Breaking

Showing posts with label heavy rain leave. Show all posts
Showing posts with label heavy rain leave. Show all posts

Tuesday, December 19, 2023

December 19, 2023

மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு



கனமழை பாதித்துள்ள 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு Extension of time to pay electricity bill without penalty in 4 districts affected by heavy rain

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

2. ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.

3. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பொருந்தும். மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் இவ்வாறு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Monday, December 18, 2023

December 18, 2023

நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

College administration announced that students and public affected by heavy rain in paddy can stay at St. Saviour's College, Palayangot! - நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

NOTICE

December 18, 2023

Dear Teaching Staff, Non-Teaching Staff and Students, • As of all us know, due to heavy rains, a vast majority of the people are very badly affected. During this unprecedented situation, our college under the banner XaRRS (Xavier Relief and Rehabilitation Services) is ready to offer some space for the very badly affected people to stay for a day or two.

For Relief related assistance, please contact the following Persons:

Traget Group

Contact Person

General Public in the Neighbourhoods

Rev. Fr.Dr.M.Antonisamy.S.J.

Mobile: 91595-30326

Xavier Hostellers

Rev. Fr.Lawrence Benadict, S.J

Mobile: 9488746581

Day Scholar Students

Dr.S.Chidambaranathan.

Mobile:80726-08688

People from STAND adopted villages

Rev. Fr.Dr.S.Arul Ravi,S.J.

Mobile: 90034-16794

• Kindly do not hesitate to bring to our attention if any student or staff is affected and in need of our assistance.

• Please be safe and reach to us through the above mobile numbers for any emergency.

Monday, August 08, 2022

August 08, 2022

கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை விவரம் : 08.08.22

கனமழை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசுவதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இதையும் படிக்க- 2024 தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெறனும்...மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி பாகிஸ்தான் பெண் வாழ்த்து!

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அம்ரித் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 18 செ.மீ., பந்தலூரில் 15 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Total Pageviews

Search This Blog