Breaking

Showing posts with label HIGH COURT Question. Show all posts
Showing posts with label HIGH COURT Question. Show all posts

Thursday, March 03, 2022

March 03, 2022

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா?.: ஐகோர்ட் கிளை கேள்வி

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | கோடை விடுமுறை யாருக்கு எத்தனை நாட்கள்?

ரூ.10 லட்சம் கொடுத்து பணிமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்பிப்பார்கள் என நீதிபதி வினாவியுள்ளார்.

Tuesday, March 01, 2022

March 01, 2022

டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இடமாறுதலுக்கான கோரிக்கை ரத்தானது தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த ராதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க | ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

“ஏழை, நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாகக் கூட அரசுப் பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது. டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது.

தற்போதைய கல்வித்துறையின் நிலைமை நிச்சயமாக சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. கல்வித் துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்றுநோக்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவது போன்ற புகார் ஆவணங்களை சேகரித்து, மாவட்டம் தோறும் குழுவை ஏற்படுத்தி துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Wednesday, February 23, 2022

February 23, 2022

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பிற தொழிலில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர, ஆசிரியா்கள் பிற தொழிலில் ஈடுபடக்கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சோ்ந்த ராதா தாக்கல் செய்த மனு: நானும், எனது கணவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றி வருகிறோம். தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆணையில், ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் அரசுப் பணியில் இருந்து, இருவரில் யாராவது ஒருவா் 30 கிலோ மீட்டா் தூரத்திற்கு அதிகமாக சென்று பணியாற்றினால், அவருக்கு பணி மாறுதல் வழங்கி அருகில் பணியாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் இடத்தில் இருந்து 35 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ஈச்சம் கோட்டையில் பணியாற்றி வருகிறேன். அரசு ஆணைப்படி எனக்கு பணி மாறுதல் வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த பலனுமில்லை. எனவே, எனக்கு பணி மாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் பள்ளிக்கு செல்லும் தூரம் 18 கிலோமீட்டா் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு அரசு விதிகளின் படி பணி மாறுதல் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தொழிலில் கவனம் செலுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தொடா்ந்து நீதிபதி, ஆசிரியா்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசின் நிா்வாகத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன.

இதையும் படிக்க | Teachers Transfer Counselling Today Schedule ( 23.02.2022 )

கல்விக்காக அரசு அதிக நிதி செலவிட்டாலும், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படவில்லை. உலகளவில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயா்ந்தும், தரமானதாகவும் உள்ளது.

தனியாா் பள்ளிகளிலில்கூட குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆசிரியா்களுக்குப் போதுமான ஊதியத்தை அரசு வழங்குகிறது. ஆனாலும், ஆசிரியா்கள், பகுதி நேரமாக மாணவா்களுக்கு டியூசன் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துகின்றனா்.

ஆசிரியா் பணி என்பது உன்னதமானது. நாட்டின் எதிா்காலமாக மாணவா்கள் உள்ளனா். ஆசிரியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றவில்லை என்றால் நாட்டின் வளா்ச்சி பாதிக்கப்படும் என்றாா். பள்ளிக்கல்வித்துறை செயலா் வழக்கில் சோ்ப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சோ்ப்பதாக தெரிவித்த நீதிபதி, அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு தொழில்களில் ஈடுபடுவது விதிகளின்படி குற்றமாகும். எனவே, மாநிலம் முழுவதும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், வேறு தொழிலில் ஈடுபடுவது குறித்து குழுக்கள் மூலம் கண்காணித்து தகவல் சேகரிக்க வேண்டும். இதில், வேறு தொழில்களில் ஈடுபடும் ஆசிரியா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியா்கள் தகுதி குறித்து அறிக்கை அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் குறித்தும், மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவது குறித்தும், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யவேண்டும். அதன்படி தகுதியற்ற ஆசிரியா்கள் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியா்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேணடும். ஆசிரியா் சங்கங்களின் தலையீட்டை தடுக்க வேண்டும்

இதையும் படிக்க | ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் நலனுக்காகவே சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சங்க நிா்வாகிகள், ஆசிரியா்களின் நலனைத் தவிா்த்து, அரசு நிா்வாகத்தில் தலையிடுகின்றனா்.

இதனால் நிா்வாகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, ஆசிரியா் சங்கங்களையும், நிா்வாகிகளையும் கண்காணித்து, விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.

Monday, February 14, 2022

February 14, 2022

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

'பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்' எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரண மாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா

பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ் ௨ பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ௧௫ மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் பிளஸ் ௨ பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது.

இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் பிளஸ் ௨ பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Friday, February 11, 2022

February 11, 2022

அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உத்தரவு?? சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: முதல்வர் இல்லாமல் இயங்கும் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியீடு

17 காலியிடங்களில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை ஒருவாரத்தில் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog