Breaking

Showing posts with label Chief Minister. Show all posts
Showing posts with label Chief Minister. Show all posts

Thursday, January 29, 2026

Saturday, January 24, 2026

January 24, 2026

அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.

Tuesday, January 07, 2025

January 07, 2025

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிக்சைக்கான கட்டணம் ₹1 இலட்சத்திலிருந்து ₹2 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

Monday, February 12, 2024

February 12, 2024

பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு



பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு Tamil Nadu Chief Minister's residence siege on February 16 - Abolition of CPS movement announced

மதுரை, பிப். 11 : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தப் போவதாகசிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்டக் கூட்டத்தில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியதாவது: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரி யும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தேர் தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வருகிற 16-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது. போராட் டத்துக்குப் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்ப டும் என்றார் அவர்.

Monday, July 24, 2023

July 24, 2023

Speech delivered by the Honble Chief Minister at Government Higher Secondary School, Thoppur, Salem District - Press Release No : 1463 - 24.07.2023 - PDF



Speech delivered by the Honble Chief Minister in the inauguration of the registration camp for Kalaignar Magalir Urimai Thogai Scheme at Government Higher Secondary School, Thoppur, Salem District [Press Release No : 1463 ]

செய்தி வெளியீடு எண் : 1463

நாள்: 24.07.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து ஆற்றிய உரை. CLICK HERE TO DOWNLOAD CM Speech Press Release PDF

Thursday, February 23, 2023

February 23, 2023

old pension scheme - பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல் - Video

பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல் - Video

பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல்... வீடியோ


Monday, February 20, 2023

February 20, 2023

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!!



முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!! - Chief Minister Condolences to District Collector who died while playing in Chief Minister's Trophy!!!

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

Thursday, February 02, 2023

February 02, 2023

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வரிடம் மனு

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய முதல்வரிடம் மனு Petition to the Chief Minister to make the work of part-time teachers permanent  

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  

இந்நிலையில், நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி, வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் நினைவு பள்ளி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ராஜ், வேளாங்கண்ணி, பாலமுருகன் ஆகியோர் முதல்வரிடம் கொடுத்தனர்.   இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது, "11 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முதலமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இந்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் நிகழ்ச்சியிலும் மனு கொடுத்துள்ளோம். தொகுதிப்பூதிய ஆசிரியர்களாக பணியாற்றும் பலர் 50 வயதைக் கடந்து விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகள் தான் பணிபுரிய முடியும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல் தாமதம் செய்வது மேலும் வேதனை அளிக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் குறிப்பிட்டவாறு எங்களை மனிதாபிமானத்துடன் முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  

பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 12 ஆயிரம் பேருக்கு காலமுறை சம்பளம் கொடுத்து பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பெரிய செலவு ஆகாது. தற்போது ₹ 10 ஆயிரம் தொகுப்பூதியம் கொடுக்க ஆண்டுக்கு ரூ. 130 கோடி செலவாகிறது. இன்னும் ரூ. 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கினால் போதுமானது. இதற்கு முதல்வர் மனசு வைத்தால் போதும்" என்றார்
February 02, 2023

ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்



ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர் Demand of part-time teachers fulfilled by running train; Education Minister recommended to the Chief Minister

*பத்திரிக்கை செய்தி*

*ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்*

பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திக்கு மனு அனுப்பி இருந்தோம்.அதன் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்று அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்து வந்தோம்.

மீண்டும் அமைச்சர் அழைப்பின் பேரில் 1/2/2023 அன்று ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.பணிநிரந்தரம்,ஊதிய உயர்வு,மே மாத ஊதியம்,தற்செயல் விடுப்பு,கருனைத் தொகை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அதை கனிவுடன் கேட்ட கல்வி அமைச்சர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனக் கூறினார். இது தொடர்பாக நாங்கள் அமைச்சரை சந்தித்த அன்றே வேலூருக்கு இரயிலில் பயணம் செய்த மாண்புமிகு முதல்வரிடம் நேரில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.

அதன் விளைவாக முதல்வர் அறிவித்து இத்தனை நாட்களாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த எங்களது கோரிக்கைகளில் ஒன்றான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான தேதி நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.

மேலும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வு விரைவில் முழுமைபெறும் என்னும் நம்பிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் பழ.கௌதமன்,திருச்சி சேசுராஜா, சேலம் ராமகேசவன்,திருப்பூர் யசோதா,கோவை ராஜாதேவகாந்த் மற்றும் கடலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sunday, January 29, 2023

January 29, 2023

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின்



கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின் Education and Medicine Departments of Service: Chief Minister Stalin

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு ஆற்றிய உரை, அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.

தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியையும் தொடங்கி இருக்கிறோம். மருத்துவம் என்பது எளிமையானதாக - புதுமையானதாக - அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். அது குறித்து இந்த மாநாடு அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவம் நவீனமாக ஆகி வருகிறது. ஆனால் அதிகத் தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லார்க்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவக் காப்பீடு திட்டங்களின் மூலமாக வழங்குகிறோம். மக்களைத் தேடி மருத்துவம் - நம்மைக் காக்கும் 48 திட்டங்களின் மூலமாக தருகிறோம். என்றாலும் அதிகப்படியான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இந்த நாட்டில், அனைத்து தேவைகளையும் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் அது போதாது.

இதில் தனியார் பங்களிப்பும் மிகமிக முக்கியமாக இருக்கிறது. அப்படி தனியார் மருத்துவமனைகள் பங்களிப்பு செய்யும்போது கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள். சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சென்னைக்கே மெடிக்கல் சிட்டி, மெடிக்கல் கேப்பிட்டல் என்றுதான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி எல்லாமே இங்கு உண்டு.

அந்த வகையில் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Monday, January 23, 2023

January 23, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது: முதல்வர் தகவல்!

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது: ஏக்நாத் ஷிண்டே தகவல் The government is considering the old pension scheme: Chief Minister informs!

மும்பை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என மகாராஷ்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்ரா மாநிலத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

பின் அவர் பேசியதாவது:

கல்வித்துறை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.

இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. முந்தைய மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?. இவ்வாறு அவர் பேசினார்.

சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது

Total Pageviews

Search This Blog