Breaking

Showing posts with label Committee structure to implement state education policy. Show all posts
Showing posts with label Committee structure to implement state education policy. Show all posts

Tuesday, August 23, 2022

August 23, 2022

மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்

மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 13, 2022

July 13, 2022

மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முருகேசன் முழு முடிவு..

மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநில கல்வி கொள்கை முழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கென பிரத்யேகமாக கல்வி கொள்கை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது 2 கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாநிலம் முழுவதும் கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக பொதுமக்கள் அனைவரிடம் கருத்துக்களை பெற இக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, அதன் மூலமாக கல்வி கொள்கை வரையறை குழுவானது ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், இதற்கான முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி கொள்கை முழு தகவல் அளித்துள்ளது. மாநில கல்வி கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ல் நடைபெற உள்ளது.

Wednesday, April 20, 2022

April 20, 2022

மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மாநில கல்வி கொள்கை

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தரசன் தாக்கல் செய்துள்ள மனுவில், 1976ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்பதால் 1963ம் ஆண்டின் அலுவல் மொழி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக அரசு தகவல்

இதுதொடர்பாக தமிழக அரசு தனது சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் குழுக்களை அமைத்து அறிக்கைகளை பெறுவதாக மனுதாரர் கூறுவது கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கையின் வாயிலாக இந்தியை திணிக்க முயற்சிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அவரவர் தாய்மொழியை காக்கவும், தாய்மொழியில் கற்கவும் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் உள்ளது. தாய்மொழியை காப்பது கடமையும் கூட. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

திருமாவளவன் தனது மனுவில், ‘‘இந்தி மொழியின் ஆதிக்கத்தால் மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா போன்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இது இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக உள்ளது. இந்தி இல்லாமல்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியை கட்டாயப்படுத்துவது என்பது இந்தி தெரியாத இளம் தலைமுறையினரிடம் கூடுதல் சுமையை திணித்து விடும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog