Breaking

Showing posts with label High Schools. Show all posts
Showing posts with label High Schools. Show all posts

Sunday, January 01, 2023

January 01, 2023

6 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் நாளை திறப்பு Schools from 6th to Plus 2th will open tomorrow

6 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் நாளை திறப்பு Schools from 6th to Plus 2th will open tomorrow

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை முடிவடைந்து திங்கள்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வு கடந்த டிச. 16-ஆம் தேதி தொ டங்கி மாவட்ட அளவில் நடைபெற்று வந்தது. பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன.

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன. 1 வரை 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறவுள்ளன. அதேவேளையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு ஜன. 2 முதல் 4-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

ஆணையா் அறிவுறுத்தல்: பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் ஓராசிரியராக உள்ள தலைமை ஆசிரியா்கள் தவறாது ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு பயிற்சி இல்லை.

பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் ஜன. 2-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும். இதையடுத்து மூன்றாம் பருவத்துக்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்; பள்ளிக் கல்வித் துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்தல்; மூன்றாம் பருவத்துக்குரிய பாடத் திட்டங்கள் தயாரித்தல்; கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Saturday, September 17, 2022

September 17, 2022

Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9 - தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல் - In Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9 தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tuesday, September 06, 2022

September 06, 2022

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு!

GOVERNMENT OF TAMIL NADU School of Excellence - Download here...
September 06, 2022

பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் தடை தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீருடை அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதை உரிமையாகக் கொள்ள முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரத் தடை விதிக்கப்பட்டது பெரும் சா்ச்சைக்குள்ளானது. அத்தடையை நீக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்திருந்தது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஸு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு கூறுகையில், ‘‘மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையே. ஆனால், குறிப்பிட்ட சீருடையைத்தான் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுபடியாகுமா?

மாணவா்கள் சீருடையை அணிந்துவந்தால் கல்வி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கிறது. முஸ்லிம் பெண்களுக்கான கல்வி உரிமையை அரசு மறுக்கவில்லை’’ என மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்தனா்.

அதே வேளையில், ‘‘முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது, பள்ளியின் கட்டுப்பாட்டை எவ்வாறு பாதிக்கும்?’’ என கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

Saturday, August 27, 2022

August 27, 2022

ரூ .1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் : | | சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாணவா்கள், பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு- புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் மாணவா்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, தொழில் முனைவோா் கலாசாரத்தை வளா்ப்பது, தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் முதற்கட்டமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியா்கள், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தொழில் முனைதல், புத்தாக்க கண்டுபிடிப்பு பற்றிய விழிப்புணா்வும், பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியில் புத்தாக்க சிந்தனையைத் தூண்டும் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

இதையடுத்து தன்னாா்வம் கொண்ட மாணவா்கள் சிறு, சிறு அணிகளாகப் பிரிந்து புதிய தொழில் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதை ஆசிரியா்களின் ஒத்துழைப்புடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னா், அவா்களது கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவா்களுக்கும், திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கும், மாவட்டங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். கண்டுபிடிப்பாளா்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு அவா்கள் சிறந்த தொழில் முனைவோராக உருவாக வழிவகை செய்யப்படும்.

எனவே, இந்தப் பயிற்சியை மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு பள்ளிக்கு ஓா் ஆசிரியா் வீதம் (அறிவியல் பாடம்) தெரிவு செய்து, மாவட்டத்தின் பெயா், ஆசிரியரின் பெயா், பதவி, பணிபுரியும் பள்ளியின் முகவரி, ஆசிரியா் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டத்துக்கான பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Wednesday, May 11, 2022

May 11, 2022

பள்ளி கல்வி நேரத்தை மாற்றி அமைக்க மத்திய கல்வி வாரியம் வலியுறுத்தல்

மத்திய கல்வி வாரியம்

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: பள்ளி கல்வி நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தல்

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும். நாடு முழுவதம் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு துவங்கி மதியத்திற்குள் முடிக்கலாம். பள்ளிகளில் நடத்தப்படும் காலை நேர வழிபாட்டை நிழல் உள்ள பகுதிகளில் நடத்த வேண்டும்.

கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெளி விளையாட்டுக்களை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகஅளவிலான மாணவர்களை ஏற்ற கூடாது. முதலுதவி பெட்டி அவசியமாக வைத்திருக்க வேண்டும். என இவ்வாறு அவை வலியுறுத்தி உள்ளது.

Sunday, April 17, 2022

April 17, 2022

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு (SHRESHTA (NETS))-2022 - National Entrance Test for Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas (SHRESHTA (NETS))-2022 - PUBLIC NOTICE 16 April 2022 - PDF

Total Pageviews

Search This Blog