Breaking

Showing posts with label Income tax slab. Show all posts
Showing posts with label Income tax slab. Show all posts

Friday, July 03, 2026

Friday, December 19, 2025

Monday, February 03, 2025

Saturday, February 01, 2025

Friday, January 24, 2025

Tuesday, January 21, 2025

Monday, January 20, 2025

Monday, December 23, 2024

Sunday, December 08, 2024

Thursday, December 14, 2023

Tuesday, August 22, 2023

August 22, 2023

Income Tax - அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க உத்தரவு: பாலிசிதாரர்கள் அதிர்ச்சி



Income Tax - அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க உத்தரவு: பாலிசிதாரர்கள் அதிர்ச்சி

தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (பிஎல்ஐ), கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (ஆர்பி எல்ஐ) பாலிசிகளின் முதிர்வு தொகைக்கு 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க தபால்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலிசிதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயுள் காப்பீடு திட்டம் மற்ற காப்பீடு திட்டங்களை விட குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டை வழங்குகிறது. மேலும், முதிர்வு தொகையை நிர்ணயிக்கும் போனஸ் விகிதம், மற்ற எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்களை விட மிக அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரும்போது டிடிஎஸ் தொகை தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்கப்படாத நிலையில், தற்போது, தபால் துறை இயக்குனரகம் பிஎல்ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ பாலிசிகளின் முதிர்வு தொகையானது ஒரு லட்சத்தை தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தபால் துறை வெளியிட்ட உத்தரவால் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்ட திட்டத்தின் காப்பீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள பீல்டு ஆயுள் ஆபீசர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் பாலிசிதாரர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். எனவே, புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலிசிதாரர்கள் மற்றும் பீல்டு ஆபிசர்கள் கூறியதாவது: முதிர்வு தொகை ஒரு லட்சம் தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என்ற உத்தரவால் பல பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

காப்பீடு திட்டத்தில் இணையும்போது இதுபோன்ற எவ்வித தகவல்களும் அளிக்காத நிலையில், திடீரென டிடிஎஸ் கழிக்கப்படும் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, காப்பீட்டில் இணையும்போது ஜிஎஸ்டி பிடிக்கப்படும் என தெரிவிக்காத நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு 4.5 சதவீதம் ஜிஎஸ்டியும், ஒரு வருடத்திற்கு பிறகு 2.3 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்கப்படும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.மேலும், தபால்துறையின் திடீர் உத்தரவால் பாலிசிதாரர்கள் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தபால்துறை இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, February 01, 2023

February 01, 2023

Income tax slab : Budget2023: புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

Income tax slab :Budget2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

new income tax slabs:புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேசமயம், பழைய வரிவிதிப்பு முறை தொடரும். இந்த வரிவிதிப்பு முறையிலும் ஐடி ரிட்டன் தாக்கல் செய்து, வரிவிலக்கு, முதலீட்டு, செலவுக் கழிவுகளை அரசிடம் இருந்து பெற முடியும்.
அதேசமயம், புதிய வருமானவரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்கள் எந்தவிதமான முதலீட்டுக் கழிவுகளையும், விலக்குகளையும் அரசிடம் இருந்து பெற முடியாது. 

ஆனால், ரூ.50 ஆயிரம்வரை நிரந்தரக் கழிவு மட்டும் பெறலாம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பழைய வரிவிதிப்பு முறையில் இதேபோன்ற கழிவுகள் இருப்பதால், ரூ.5 லட்சம்வரை வருமானம் இருப்போர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2.50 லட்சம் வரை பழைய வரிவிதிப்பு முறையில் இருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் ஈட்டுபவர் ரூ.33,800 வரை சேமிக்க முடியும். 

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.23,400 வரையிலும், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.49,400வரை சேமிக்க இயலும். உயர்வருமானம் உள்ள பிரிவினரான ஆண்டுக்கு ரூ.2 கோடிவரை வருமானம் ஈட்டுவோருக்கான சர்சார்ஜ் 37சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5.50 கோடி வருமானம் ஈட்டுவோர் ரூ.20 லட்சம்வரை சேமிக்க முடியும்.

புதிய வருமானவரி முறையின் படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரிவதிக்கப்படும்.

 ரூ.6 முதல் ரூ.9 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வரிவிதிக்கபப்டும்.

ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரிவிதிக்கப்படும்

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். 

ரூ.15.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக ரூ.52.500வரை நிரந்தரக் கழிவு பெறலாம்.

Total Pageviews

Search This Blog