Breaking

Showing posts with label CERTIFICATE COURSE. Show all posts
Showing posts with label CERTIFICATE COURSE. Show all posts

Tuesday, July 07, 2026

Tuesday, June 23, 2026

Tuesday, May 19, 2026

Monday, March 23, 2026

Friday, May 30, 2025

Friday, January 31, 2025

Saturday, January 04, 2025

Thursday, May 30, 2024

Monday, March 11, 2024

Monday, March 04, 2024

Wednesday, January 31, 2024

January 31, 2024

தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்



தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம் Certificate of Study in Tamil medium; You can now get it in universities

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது. ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது

Saturday, December 23, 2023

December 23, 2023

மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - உயர்கல்வித்துறை



மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. A rare opportunity for college students who lost their certificates due to rain and flood.

மாணவர்களின் கவனத்திற்கு...

மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..

சான்றிதழ்களின் நகலை கட்டணமின்றி பெறலாம்

கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள்

நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் www.mycertificates.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம்

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்

உயர்கல்வித்துறை

Thursday, December 14, 2023

December 14, 2023

மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிக்கை



Notification for Admission to Diploma and Certificate Courses in Medicine - மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிக்கை

தமிழக அரசின் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்பாக்கம், சென்னை- 10-ன் 12.12.2023ம் நாளிட்ட அறிவிக்கையின்படி (தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும்) 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Application) www.tnhealth.tn & www.tnmedicalselection.net 12.12.2023@12.00 Noon 20.12.2023 மாலை 5.00 மணிவரையில் பதிவு செய்திடலாம் எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எம்.பூவதி,MD(OG) அவர்கள் வெளியிட்ட செய்தி:


மேற்கண்டவாறு பட்டய படிப்பிற்கு 25 இருக்கைகளும் சான்றிதழ் படிப்புகளுக்கு 60 இருக்கைகளும் என மொத்தம் 85 இருக்கைகள் தமிழக அரசால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ/மாணவியர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய/சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து பயின்று பலனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Thursday, May 11, 2023

Thursday, April 20, 2023

April 20, 2023

டி.சி., இருந்தால் தான் அட்மிஷன்



டி.சி., இருந்தால் தான் அட்மிஷன்

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

கடந்தாண்டு கொரோனா வுக்கு பிந்தைய நிலை என்பதால், தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத பல மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாறினர்.

மாற்றுச்சான்றிதழ் இல்லாத நிலையிலும், மாணவர் சேர்க்கைக்கு சலுகை வழங்கப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டில், அதுபோன்ற நிலை இல்லை என்பதால், வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், தாங்கள் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில் இருந்து, கட்டாயம் மாற்றுச்சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Thursday, August 18, 2022

August 18, 2022

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக அரசின் இ- சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சாா்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதையடுத்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் தகுதியானவா்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும்.

அதேபோன்று, அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளும், அந்தந்த மாவட்ட ‘எமிஸ்’ இணையதள ஒருங்கிணைப்பாளா்களுடன் இணைந்து செயல்படவும், பணிகளை ஆசிரியா்கள் சிறப்பாக செய்வதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களுக்கு இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை தவறாமல் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் க.நந்தகுமாா்.

Tuesday, July 05, 2022

July 05, 2022

மருத்துவப் படிப்பு இடங்கள்: சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவப் படிப்பு இடங்கள்: சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

இஎஸ்ஐ ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளை பயிலுவதற்கான தகுதிச் சான்று மற்றும் வாரிசு சான்றுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் வேறு சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இஎஸ்ஐ காப்பீட்டாளா்களின் வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு உள்ளது. சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களும், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களும் என, நாடு முழுதும் 437 எம்.பி.பி.எஸ். இடங்கள் இஎஸ்ஐ ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க இஎஸ்ஐ, காப்பீட்டாளா்களின் வாரிசுகள் அதற்கான சான்றிதழ் பெறுவதற்கு, இணையத்தின் வாயிலாக, வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து பூா்த்தி செய்த பின்னா், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் 27-ஆம் தேதிக்கள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும் 044 - 2830 6333; 2830 6363 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog