Breaking

Showing posts with label Will TNPSC exams be postponed?. Show all posts
Showing posts with label Will TNPSC exams be postponed?. Show all posts

Tuesday, July 12, 2022

July 12, 2022

தாமதமாகும் TNPSC தேர்வுகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த மேயில் அறிவிக்க வேண்டிய தொல்லியல்துறை, சமூகநலத்துறை, நீதித்துறை பணியிட அறிவிப்புகள் 2 மாதங்களாகியும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படாமல் காலதாமதமாகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு தேர்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் வரையிலும் முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மே மாதம் தொல்லியல்துறை, சமூக நலத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை ஆகியும் அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதன்மூலம் ஜூன் மாதம் அறிவிக்க வேண்டிய மருத்துவத்துறை உள்ளிட்ட அறிவிப்புகளும் காலதாமதமாகிறது. எனவே அடுத்தடுத்து தேர்வுகள் நடப்பதில் தாமதத்தை தவிர்க்க திட்டமிடலில் உள்ளவாறு தேர்வுகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Total Pageviews

Search This Blog