Breaking

Showing posts with label Annual Exam marks. Show all posts
Showing posts with label Annual Exam marks. Show all posts

Sunday, November 26, 2023

November 26, 2023

TNPSC - வருடாந்திர கால அட்டவணை: டிச.2-வது வாரத்தில் வெளியீடு. TNPSC - Annual Time Table



TNPSC - வருடாந்திர கால அட்டவணை: டிச.2-வது வாரத்தில் வெளியீடு.

அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர காலஅட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ள காலிப் பணியிடங்கள், அதற்கான போட்டித் தேர்வு குறித்த விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தேர்வர்கள் முறையாக திட்டமிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு, காலிப் பணியிடங்கள் அடங்கிய டிஎன்பிஎஸ்சி-யின் வருடாந்திர கால அட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பில் 30 விதமான போட்டித் தேர்வுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான விவரங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல், எதிர்பார்ப்பில் உள்ள தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 26, 2022

October 26, 2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், ஜூலை/ஆகஸ்ட் 2022 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு

நடைபெற்ற ஜூலை ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 31.10.2022 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
October 26, 2022

10 & 12ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் - அரசு தேர்வுத்துறையின் அறிவிப்பு

10 & 12ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 31ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் - அரசு தேர்வுத்துறை

Friday, August 05, 2022

August 05, 2022

TN SED - Requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks



The School Education Department has rolled out a new module. This module has the provision to enter the Annual Exam, Half Yearly Exam, Quarterly Exam marks of Class 6 to 9 students. Class Teachers of 8th standard are requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks of the 8th class students as priority.

TN SED

பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் - TN SED.

Total Pageviews

Search This Blog