Breaking

Showing posts with label Why was the teacher arrested?. Show all posts
Showing posts with label Why was the teacher arrested?. Show all posts

Sunday, April 16, 2023

April 16, 2023

ஆசிரியர் கைது...

சிவகங்கை அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் விநாயகசவுத்ரியை 44, போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழாயூரை சேர்ந்த விநாயகசவுத்ரி பணிபுரிந்தார். இவர் ஏப்.3ல் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்முத்துகண்ணன் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விமலா, 'போக்சோ' சட்டத்தின் கீழ் ஆசிரியர் விநாயகசவுத்ரியை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இப்புகார் தொடர்பாக ஆசிரியரை, முதன்மை கல்வி அலுவலர்ஆர். சுவாமிநாதன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog