Breaking

Showing posts with label மாணவர் சேர்க்கை. Show all posts
Showing posts with label மாணவர் சேர்க்கை. Show all posts

Friday, July 29, 2022

July 29, 2022

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! இனிமேல் நோ ஸ்பெஷல் கிளாஸ்..

பள்ளிகளில் இனி நோ ஸ்பெஷல் கிளாஸ் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர ஆர்வத்தினை தூண்டவும் இந்த முயற்சி என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பள்ளிகளில் இனி நோ ஸ்பெஷல் கிளாஸ் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர ஆர்வத்தினை தூண்டவும் இந்த முயற்சி என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இனி பள்ளி நாட்களைத் தவிர பள்ளிக்கு மாணவர்களை வரச் சொல்லக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. சமீப நாட்களாக பள்ளிகளில் படிக்கும் குறிப்பாக மேல்நிலை வகுப்பு படிக்கும் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு காரணம் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்து கொடுக்கப்படும், கல்வி சார்ந்த அழுத்தங்கள் தான் காரணம் என பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் கல்வியிலாளர்கள் தெரிவித்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள், தற்கொலைக்கு முன்பாக குழந்தைகள் எழுதி வைக்கும் கடிதங்கள் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் விதமாக பள்ளிக்கல்வித் துறை தற்போது ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது. பள்ளி செயல்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் என பள்ளிக்கு வரவழைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி செயல்படும் நாட்களான, திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பள்ளிக்கு குழந்தைகளை வரவழைக்க வேண்டும். அது தவிர விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் பள்ளிக்கு குழந்தைகளை வரச் சொல்லக்கூடாது எனவும், அதேபோல், அரசு விடுமுறை நாட்ர்களிலும் பள்ளிக்கு வரச்சொல்லி குழந்தைகளுக்கு கல்வி என்றாலே மன அழுத்தம் நிறைந்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையின் அறிவுருத்தலின் பேரில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி நாட்களைத் தவிர, விடுமுறை நாட்களில் பள்ளிகள் செடல்படவில்லை. இதனை தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பள்ளுக்கு வரும் ஆர்வம் அதிகரிக்கும் எனவும், பள்ளிகளில் இருந்து கொடுக்கப்படும் கல்வி சார்ந்த அழுத்தங்கள் குறைந்து மாண்வர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பை, சமூக நல ஆர்வலர்கள் மற்றும் கல்வியிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
July 29, 2022

பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ளசுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில்நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (ஜூலை 29) காலஅவகாசம் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை இன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.58லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

(தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113

மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கால் அவகாசம் 05.08.2022 வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான கால் அவகாசம் 12.08.2022 அன்று 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்திடலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும்.

Saturday, July 23, 2022

July 23, 2022

பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு

பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பி.இ., கலைக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 27 ஆக நீடித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அம்மாணவர்களும், என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதையும் படிக்க | பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!

இந்நிலையில் நேற்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பி.இ., பிடெக்கின் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Thursday, July 21, 2022

July 21, 2022

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை (2022 2024) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29.07.2022

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை (2022 2024)

2022 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான ஈராண்டு கால முழுநேர முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (Post Graduate Diploma Courses) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பயிற்று மொழி : தமிழ் மற்றும் ஆங்கிலம்.

பயிலுதவித் தொகை : மாதந்தோறும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)

தேர்ந்தெடுக்கும் முறை: கீழ்க்காணும் பாடங்களில் இருந்து 100 பல்கொள்குறி வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், அண்மைக்கால தொல்லியல் அகழாய்வுகள் (தமிழ்நாடு (ம) இந்தியா), கல்வெட்டியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, நாணயவியல், அருங்காட்சியகவியல், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்.

எழுத்துத் தேர்வு நாள் : 07.08.2022 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.00 - மதியம் 01.00 எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை. விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறை வலைதளத்தின் மூலமாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் (www.tnarch.gov.in).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து

ஆணையர் (மு.கூ.பொ.), தொல்லியல் துறை,

தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர்,

சென்னை-600 008 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தொலைபேசி எண்: 044-2819 0023.

மின்னஞ்சல் முகவரி: tniam2224@gmail.com

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29.07.2022 மாலை 5.00 மணி வரை.

Total Pageviews

Search This Blog