Breaking

Showing posts with label IFHRMS. Show all posts
Showing posts with label IFHRMS. Show all posts

Wednesday, April 24, 2024

April 24, 2024

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை.

April 24, 2024

வருமான வரி பிடித்தம் IFHRMS இணையத்தில் மேற்கொள்ளுதல் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய கோருதல் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) வேண்டுகோள்

April 24, 2024

வருமான வரி பிடித்தம் IFHRMS இணையத்தில் மேற்கொள்ளுதல் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய கோருதல் - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் கடிதம்

Friday, March 01, 2024

March 01, 2024

Advance IT Recovery Intimation Instruction - IFHRMS) களஞ்சியம் 2.0 மூலமாக வரும் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் தவணை தொகை மார்ச் 01 முதல் 10-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்ய கோருதல் தகவல் தெரிவித்தல் தொடர்பு.

Thursday, December 21, 2023

December 21, 2023

IFHRMS NEW APP - 2.0 - IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link



IFHRMS NEW APP - தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது

App install செய்து IFHRMS எண் பதிவு செய்ததும் அதனுடன் இணைத்துள்ள மொபைல் எண் காண்பிக்கும்.

அதன் பிறகு OTP மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது

1. Leave entry

1.1 surrender leave

1.2 el and uel

2. ⁠pay slip download

3. ⁠pf initiation

4. ⁠advance initiation

5. ⁠Transfer joining entry

6. ⁠reports எல் ESR மற்றும் paydrawn

7. ⁠pre retirement..pension proposal

8. ⁠others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 Nhis updation

8.4 Nhis initiation

9. Echallan

10. ⁠contact us

11. ⁠feed back

போன்றவை உள்ளது.

இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும். APP INSTALL செய்வதற்கான லிங்க்
CLICK HERE TO IFHRMS - Kalanjiyam Mobile App

IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link
CLICK HERE TO DOWNLOAD IFHRMS - Kalanjiyam Mobile App

Wednesday, December 06, 2023

December 06, 2023

IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!!

IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!!

IFHRMS சர்வரின் தரத்தை உயர்த்த கருவூலக்கணக்கு ஆணையரகத்தால் இம்மாதத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இம்மாதத்திலேயே சர்வர் மைக்கிரேசன் நடைபெறவிருப்பதால் பின்வரும் தேதிக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) 08.12.2023 மாலைக்குள் சம்பளப்பட்டியில் பிரதிபலிக்குமாறு HR தொடர்பான மாற்றங்களை செய்துமுடித்திடல் வேண்டும்.

2) 11.12.2023 அன்றே சம்பளப்பட்டியினை generate செய்து, 12.12.2023 அன்றே கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும்.

3) கிறித்துமஸ் பண்டிகை முன்பணம் மற்றும் டெலிபோன், மின்கட்டணம் தொடர்பான காலக்கெடுவினையுடைய பில்களை மட்டும் சம்பளப்பட்டியுடன் சேர்த்து 15.12.2023 ஆம் தேதிக்குள் வன்நகல் மற்றும் மென்நகலாய் கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும்.


4. 15.12.2023 வரை வரப்பெறும் பட்டிகள் மட்டுமே ஆய்வுசெய்யப்பட்டு 20.12.2023 ஆம் தேதி சம்பளவரவிற்காக வங்கிக்கு அனுப்ப இயலும்.

5. 20.12.2023 இற்குப்பிறகு எவருக்கும் சர்வர் இருக்காது என்பதால் 15.12.2023 இற்குள் கருவூலத்திற்கு பட்டிகளை வழங்கி உரிய தேதியில் ஊதியத்தினை பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்க.

6. புதுப்பிக்கப்பட்ட சர்வர் மீண்டும் 02.01.2024 முதல்தான் செயல்பாட்டிற்கு வரும் என்பதால்.. மேற்சொன்ன காலக்கெடுவினை தவறவிடாமல் இம்மாதம்(DEC-2023) கடைபிடித்து அசவுகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Friday, January 13, 2023

January 13, 2023

IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?

IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம் - முக்கியச் செய்தி...

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் School login ஐ பயன்படுத்தி கீழ்கண்ட முறையைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

🌐 Login to emis.tnschools.gov.in

🌐 Enter Udise code username and password

🌐 Dashboard ல் click on three lines ( click செய்யவும் )

🌐 Click on staff >> staff list

🌐 Staff list ல் உள்ள Teacher பெயருக்கு நேரே pencil symbol ஐ கிளிக் செய்யவும்.

🌐 Teacher full details திரையில் தோன்றும். அப்படியே scrolling செய்து இறுதியில் IFHRMS Employee ID ஐ Enter செய்து update கொடுக்கவும்.

🌐 குறிப்பு:- update ஆகாவிட்டால் மேலே உள்ள full details ஐயும் entry செய்து update கொடுக்கவும்.
January 13, 2023

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள் உரிய காலத்தில் சம்பளம், பொங்கல் போனஸ் எடுக்க முடியாத வகையில் IFHRMS வெப்சைட் முடங்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) வெப்சைடில் பில்களை ஏற்றி கருவூலகம் வழியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களை காட்டிலும், ஆசிரியர்கள் வெப்சைட் உடன் போராட வேண்டியுள்ளது.தற்போது பொங்கல் போனஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர். போனஸ் பெறுவதற்காக இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சில நாட்களாக இந்த வெப்சைட் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம், போனஸ் பெற முடியாமல் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியது:தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) சாப்ட்வேர் தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு தனியார் நிறுவனம் வசம் தரப்பட்டது. அந்நிறுவனமும் சம்பள பில் தயாரிக்கும் ஊழியர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெப்சைட்டில் சிக்கல் ஏற்பட்டால், சென்னையில் தான் கேட்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக 4 மாதமாக சம்பளம் பெற முடியாத நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் உள்ளனர். அரசு இத்திட்டத்தை அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Total Pageviews

Search This Blog