PARTTIME TEACHERS
April 25, 2025
Showing posts with label PARTTIME TEACHERS. Show all posts

Friday, April 25, 2025
Wednesday, October 04, 2023
ssta
October 04, 2023
கோரிக்கையை ஏற்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்கள் பேச்சு

சென்னை: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் போராட்ட குழு அறிவித்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முடிவில் தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் கோரிக்கை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறி கல்வித்துறை அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறி பிடிவாதமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நேற்று அழைத்த, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அப்போது எங்களுக்கு ஆதரவு அளித்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கி பள்ளிகளில் கரும்பலகையை தூய்மை செய்வது, கழிவறையை தூய்மை செய்வது போன்ற பணிகளை கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நாங்கள் பணியில் சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
Wednesday, June 28, 2023
Thursday, February 02, 2023
PARTTIME TEACHERS
February 02, 2023
ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்
ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர் Demand of part-time teachers fulfilled by running train; Education Minister recommended to the Chief Minister
*பத்திரிக்கை செய்தி*
*ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்*
பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திக்கு மனு அனுப்பி இருந்தோம்.அதன் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்று அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்து வந்தோம்.
மீண்டும் அமைச்சர் அழைப்பின் பேரில் 1/2/2023 அன்று ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.பணிநிரந்தரம்,ஊதிய உயர்வு,மே மாத ஊதியம்,தற்செயல் விடுப்பு,கருனைத் தொகை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அதை கனிவுடன் கேட்ட கல்வி அமைச்சர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனக் கூறினார். இது தொடர்பாக நாங்கள் அமைச்சரை சந்தித்த அன்றே வேலூருக்கு இரயிலில் பயணம் செய்த மாண்புமிகு முதல்வரிடம் நேரில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.
அதன் விளைவாக முதல்வர் அறிவித்து இத்தனை நாட்களாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த எங்களது கோரிக்கைகளில் ஒன்றான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான தேதி நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.
மேலும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வு விரைவில் முழுமைபெறும் என்னும் நம்பிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் பழ.கௌதமன்,திருச்சி சேசுராஜா, சேலம் ராமகேசவன்,திருப்பூர் யசோதா,கோவை ராஜாதேவகாந்த் மற்றும் கடலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sunday, June 12, 2022
Wednesday, May 25, 2022
When Are Part-Time Teachers Permanent
May 25, 2022
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
1.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Break Fast எப்போது?
ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது
பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்
எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு
2.நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
3.கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு
வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது
காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம்
4.நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது
பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை.
5.10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு. அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்புகள்*
🎯 ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்
🎯 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்
🎯மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில

Sunday, January 23, 2022
PARTTIME TEACHERS
January 23, 2022
12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்
பணிநிரந்தரம்
-----------------------------
12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் ----------------------------------------
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கைபடி பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
2012-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.
உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினிஅறிவியல் இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் ஆகிய கல்விஇணைச் செயல்பாடுகளை மாணவர்களுக்கு கற்று தருகிறார்கள்.
ரூபாய் 5ஆயிரம் என்ற ஆரம்ப சம்பளம், தற்போது ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
அதே சமயம் 16ஆயிரத்து 549 பேரில், 12ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
10ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் போதும் இன்னும் நிரந்தரம் செய்யப்படாததால், இந்த குறைவான சம்பளத்தால் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள விதிமுறையை திருத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இல்லை என்றால் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :
மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசு நிகழ்ச்சிகளுக்காக கடலூர் விழுப்புரம் திருவாரூர் கிருஷ்ணகிரி சேலம் தருமபுரி மதுரை திருப்பூர் திருவள்ளூர் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வந்தபோது பணிநிரந்தரம் வேண்டி கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பள்ளிக்கல்வி வளாகத்தில் செப்டம்பர் 18ந்தேதி நடந்த கலந்தாலோசனை கூட்டத்திலும் பணிநிரந்தரம் வலியுறுத்தி உள்ளோம். மேலும் கடலூர் சேலம் மதுரை தஞ்சாவூர் திருச்சி திருவாரூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.
மக்களை தேடி முதல்வர் நிகழ்ச்சி நடந்த தஞ்சாவூர் தருமபுரி திருவாரூர் திருச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பணிநிரந்தரம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.
தபால் மற்றும் ஈமெயில் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி வலியுறுத்துகிறோம்.
சமூக வலைத்தளங்கள் ட்விட்டர் பேஸ்புக் மூலமும் பணிநிரந்தரம் கோரிக்கை அனுப்புகிறோம்.
இது தவிர 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு MLA ஈ.ஆர்.ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பெண்ணாகரம் MLA கோ.க.மணி ஆகியோர் பணிநிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளார்கள்.
2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சட்டசபையில் அதிமுக ஒரத்தநாடு MLA ரெ.வைத்திலிங்கம் பணிநிரந்தரம் குறித்து பேசினார்.
அப்போது பதில் தெரிவித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கைபடி செய்வோம் என்றார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி MLA தி.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை MLA மா.சின்னதுரை ஆகியோர்கள் பணிநிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளார்கள். பணிநிரந்தரம் செய்வோம் என மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் பேட்டியில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனை அரசாணையாக வெளியிட வேண்டுகிறோம். தற்போது 12ஆயிரம் பேருக்கும் மாதம் ரூபாய் 10ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு 13 கோடி ஆகிறது. இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் 20கோடி செலவிட நேரும். அரசு இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள் ஏழைகள் நிலை உயர மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம். --------------------------------------
சி. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

Saturday, December 04, 2021
Transfer
December 04, 2021
பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
பள்ளிக் கல்வித்துறையின் அணைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டல் கல்வி அலுவலபயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் அவகளுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2202 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள் பள்ளிக்கல்வி
* Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் ' உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரிடர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுளது. விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை TRB மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்பட்டு ஜீன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.
CEO's Meeting Instructions - Download here...

Sunday, November 14, 2021
Friday, November 12, 2021
PARTTIME TEACHERS
November 12, 2021
‘பகுதிநேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள்'
தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், மாணவர்களின் பயத்தைப் போக்க அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுக்கு பதிலாக ஜனவரி, மார்ச் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படும்.
பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்” என்று கூறினார்.
இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், “சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல வழிகளில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்டது. அவர்கள் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பில் இருக்கிறது. எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி, நிரந்தரம் செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 28, 2021
PARTTIME TEACHERS
August 28, 2021
நம்பினோமே... இனி எங்கள் கதி? ; பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கவலை
பணி நிரந்தரம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதி நேரமாக, ஓவியம், உடற்கல்வி, இசை, கம்ப்யூட்டர் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணிபுரிகின்றனர். ஒன்பது ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, 100 நாட்களில் பணிநிரந்தரம் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஏமாற்றமடைந்த பகுதி நேர ஆசிரியர்கள், டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர். அதில், '2012ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட, 16 ஆயிரத்து 540 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு ஒரு வரியில் கூட வெளியாகாதது எங்களை ஏமாற்றமடைய செய்தது. இனி எங்கள் கதி? நம்பினோமே?' என குறிப்பிட்டு, அமைச்சர் மகேஷுக்கு, 'டேக்' செய்து வருகின்றனர்.

Monday, August 16, 2021
PARTTIME TEACHERS
August 16, 2021
தேர்தல் அறிக்கையில் சொன்னது போல.. பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல்வேறு பாடங்களை எடுப்பதற்காக பகுதி நேரமாக பணியமர்த்தப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, அறிவியல், இசை, தையல் ,தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி, ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களும் கற்று கொடுக்கப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இதற்காக 16ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாக பணிபுரிய நியமிக்கப்பட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளமும் வழங்கப்படுவதில்லை. குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநிரந்தரம் ஆகாமலே பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய போனஸ் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
பணியிட மாறுதல், மகப்பேறு விடுப்பு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் போன்றவை கிடைப்பதில்லை. இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 13ந் தேதி தாக்கல் செய்துள்ளனர்.பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் ஆகஸ்ட் 27ந் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பணி நிரந்தரம் அறிவிக்கப்படுமா என எதிர்பார்த்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது, திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது.
ஆனால் பணி நிரந்தரம் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்புற நூலகர்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் மட்டுமே இடம்பெற்றது.எனவே சொன்னதை செய்வோம் என்ற திமுகவை நம்பி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இது எங்களின் 10 ஆண்டுகால கோரிக்கை ஆகும்.பணிநிரந்தரம் கேட்டு 12ஆயிரம் குடும்பங்கள் சார்பில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, August 10, 2021
PROTEST
August 10, 2021
பகுதிநேர ஆசிரியர்களின், 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
🔴🔴 *பகுதிநேர ஆசிரியர்களின், 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?*
*தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.*
*மாதத்தில் 12 அரை நாள் பணிபுரிவதால், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.*
*இருப்பினும் இவர்கள் தங்கள் திறமையினால், மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிய காரணமாக இருக்கின்றனர்.*
*10 வருடங்களாக பணிபுரியும் இவர்களுக்கு, ரூ.10ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.*
*ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.*
*குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றும், பலர் ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனர்.*
*இவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய, எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.*
*குறிப்பாக பணி இடமாறுதல், மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணபலன்கள் போன்றவையாகும்.*
*எனவே மாணவர்கள் மற்றும் 12000 குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.*
*திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தனர்.*
*தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.*
*பகுதி நேர ஆசிரியர்களின் 10 ஆண்டு கோரிக்கையான பணி நிரந்தர அறிவிப்பு, 27-08-2021 அன்றைய பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படுமா என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.*
Friday, August 06, 2021
PARTTIME TEACHERS
August 06, 2021
தமிழகத்தில் 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பிரிவிற்கு நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை:
தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக பகுதி நேர ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் பல பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணிக்கு வரும் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளி க்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், பகுதிநேர ஆசிரியர் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 483 ரூபாய்க்கான டி.டி., மற்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறியதற்கு நன்றி தெரிவித்து 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவர் மாதேஸ்வரன் தலைமையில், கொரோனா நிவாரண நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் புகைப்பட துறைக்கு தனி நலவாரியம் அமைக்க, கோரிக்கை மனு அளித்தனர். தற்போது பணி நிரந்தரம் மனு பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Friday, July 23, 2021
PARTTIME TEACHERS
July 23, 2021
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
தமிழக அரசுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் சமக்ர சிக்சா (SAMAGRA SHIKSHA) திட்டத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட முழு நேர தொகுப்பூதியப் பணியாளர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட எங்களது கோரிக்கைகளை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் (அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்) தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் 1500க்கும் மேற்பட்ட முழு நேர பணியாளர்கள் (கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினி விவரப்பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர், பொறியாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்) மாநில ,மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் (2002 முதல் 2015 வரை) பணியமர்த்தப்பட்டு 6 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் எங்களை கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்தி பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எங்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி உதவிடவும் தமிழ்நாட்டில் சமூகநீதி காக்கும் அரசு எங்களை கருணை உள்ளங்கொண்டு பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள கோரிக்கையை கணிவுன் பரிசீலிக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் முழு நேர தொகுப்பூதிய பணியாளரகளாகிய எங்களுக்கு இதற்கு முந்தைய அரசு எந்தவிதமான தொழிலாளர் பலன்களையும் முறையான ஊதிய உயர்வையும் வழங்கப்படவில்லை ஆதலால் இதுவரை குறைவான ஊதியமே பெற்று வருகிறோம். மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கும் ஊதியமும் முறையாக வழங்கப்படவில்லை எனவே மாண்புமிகு ஐயா அவர்கள் எங்களுக்கு கருணை அடிப்படையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை செய்த கல்வித் தகுதிக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான மருத்துவக் காப்பீடு, ESI, பெண்களுக்கான மகப்பேறுகால விடுப்பு மற்றும் இதர சமூகநல பாதுகாப்புத் திட்டங்கள் வழங்காதல் தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதியமில்லா விடுப்பில் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இத்திட்டத்தில் பணிபுரியும் முழு நேர பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதி மற்றும் இதர சமூக பாதுகாப்பு வசதி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பணியாளர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கான ஊர்திபடி (Conveyance allowance) 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் உயர்த்தி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, May 23, 2021
PARTTIME TEACHERS
May 23, 2021
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு?
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது.
எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது.
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர்.
இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,
"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.
பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏ
ற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.
Saturday, May 01, 2021
SALARY/INCREMENT
May 01, 2021
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் – அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் கோடை விடுமுறைக்கு ஊதியம் வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்கள்:
கடந்த வருட கொரோனா பரவலில் இருந்தே நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதில் இருந்து மீள முயற்சித்து வரும் வேலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆசிரிய பணியில் உள்ளவர்களுக்கு கற்பித்தல் பணி இல்லாததால் ஊதியம் இன்றி சிரமப்படுகின்றனர். கொரோனா பாதிப்பால் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு - Download Notification Pdf& Apply Online
இதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது. இதனை கருத்திற்கொண்டு தெலுங்கானா அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவி தொகையாக ரூ.2000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கியது. இதனை தொடர்ந்து தமிழக தனியார் பள்ளி ஆசியர்களும் அதே போல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அனைவர்க்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றன. இவர்களுக்கு 11 ஆண்டுகளாக மே மாதத்தில் கோடை விடுமுறைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் சம்பளம் வழங்கவில்லை. பிறகு தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தி கொண்டு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
பள்ளிகள் இல்லை என்பதால் அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் வீட்டு தேவைகளை சமாளிப்பதற்கு கடினமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியின்றி தவிக்கிறோம் என கூறினர். இதனால் அரசு கோடை கால விடுமுறைக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கடந்த வருட கொரோனா பரவலில் இருந்தே நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதில் இருந்து மீள முயற்சித்து வரும் வேலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆசிரிய பணியில் உள்ளவர்களுக்கு கற்பித்தல் பணி இல்லாததால் ஊதியம் இன்றி சிரமப்படுகின்றனர். கொரோனா பாதிப்பால் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது. இதனை கருத்திற்கொண்டு தெலுங்கானா அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவி தொகையாக ரூ.2000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கியது. இதனை தொடர்ந்து தமிழக தனியார் பள்ளி ஆசியர்களும் அதே போல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அனைவர்க்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றன. இவர்களுக்கு 11 ஆண்டுகளாக மே மாதத்தில் கோடை விடுமுறைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் சம்பளம் வழங்கவில்லை. பிறகு தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தி கொண்டு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் இல்லை என்பதால் அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் வீட்டு தேவைகளை சமாளிப்பதற்கு கடினமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியின்றி தவிக்கிறோம் என கூறினர். இதனால் அரசு கோடை கால விடுமுறைக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Sunday, March 21, 2021
Universities
March 21, 2021
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி பட்டம் பெற்று ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு.
அரசாணையில் , கூடுதல் கல்வித் தகுதிக்கு , வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 2 ) -ல் காணும் அரசாணையில் , ஆசிரியப்பணியாளர்களுக்கும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , அவ்வரசாணையில் , 10.03.2020 - க்கு முன்னதாக கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு , அரசு நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில் , சம்மந்தப்பட்ட நிர்வாகத்துறை அனுமதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே 10.03.2020 - க்கு முன்னர் , தங்கள் கல்லூரிகளில் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து , ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி M.Phil | Ph.D பட்டம் பெற்று ( PB - 3 ( Rs.15600-39100 + AGP 6000/7000 / 8000 என்ற ஊதியக்கட்டில் அல்லது நிலை 10,11,12 - ல் ஊதியம் பெற்றுவரும் ) ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விதிமுறைகளின்படி , முதல்வர் நிலையில் கூர்ந்தாய்வு செய்து , பட்டச்சான்றின் மெய்த்தன்மை அறிக்கையுடன் 18.03.2021 - க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sunday, March 07, 2021
SALARY/INCREMENT
March 07, 2021
பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஒரு வாரம் சம்பளம் பிடித்தம்.
பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியா்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
வாரத்தில் இரண்டு நாள்கள் ஏற்கனவே பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நாள்களை மூன்று அரை நாள்களாக உயா்த்தி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.அதேபோன்று பகுதி நேர ஆசிரியா்களின் மாத ஊதியம் ரூ. 7,700-இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
இதில் திருப்தியடையாத பகுதி நேர ஆசிரியா்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு சென்னைக்கு வந்து டிபிஐ வளாகத்தில் தா்ணா போராட்டம் நடத்தினா். கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல், 12-ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்ட நாள்களுக்கு, சம்பளத்தை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வாரம் நடந்த போராட்ட நாள்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய கருவூலத்துறைக்கு, பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியது. இந்த கடிதத்தின்படி, எட்டு நாள்கள் சம்பள பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த, தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மை கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

Saturday, March 06, 2021
SALARY/INCREMENT
March 06, 2021
பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் 'கட்'
பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்கனவே பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நாட்களை மூன்று அரை நாட்களாக உயர்த்தி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம், 7,700 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் திருப்தியடையாத பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு, சென்னைக்கு வந்து, டி.பி.ஐ., வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.கடந்த மாதம், 2ம் தேதி முதல், 12ம் தேதி வரை இந்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்ட நாட்களுக்கு, சம்பளத்தை பிடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வாரம் நடந்த போராட்ட நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய, கருவூலத்துறைக்கு, பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியது.இந்த கடிதத்தின்படி, எட்டு நாட்கள் சம்பள பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.