தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 16, 2026

Comments:0

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிக்கை

தமிழ்நாடு அரசே! தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்று!

பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளிகளில் பணிபுரியும் வகையில் உத்தரவுகளை வழங்கிடு.

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

கடந்த 2021 திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற உறுதிமொழி இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் கடந்த 7 நாட்களாகச் சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் தற்கொலை முயற்சி செய்து இறந்திருக்கிறார். தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல.

இந்தப் போராட்டத்தில் உயிர்நீர்த்த ஆசிரியர் கண்ணன் அவர்களுக்குத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்கள் போராடுகின்ற பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும்.

ஊதிய உயர்வு கொடுப்பதும், மே மாதம் சம்பளம் கொடுப்பதும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது. எதையும் தாய் உள்ளத்தோடு அணுகுகின்ற தமிழ்நாடு அரசு, பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

போராட்டக் களத்தில் இருக்கக் கூடிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உரிய உயரிய தீர்வுகளை எட்ட வேண்டும்.

இந்தப் பொங்கல் அவர்களுக்கும் இனிமையான பொங்கலாக அமையும்படி பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் எனத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பிற்கினிய ஆசிரியர்களே. தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. உங்கள் உரிமைப் போராட்டத்தில் இறந்து போன கண்ணன் அவர்களின் இழப்பே கடைசி இழப்பாக இருக்கட்டும்.

உங்கள் கோரிக்கை வெற்றி பெறட்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews