணி நிரவல் செய்தால், நிதிச் சிக்கல் தீரும் என்று தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். பின்னர், பல்கலை.யில் தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொண்ட போது, உரிய கல்வித்தகுதி இல்லாமல் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயர் கல்வித் துறைக்கு தகவல் தெரிவித்து, அதன் வழிகாட்டுதல்படி, மேலாண்மை (எம்பிஏ), பொருளாதாரம், வரலாறு, கணினி அறிவியல்ஆகிய துறைகளைச் சேர்ந்த56 உதவிப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு உத்தரவு அனுப்பியது.

இந்த 56 உதவிப் பேராசிரியர்களில் 38 பேர் பணி நிரவல்அடிப்படையில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். 18 உதவிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, August 28, 2023

August 28, 2023

அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணம் கலை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூடலூர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்கவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். சாதி பாகுபாடுகளை காட்டி மாணவர்களை தூண்டிவிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பேராசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Total Pageviews

Search This Blog