Breaking

Showing posts with label Metro Train. Show all posts
Showing posts with label Metro Train. Show all posts

Monday, October 30, 2023

October 30, 2023

தாம்பரம் - சென்னை இடையே நாளை (அக்.31) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்



தாம்பரம் - சென்னை இடையே நாளை (அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காஞ்சிபுரம் (காலை 9.30), திருமால்பூரில் (காலை 11.05) இருந்து புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு (காலை 10) புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் நாளை (அக்.31) கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Thursday, October 19, 2023

October 19, 2023

தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மற்றும் சனிக்கிழமை கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை

தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மற்றும் சனிக்கிழமை கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை Additional Metro train services tomorrow and Saturday in view of the ongoing holiday

செய்தி வெளியீடு எண்: 115/2023

நாள்: 19.10.2023

பத்திரிக்கைச் செய்தி

தொடர் விடுமுறையால் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

ஆயுத பூஜை 23.10.2023 (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை (செவ்வாய்க்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை - 600 035.

Total Pageviews

Search This Blog