Breaking

Showing posts with label பள்ளிக்கல்வித்துறை. Show all posts
Showing posts with label பள்ளிக்கல்வித்துறை. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

ட்யூசன் எடுப்போருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது: பள்ளிக்கல்வித்துறை

ட்யூசன் எடுப்போருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது: பள்ளிக்கல்வித்துறை

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது.

அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது.

தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

5 ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர்கள் பணியாற்றிருக்க வேண்டும்.

38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
August 08, 2022

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தபடி நூதன தண்டனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் நடத்தையில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கற்றல் நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்பப்பட்டு, தவறான நடத்தை மற்றும் குறும்பு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆசிரியர்கள் முழுமையாக கவனிக்க முடியாத சூழல் உள்ளது. அதேசமயம் மாணவர்களிடம் கோபம், வன்முறை மற்றும் கவனம் ஈர்க்கும் முறைகள் அதிகமாக காணப்படுகின்றன. பள்ளி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுடன், ஆசிரியர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களை கவனமுடன் கையாள வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நூதன தண்டனை அளிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், `பள்ளி மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக இருந்தால், சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்யலாம். தற்போதுள்ள குழந்தைகள் ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், சக மாணவர்களை ராகிங் செய்து அடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் முதலில் பள்ளி ஆலோசகர் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே மாணவர் தொடர்ந்து தவறு செய்தால், திருக்குறளை படித்து பொருளுடன் எழுதுதல், நீதிக்கதை கூறுதல், செய்தி துணுக்குகளை படித்தல், வரலாற்று தலைவர்களை பற்றி எடுத்துரைத்தல், நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். அதன் பின்னரும் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கவும், தொடர்ந்து அருகில் உள்ள வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Thursday, August 04, 2022

August 04, 2022

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு_ மாநில மையம்

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்_*

*🎯அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது*

🎯 *புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது*

🎯 *ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தற்போது புதிதாக துவங்கப்பட உள்ள அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்படவுள்ளது. (சுயநிதி பள்ளி மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு பிரிவுகள் மட்டும் அனுமதிக்கப்படும் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதிக்க படாது) ➖➖➖➖➖➖➖➖ ஊடகப் பிரிவு_ Tngtf ➖➖➖➖➖➖➖➖

Wednesday, August 03, 2022

August 03, 2022

11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

11ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, "கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள்" பாடத்துக்கு மாற்றாக, இனி "வேலைவாய்ப்பு திறன்கள்" பாடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனை, tnschools.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 01, 2022

August 01, 2022

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நூதன தண்டனை!

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நூதன தண்டனை!

தவறு செய்யும் மாணவர்களுக்கு, திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட விநோத தண்டனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துதறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கற்றல் குறைபாடு

ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அந்த மாணவரின் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பின்னர் முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

பெற்றோரிடம் வசூலித்தல்

பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சேதமடைந்த பொருளை மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றித்தர வேண்டும்.

அத்துமீறிய செயல்கள்

பஸ்களில் தொங்கிக்கொண்டு பயணம், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங், சாதி-மத அடிப்படையில் பிற மாணவர்களை புண்படுத்துதல், உருவகேலி, பள்ளிச்சுவர்களில் படங்கள் வரைதல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்றவை மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகும். இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவருக்கு முதலில் பள்ளி ஆலோசகர் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

அந்த மாணவர் 2-வது, 3-வது முறையாக இதே தவறை செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். நூதன தண்டனைகள்

5 திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட வேண்டும்.

2 நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும்.

5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும்.

ஒரு வாரத்துக்கு வகுப்பு தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.

5 வரலாற்று தலைவர்கள் பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றி வரைபடம் (சார்ட்) எழுதவேண்டும்.

பள்ளியில் சிறிய காய்-கனி தோட்டம் அமைக்கவேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினைப்பொருட்கள் தயாரிக்கவேண்டும்.

அந்த மாணவருக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து, ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கச் செய்ய வேண்டும். திருந்த வாய்ப்பு

அதற்கு பிறகும் அந்த மாணவர் தவறை உணரவில்லை என்றால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து குழந்தைநேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்கலாம். அதன் பின்னரும் தவறுகள் தொடர்ந்தால் அருகேயுள்ள அரசு பள்ளிக்கு அந்த மாணவரை மாற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக தவறு செய்யும் மாணவர்கள், தங்கள் தவற்றைத் திருத்திக்கொள்ள பலமுறை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணப்பாக்கத்தில் பிரீமியம் 2 & 3 படுக்கையறை குடியிருப்புகள் @ 83 லட்சம்* முதல் தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதியின்‌ பேரில் தான்‌ ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்‌. பேருந்தில்‌ வரும்‌ மாணவர்கள்‌ பேருந்தின்‌ மேற்கூரையில்‌ அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில்‌ தக்க அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, July 25, 2022

July 25, 2022

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

*பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் :

பள்ளிக்கல்வித்துறை!!

ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

*மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது.

Friday, July 22, 2022

July 22, 2022

280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவிகள், மாணவர்கள் என தனித்தனியாக பள்ளிகளும், இருபாலரும் பயிலும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறித்து கேரள அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதையும் படிக்க | 72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிகள்

கேரளாவில் மகளிர் பள்ளிகள் 280, ஆண்கள் பள்ளிகள் 164 என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டு முதல் (2023-2024) கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு அவற்றை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குழந்தை உரிமைகள் ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கழிவறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இணைக்கல்வியின் அவசியம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | Announcement of Joint Entrance Examination (Main) – 2022 Session 2 (July 2022) - Reg

இந்த புதிய செயல் திட்டம் அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து 90நாட்களுக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Thursday, July 14, 2022

July 14, 2022

நாளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

நாளை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும் நடத்தப்படும். மூன்று மாதங்களாக, பொது தேர்வு மற்றும் அதற்கான பணிகள் இருந்ததால், இந்த கூட்டம் நடக்கவில்லை.புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த, 2021- - 22ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு அதிகரித்தது. ஆனால், புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.மேலும், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க ஏற்பாடுகள் தீவிரம்

Friday, July 08, 2022

July 08, 2022

Inspire Awards 2022 - மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்

Inspire Awards 2022 - மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்

2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1 - ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawards-dst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரு பேர்களையும் , நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேரையும் பதிவு வகுப்புக்கு ஒருவர் என ஐந்து செய்யலாம். கூடுதலாகப் பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கடவுச்சொல்லை மறந்துவிட்ட பள்ளிகள் Forget Password என்ற பட்டனை அழுத்தி அதன் மூலம் தங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்ர்களிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதை மாற்ற இயலாது. தென்காசி , கள்ளக்குறிச்சி , மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகள் 22-23இல் பதிவுசெய்யும் போது செங்கல்பட்டு , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை . தங்கள் மாவட்டத்தை மாற்றிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு மாணவரின் பெயரில் தனியான கணக்காக இருக்க வேண்டும். செயல்பட்டிருக்க வேண்டும். வங்கிக்கணக்கு வங்கியின் பெயர் , IFSC Code No. தொடர்ந்து கணக்கு எண் . முதலியவற்றைப் பிழையின்றிக் குறிப்பிட வேண்டும். இவற்றைப் பதிவு செய்யும்போது மின்னஞ்சல் , தொலைபேசி எண் மிகுந்த கவனம் தேவை. பதிவு செய்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொரு வருக்கும் ரூ 10,000 / - அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதலியவற்றைக் குறிப்பிடும் போது பள்ளியின் மின்னஞ்சல் , பள்ளித் தலைமை ஆசிரியரின் அலைபேசி அல்லது பள்ளியின் தொலைபேசி முதலியவற்றைக் குறிப்பது நல்லது.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் அதில் கவனம் தேவை. பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும்போது அலைபேசி எண்கள் மாற்றத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம் .

1 - ந் தேதியிலிருந்து பதிவுகளை வேண்டுகிறோம். மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் 2022 , ஜூலை 2022 செப்டம்பர் 30 - ந்தேதி வரை மட்டுமே இயங்கும். எனவே உடனே செயல்படுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் பதிவு செய்ய ஆவன செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog