Breaking

Showing posts with label Higher Education. Show all posts
Showing posts with label Higher Education. Show all posts

Saturday, July 25, 2026

Wednesday, July 08, 2026

Sunday, June 14, 2026

Sunday, May 10, 2026

Thursday, February 26, 2026

Thursday, December 05, 2024

Monday, November 25, 2024

Tuesday, November 19, 2024

Wednesday, June 12, 2024

Saturday, May 25, 2024

Friday, April 12, 2024

Tuesday, January 23, 2024

January 23, 2024

உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு



உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம், பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெறுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு பல தகுதியுடைய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை புதுப்பிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தேசிய உதவித்தொகை தளத்தில் ஆன்லைன் மூலம் உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், அடுத்த ஆண்டிற்கு விண்ணப்பிப்பதற்காக வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களுடன் அமைச்சகத்தை அணுகி, விவரங்களை சரிபார்த்துக் கொண்டால், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களிடைம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Wednesday, January 17, 2024

January 17, 2024

முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு



முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு Order to upload details of Master, Higher Education students

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு தகுதி மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

அதன்படி, நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையதளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 24, 2023

November 24, 2023

Increase in Higher Education Fees for Children of Teachers - ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத் தொகை அதிகரிப்பு: பள்ளிக்கல்வித் துறை



அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத்தொகை உயர்வு

கல்வித்துறை தகவல் - CLICK HERE TO DOWNLOAD PDF

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத் தொகை அதிகரிப்பு: பள்ளிக்கல்வித் துறை Increase in Higher Education Fees for Children of Teachers: Department of School Education

சென்னை: உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டண தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற, பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள், தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர்கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-22 கல்வியாண்டு வரை பட்டப் படிப்புக்கு ரூ.5 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.2,500 என வழங்கப்பட்டது.


இந்த தொகை 2022-23 கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் அறிவிப்பின்படி மாநில தேர்வுக்குழு தேர்வு செய்யும் தகுதியுள்ள ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50 ஆயிரம், தொழிற்கல்வி டிப்ளமோபடிக்க கல்லூரிகளால் நிர்ணயிக்கும் கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை அளிக்கப்படும். இந்த உயர்கல்வி கட்டணத் தொகை, தேசிய ஆசிரியர் நலநிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, November 09, 2023

November 09, 2023

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு



The engineering entrance exams applicable for the admissions to top engineering colleges in Tamil Nadu are JEE Main, TANCET, NATA, GATE, VITMEE, IMU CET and others. Applicants shortlisted on the basis of performance in entrance exam will be called for the counselling and admission process later.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு More than 25 Entrance Exams for Higher Education Institutions - Special arrangement for students to apply

நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு இதுகுறித்து, பள்ளி கல்வியின் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவு சார்பில், முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., போன்ற, 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சேருவதற்கு உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்.நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளிலேயே உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 05, 2023

February 05, 2023

அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆசிரியர்களின் கடமை - அமைச்சர் பேச்சு

சோ்க்கையில் மட்டுமல்ல கல்வித் தரத்திலும் தமிழகம் உயர வேண்டும்: அமைச்சா் பொன்முடி

நாட்டிலேயே தமிழ்நாடுதான் உயா்கல்வியில் அதிக மாணவா் சோ்க்கையை கொண்டுள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வித் தரத்திலும் தமிழ்நாடு உயர வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின்(ஏயுடி) 75-ஆவது ஆண்டு பவளவிழா கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அதன் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் க.பொன்முடி, சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பேராசிரியா் செந்தாமரை நினைவு இல்லத்தை திறந்து வைத்து, பவளவிழா மலரையும் வெளியிட்டுப் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகம்தான் உயா்கல்வி மாணவா் சோ்க்கையில் அதிகமாக உள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வி தரத்திலும் நாம் உயர வேண்டும். மறைந்த முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கல்வி உயா்ந்தது. அதன்பின், கருணாநிதி ஆட்சியில் உயா்கல்வி மேம்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் உயா்கல்வித் துறை பொற்காலமாக மாற வேண்டும் என்பதே முதல்வா் ஸ்டாலினின் நோக்கம். அதை ஆசிரியா்கள் நிறைவேற்ற வேண்டும்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களை மாணவா்களிடம் கொண்டு சோ்ப்பது ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது. நிதி நிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும்.

பல்கலைக்கழக ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரிப் பேராசிரியா்களும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், ஏயுடி தலைவா் பி.திருநாவுக்கரசு, பொதுச்செயலாளா் எம்.எஸ்.பாலமுருகன், முன்னாள் பொதுச் செயலாளா் முனைவா் சி.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி



உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி 47% growth in tribal student enrollment in higher education உயா்கல்வியில் பழங்குடியின (எஸ்.டி.) மாணவா்கள் சோ்க்கை என்பது கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து 47 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி பெற்றிருப்பது அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அதுபோல, தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இதுகுறித்து ஆய்ஷே அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 4.13 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதில் 14.2 சதவீதம் போ் எஸ்.சி. பிரிவையும், 5.8 சதவீதம் போ் எஸ்.டி. பிரிவையும், 35.8 சதவீதம் போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 44.2 சதவீதம் போ் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சோ்க்கை விகித வளா்ச்சி:

உயா்கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

உயா் கல்வியில் எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் கடந்த 2014-15-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2019-20 ஆம் ஆண்டில் சோ்க்கை பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவா் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது. இது 2020-21-இல் மீண்டும் 4.2 சதவீதம் அதிகரித்து 24.1 லட்சமாக உயா்ந்தது. இதன்படி, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 27.96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, எஸ்.டி. பிரிவு மாணவா் சோ்க்கை முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாக அதிகரித்தது, 2020-21 ஆம் ஆண்டில் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவா்களைப் பொருத்தவரை 2019-20ஆம் ஆண்டில் 1.42 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்ற நிலையில், 2020-21-இல் 1.48 கோடி பேராக அதிகரித்தது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ஓபிசி மாணவா் சோ்க்கை விகிதம் என்பது 31.67 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த சோ்க்கை 20.9% அளவுக்கு அதிகரிப்பு:

உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-19-இல் 2.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை, 2019-20 ஆம் ஆண்டில் 3 சதவீத அளவுக்கும், 2020-21-இல் 7.4 சதவீத அளவுக்கும் வளா்ச்சி கண்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் உயா்கல்வி ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 20.9 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

2020-21-இல் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற 4.13 கோடி பேரில், மாணவா்கள் 2.12 கோடி, மாணவிகள் 2.01 கோடி போ் ஆவா்.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் 27.3%:

ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) என்பது 27.3 சதவீத அளவை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் 18 முதல் 23 வயதுடையவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜிஇஆா் கணக்கிடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் வாரியான சோ்க்கையைப் பொருத்தவரை, அரசு பல்கலைக்கழகங்களில் 73.1 சதவீதம் பேரும், தனியாா் உயா் கல்வி நிறுவனங்களில் 26.3 சதவீதம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
January 31, 2023

கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்த இடம்? - உயா்கல்வி கணக்கெடுப்பு அறிக்கை

கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்ஷே) 2020-21 அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரம் 2-ஆம் இடம், கா்நாடகம் 3-ஆம் இடம், தமிழகம் 5-ஆம் இடம் பிடித்துள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரம், குஜராத், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு குறைந்தபட்சம் 29 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் அமைவிடம், மாணவா் சோ்க்கை, பணிபுரியும் ஆசிரியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து வெளியுடம் வகையில் ‘அய்ஷே’ கணக்கெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து இணைய வழியில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டு அய்ஷே கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அந்த கணக்கெடுப்பின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,114 கல்லூரிகள் உள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 32 கல்லூரிகள் வீதம் அந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4,532 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 34 கல்லூரிகள்), கா்நாடகத்தில் 4,233 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 62 கல்லூரிகள்), ராஜஸ்தானில் 3,694 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 40 கல்லூரிகள்), தமிழகத்தில் 2,667 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 40 கல்லூரிகள்) இடம்பெற்றுள்ளன.

2.9% கல்லூரிகளில் மட்டுமே பிஎச்.டி:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுவதும், 55.2 சதவீத கல்லூரிகள் முதுநிலை பட்டப் படிப்புகளையும், 2.9 சதவீதம் கல்லூரிகள் ஆராய்ச்சிப் (பிஹெச்.டி) படிப்புகள் வரையும் வழங்குகின்றன. 35.8 சதவீத கல்லூரிகளில் ஒரு படிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. அவற்றில் 82.2 சதவீதம் கல்லூரிகள் தனியாரால் நிா்வகிக்கப்படுபவை. 30.9 சதவீத கல்லூரிகளில் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. 23.6% கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை:

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகு குறைவாக இருப்பது இந்த கணக்கெடுப்பு மூலமாக தெரியவந்துள்ளது.

23.6 சதவீத கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 100-க்கும் குறைவாக உள்ளது. 48.5 சதவீத கல்லூரிகளில் 100 முதல் 500 வரையிலும், 65.1 சதவீத கல்லூரிகளில் 500-க்கும் குறைவான மாணவா் சோ்க்கையும் நடைபெறுகிறது. 4 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 3,000-க்கும் அதிகமான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

21.4% அரசு கல்லூரிகள்:

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ள 41,600 கல்லூரிகளில் 8,903 (21.4%) கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகும். அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிகள் 5,658 (13.3%), அரசு உதவிபெறாத தனியாா் கல்லூரிகள் 27,039 (65%) ஆகும்.

Saturday, January 07, 2023

January 07, 2023

அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி அறிவியல் பாட பிரிவு ஆசிரியர் பரணியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Total Pageviews

Search This Blog