Thursday, May 08, 2025
Saturday, February 15, 2025
Wednesday, November 22, 2023
குரூப் 2 தேர்வு முடிவுகள்: TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு!
குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.
குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை - TNPSC Results Declaration Schedule (As on 21st November 2023) - PDF
நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.
Monday, September 11, 2023
வட்டார கல்வி அலுவலர் பணி - ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி - தேர்வு முடிவு - TRB தகவல்
2019-20 மற்றும் 2021-22-ம் ஆண்டில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி வெளியிட்டது. மொத்தம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 131 மையங்களில் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு
காலையில் தமிழ் தகுதித்தாள் தேர்வு 30 வினாக்கள் கொண்ட வினாத்தாளுடன் 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 40 சதவீதம் தகுதி மதிப்பெண்ணை தேர்வர்கள் எடுக்க வேண்டும். அதாவது, 20 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, பிற்பகலில் நடத்தப்படும் தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி, பிற்பகலில் பொது பாடத்துக்கான தேர்வு 150 கொள்குறி வகை கொண்ட வினாக்களுடன் 3 மணி நேரம் நடந்தது. இதில் பொதுத்தாளில், அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல் என பட்டப்படிப்பு தரத்தில் 110 வினாக்களும், பொது அறிவு பிரிவில் 10 வினாக்களும், கல்வி முறை சார்ந்த 30 வினாக்களும் இடம்பெற்று இருந்தன. ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி
150 மதிப்பெண்ணில் தகுதி மதிப்பெண்ணாக எஸ்.டி. பிரிவினர் 60-ம், எஸ்.சி. பிரிவினருக்கு 67.5-ம், இதர பிரிவினர்களுக்கு 75 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.
42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை சுமார் 35 ஆயிரத்து 400 பேர் எழுதியதாக சொல்லப்படுகிறது. இதன்படி பார்க்கையில் ஒரு இடத்துக்கு கிட்டதட்ட 1,070 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவை விரைந்து வெளியிடுவதற்கு ஏதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Friday, April 28, 2023
Wednesday, April 19, 2023
Monday, February 13, 2023
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை
குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனே வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் 7மாதங்கள் ஆகியும் வெளியிடப்படவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன
தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்
காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்!(
Tuesday, January 24, 2023
Medical Services Recruitment Board - Food Safety Officer Results - DATE: 24.01.2023
CLICK HERE TO DOWNLOAD
Score Card for the post of Food Safety Officer
CLICK HERE TO DOWNLOAD
Wednesday, January 18, 2023
SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
கடந்த 2022, டிசம்பர் 17 முதல் 20ம் தேதி வரை எஸ்பிஐ வங்கியின் புரோபஷனரி ஆபிஸர் 1,673 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு(ப்ரீலிம்ஸ்) நடந்தது.
இதில் 1600 பணியிடங்கள் வழக்கமான காலியிடங்களுக்கும், 73 மண்டல காலியிடங்களுக்கும் நடந்தது. 18 இடங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், 36 இடங்கள், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 21 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடந்தது.
இந்த புரோபேஷனரி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களாவர்.
இந்த புரோபேஷனரி தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது
1. எஸ்பிஐ இணையதளமான sbi.co.in.க்கு செல்ல வேண்டும்
2. கேரீயர்ஸ் டேப் பட்டனை அழுத்த வேண்டும்
3. அதில் புரோபேஷனரி ஆபிஸர் ப்ரீலிம்ஸ் தேர்வு என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்
4. உங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
5. இந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து பிரின்ட் அவுட் எடுத்து அடுத்த கட்ட தேர்வுக்கு சேமிக்கலாம்.
புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விரைவில் முதனிலைத் தேர்வுக்கான விடைத் தொகுப்பு வெளியிடப்படும். புரோபேஷனரி ஆபிஸருக்கான மெயின் தேர்வு வரும் 30ம் தேதி நடக்கிறது
Thursday, September 15, 2022
TNPSC - EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE - FINAL RESULTS - PDF
POST OF EXECUTIVE OFFICER, GRADE-I INCLUDED IN GROUP-VIIA SERVICES IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (NOTIFICATION NO.01/2022)
The list of Register Number of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of Executive Officer, Grade-I included in Group-VIIA Services in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Notification No.01/2022) for which the Oral Test was held on 18.08.2022 FN and Counselling was held on 05.09.2022 FN is furnished below
CLICK HERE TO DOWNLOAD
Sunday, September 11, 2022
JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.
மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.
அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.
ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது
Thursday, September 01, 2022
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு - செப்.24-இல் உடனடித் தேர்வு
செப்.24-இல் உடனடித் தேர்வு
சென்னை, ஆக. 31: கடந்த ஏப்ரல் மாதம் நடை பெற்ற பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கி ழமை வெளியிடப்படவுள்ள நிலையில், உடன டித்தேர்வு செப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ள தாகசென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இளநிலை, முது நிலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்.1-ஆம் தேதி வியாழக் கிழமை www.unom.ac.in என்ற இணையத எத்தில் வெளியிடப்படும். இதையடுத்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாண வர்கள் செப். 5-ஆம் தேதி முதல் செப்.14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவ ரியில் கையொப்பமிட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆறாவது பருவத்தில் ஒரு தாள் மற்றும் அரி யர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.
முதுநிலை மாணவர்கள் நான்காவது பருவத் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்க ளுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும். இவர்கள் தாங் கள் பயின்று கல்லூரி மூலமாக செப். 5 முதல் செப். 14-ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் ரூ.300, முதுநிலை மாணவர்கள் ரூ.350, எம்.பி.ஏ.,எம்.எல்.சட்டப்படிப்புமாண வர்கள் ரூ.600- உடனடி தேர்வுக்கான கட்ட ணமாக செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப். 24- ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குரூப் - 1” தேர்வு மதிப்பெண் வெளியீடு
அரசு துணை துறைகளில் கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, குரூப்-1 பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, 2021ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத் தப்பட்டது.
இதில், 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பிர தான தேர்வுக்கு தகுதி பெற்ற, 3,800 பேரின் விப ரம் மட்டும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப் பட்டது. இந்த ஆண்டு மார்ச் 4, 5 மற்றும் 6ம் தேதி பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை யில் வெளியாகின.
இதில், 137 பேர் நேர் காணலுக்கு தேர்வாகி, ஜூலை 15ல் நேர்காணல் நடத்தி, அதே நாளில் மதிப் பெண்கள் வெளியிடப்பட் டன. இதில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, டி.என்.பி.எஸ். சி., அலுவலகத்தில் கவுன் சிலிங் நடத்தப்பட்டது.
பணி நியமனம் பெற் றவர்களில், 87 சதவீதம் பெண்கள். இதனால், தேர்வர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பெண் களுக்கான இட ஒதுக் கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டு உள்ளதா கவும், ஆண் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு உள் ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, பிர தான தேர்வு ஆகிய இரண் டிலும் பங்கேற்ற அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் விபரங்களையும், டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டுள் ளது. www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Tuesday, August 30, 2022
TNPSC - PRELIMS-03.01.2021 FN-COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Results) - 30/08/2022
TNPSC - PRELIMS-03.01.2021 FN-COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Results) - 30/08/2022
CLICK HERE TO DOWNLOAD PRELIMS-03.01.2021
TNPSC - MAINS- 04.03.2022, 05.03.2022 AND 06.03.2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Results) - 30/08/2022
TNPSC - MAINS- 04.03.2022, 05.03.2022 AND 06.03.2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Results) - 30/08/2022
CLICK HERE TO DOWNLOAD 30/08/2022 (Mains)
Tuesday, August 23, 2022
11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
நாளை பிற்பகல் 3 மணிக்கு dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
விடைத்தாள் நகல் & மறுகூட்டலுக்கு வரும் 29 & 30 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம்
Monday, August 22, 2022
TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.
தற்போது இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 161 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், BCM பிரிவினருக்கு 158க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 160 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 154க்கு மேலும், SCA பிரிவினருக்கு 147க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Sunday, July 24, 2022
CISCE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
தேர்வு முடிவுகளை http://results.cisce.org என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்!
Saturday, July 23, 2022
சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்பில் 92% தோ்ச்சி; பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி
நீண்ட தாமதத்துக்குப் பிறகு 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 92.71 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இரு தோ்வுகளிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படவில்லை. அதன் காரணமாக, சிறப்பு மதிப்பீடு திட்டத்தின் கீழ் முந்தைய தோ்வுகள் மற்றும் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு, மாணவா்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலமாக கடந்த ஆண்டு 99.37 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
ஆனால், இந்த முறை நேரடி எழுத்துத் தோ்வு முறையில் பொதுத் தோ்வுகளை சிபிஎஸ்இ நடத்தியது. இருந்தபோதும், கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இந்தப் புதிய நடைமுறை காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக பொதுத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக முடிவுகள் அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | வகுப்பு 12|கணிதவியல்|பாடம் 8|வகையீடுகள் மற்றும் பகுதி வகை கெழுக்கள் |பகுதி 4
இந்தச் சூழலில், 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வில் பங்கேற்ற 14,35,366 பேரில் 13,30,662 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட குறைவு என்றபோதும், நேரடி எழுத்துத் தோ்வு நடைபெற்ற முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் தோ்ச்சியாகும். அதாவது, இந்தத் தோ்ச்சி விகிதமானது 2020-ஆம் ஆண்டில் 88.78 சதவீத அளவிலும், 2019-ஆம் ஆண்டில் 83.40 சதவீதம் என்ற அளவிலும் பதிவாகின. இந்த முறை மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 94.54 சதவீத அளவிலும், மாணவா்கள் 91.25 சதவீத அளவிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தினா் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதியவா்களில் 33,432 மாணவ, மாணவிகள் 95 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். 1,34,797 மாணவா்கள் 90 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா். பொதுத் தோ்வில் 1,04,704 மாணவா்கள் தோல்வியடைந்த நிலையில், அவா்களில் 67,000 மாணவா்கள் (ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி) உடனடி தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் (ஜேஎன்வி) 98.93 சதவீத தோ்ச்சியும், மத்திய திபெத் பள்ளி நிா்வாக (சிடிஎஸ்ஏ) பள்ளிகள் 97.96 சதவீத தோ்ச்சியும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 97.04 சதவீத தோ்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.81 சதவீத தோ்ச்சியும், அரசு பள்ளிகள் 93.38 சதவீத தோ்ச்சியும், தனியாா் சிபிஎஸ்இ பள்ளிகள் 92.20 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.
இதையும் படிக்க | வகுப்பு 12|அடிப்படை தானியங்கி ஊர் திப்பொறியியல்|பாடம் 8|ஸ்டியரிங் அமைப்பு|அலகு 2
சென்னை மண்டலம் மூன்றாமிடம்: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 98.83 சதவீத தோ்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் (98.16%) இரண்டாமிடமும், சென்னை மண்டலம் (97.79%) மூன்றாமிடமும் பிடித்துள்ளன.
பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 20,93,978 பேரில் 19,76,668 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 95.21 சதவீதம் பேரும், மாணவா்கள் 93.80 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 90 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமா் வாழ்த்து: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதையும் படிக்க | வகுப்பு 12|நுண்ணுயிரியல்|பாடம் 10|மருத்துவ வைரலாஜி| பகுதி 2
அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதி அறிவிப்பு
புது தில்லி, ஜூலை 22: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ளன.
Friday, July 22, 2022
CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 92.71 % மாணவர்கள் தேர்ச்சி
இதையும் படிக்க | RIESI - 30 நாட்கள் பயிற்சி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
2 பருவங்களாக நடத்தப்பட்ட தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளானது சிபிஎஸ்இ அதிகார பூர்வ இணையதளமான cbse.results.nic.in என்ற இணையதளத்திலும் results.cbse.nic.in என்ற இரண்டு இணையத்தளத்திலும் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் மாணவர்கள் இந்த பொது தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்தனர். மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை படிப்பதற்கு மிகவும் முக்கிய வாய்ந்ததாக பார்க்கப் படக்கூடிய பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் பருவ மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் சுமார் ஒரு மாத காலம் எடுக்கும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் 92.71 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலையங்கள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்காக தங்களுடைய மாணவர் சேர்க்கையை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 5 நாட்கள் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.






