Breaking

Showing posts with label ambulance JOB. Show all posts
Showing posts with label ambulance JOB. Show all posts

Saturday, January 06, 2024

January 06, 2024

4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம் Recruitment camp for 108 ambulance services in 4 districts

தக்கலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

நாளை மறுநாள் நடக்கிறது

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட் டங்களில் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 20 மருத்துவ உதவியாளர் ஈ பணியிடங்களும், 10 டிரைவர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., லைப் சயின்ஸ் போன்றவற்றில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருக்கவேண் டும். மாத ஊதியம் ரூ.16,020. நேர்முகத்தேர்வு அன்று 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்கவேண் டும். மாத ஊதியம் 15,820. நேர்முகத்தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். பணி இடங்களுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய் யப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி அளிக்கப் படும்.

இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

Saturday, January 07, 2023

January 07, 2023

108 ஆம்புலன்சில் வேலை - நேர்முகத் தேர்வு நாளை (ஜன.,8ல்) நடக்கிறது.

108 ஆம்புலன்சில் வேலை காத்திருக்கு

திருமங்கலம்- -மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் '108' ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஜன.,8ல் நடக்கிறது.

மருத்துவ உதவியாளருக்கு 19 - 30 வயதுள்ள பி.எஸ்.சி., நர்சிங்., ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12ம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பேஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.

நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை அலுவலகத்தை 044 - 2888 8060,75,77ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கேசவ பிரபு தெரிவித்தார்

Saturday, March 05, 2022

March 05, 2022

108 ஆம்புலன்ஸ்’ல் வேலைவாய்ப்பு - INTERVIEW நாள்: 06.03.2022,

நாள்: 06.03.2022,

"SAATHI"-Safe Ambulance and Adequately Trained Healthcare Individual

சாத்தி - பாதுகாப்பான ஆம்புலன்ஸ் மற்றும் போதுமான பயிற்சி பெற்ற சுகாதார தனி நபருகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதி உள்ளவர்கள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

அடிப்படைத் தகுதிகள்

1. 22 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

2 உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். 3. B.Sc., & DGNM நரசிங் மற்றும் B.Sc., Zoology, Botany, Bio Chenistry, Micro Biology, Biotechnology, Bsc Physics

Chenisry பட்டம் பெற்றவர்கள். ANM, DFPN, DNA, DMLT அல்லது D.Pharm., (12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு 2 ஆண்டு) 5 இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் Baip வாகன உரிமம் எடுத்து 1 ஆண்டு நிறைவு

பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : இலகுரக மற்றும் Badge வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை

வழங்கப்படும்.

மாத ஊதியம் ரூ.14,966/- மற்றும் இதர படிகள்

பணியிடம் : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியமனம் பணி நேரம் : 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு ஷிப்ட் பகல் ஷிப்ட் என மாறும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிப்பார்ப்பதற்காக நேரில் கொண்டு வரவேண்டும். மேலும் இந்த பணிக்காக தாங்கள் யாரிடமும் எவ்வித பணமும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறீர்கள்.



Total Pageviews

Search This Blog