WhatsApp Web
February 27, 2025
Showing posts with label WhatsApp Web. Show all posts

Thursday, February 27, 2025
Thursday, June 27, 2024
Thursday, November 02, 2023
WhatsApp Web
November 02, 2023
WhatsAppல் profile picture வைத்துக் கொள்ள புதிய வசதி!
*வாட்ஸ் அப்பில் புதிய வசதி!*
வாட்ஸ் அப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு போட்டோவும் இல்லாதவர்களுக்கு மாற்று போட்டோவும் வைத்துக் கொள்ளலாம். பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஒரு அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ் அப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையத்தளம் தெரிவிக்கிறது.
மேலும், வாட்ஸ் அப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது.
தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Saturday, October 21, 2023
WhatsApp Web
October 21, 2023
WhatsAppல் ஒரே நேரத்தில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம்
WhatsApp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் New change in WhatsApp app to use two WhatsApp accounts at the same time
வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸக்கர்பெர்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள், விரைவில் ஒரே செல்லிடபேசியில், இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு செல்லிடபேசி எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இனி, வாட்ஸ்ஆப்பில் ஒரு எண்ணை லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது இரண்டு செல்லிடபேசிகளைப் பயன்படுத்தும் பிரச்னையோ, மாற்றி மாற்றி வாட்ஸ்ஆப் பயன்படுத்தும்போது தவறானவர்களுக்கு தகவல் அனுப்பிவிடுவோமோ என்ற அச்சமோ தேவையில்லை என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்துக்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து, ஆட் அக்கவுண்ட் என்று சேர்த்துக் கொள்ளலாம்.

Thursday, August 24, 2023
WhatsApp Web
August 24, 2023
பெயர் இல்லாமலேயே Whatsapp Group Create செய்யலாம் – வெளியான புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்பில் பெயர் இல்லாமலேயே குரூப் கிரியேட் செய்யும்படியான புதிய அப்டேட்டை Whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Whatsapp:
Whatsapp நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக வகையில் ஏகப்பட்ட அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கியபடி இருந்து வருகிறது. அந்த வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்டிக்கர்களை உருவாக்கம் செய்வது, பயனர்களுக்கு உயர்தர HD புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வது, வீடியோ கால் மூலமாகவே ஸ்கிரீன் ஷேர் செய்வது, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்வது என தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்டுகளை வழங்கியபடி இருக்கிறது. இதனை தொடர்ந்து, இமெயில் மூலமாக whatsapp அக்கவுண்டை லாகின் செய்யும் வசதியையும் whatsapp அறிமுகம் செய்திருக்கிறது, இந்நிலையில், புதிதாக whatsapp குரூப் கிரியேட் செய்யும்போது எந்தவித பெயரும் இல்லாமலேயே உருவாக்கம் செய்யும்படியான அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், whatsapp குரூப்பில் நீங்கள் Save செய்துள்ள நண்பர்களின் பெயர் காண்பிக்கப்படாது.
அதாவது, whatsapp குரூப்பில் நண்பர்களின் மொபைல் எண் மட்டுமே தெரியும்படியான அம்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் தற்போது whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டால் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Sunday, July 16, 2023
WhatsApp Web
July 16, 2023
WhatsAppல் அறிமுகமாகும் புதிய அதிரடி அம்சம்..
Sunday, February 26, 2023
WhatsApp Web
February 26, 2023
WhatsApp Msg Edit செய்யும்புதிய வசதி - இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!.
தவறுதலாக அனுப்பிய Message! இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!. புதிய வசதியை அப்டேட் செய்யும் வாட்சப்!
ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.
நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது. சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் மெசெஜை டெலிட் ஃபார் மீ அல்லது டெலிட் ஃபார் எவரிஒன் போன்ற தேர்வுகளை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்க முடியும். அதுவும் மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு மணிநேரத்தில் டெலிட் பார் எவரி ஒன் கொடுத்தால் மட்டுமே அந்த மெசெஜை நம்மால் எளிதாக அழிக்கமுடியும்.
வாட்சப் புதிய புதிய அப்டேட்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் ஃஸ்டேட்டஸில் குரல் பதிவுகளை வைக்கும் முறையை வாட்சப் அறிமுகப்படுத்தியது. அதேபோல கணினி அல்லது லேப்டாப்பில் வாட்சப் பயன்படுத்துவோர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை பயன்படுத்தும் முறையை பீட்டா வெர்சன் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒரு கணினியிலோ அல்லது லேப்டாப்பிலோ வாட்சப்பை லாக் அவுட் செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதேபோல நாம் வாட்சப் பயன்படுத்தும் மொபைல் போனில் நெட்வொர்க் அல்லது இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கணிணியில் இருந்தால் போதுமானது. இதனை மல்டி டிவைஸ் பீட்டா வெர்சன் என அழைப்பட்டது. இந்த நிலையில், தற்போது வாட்சப் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதன்படி நாம் ஒரு நபருக்கு தவறுதலாக எழுத்துப் பிழையுடன் பதிவுகள் அனுப்பிவிட்டால் பதறிப் போய் உடனே டெலிட் ஃபார் எவரிஒன் செய்யத் தேவையில்லை. மாறாக நாம் அனுப்பிய பதிவை எடிட் செய்து அதில் இருக்கும் எழுத்துப் பிழைகளை சரிசெய்யவோ அல்லது அந்த சில வார்த்தைகளை நீக்கவோ, சேர்க்கவோ செய்து கொள்ளலாம். நாம் பதிவை அனுப்பிய 15நிமிடங்களுக்குள் இவற்றை எடிட் செய்யும்படியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொபைலில் வாட்சப் பயன்படுத்துவோராக இருந்தால் இந்த வசதியை பெற காத்திருக்க வேண்டும். காரணம் என்னவெனில் தற்போதைய அப்டேட் பீட்டா வெர்சன் வாட்சப்பை இணையதளத்தில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சேவை மொபைலில் கொண்டு வருவதற்கான பணிகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, February 07, 2023
WhatsApp Web
February 07, 2023
சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? WhatsApp விளக்கம்
சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? WhatsApp விளக்கம் How to stay safe on social media? WhatsApp description
உலக இணைய பாதுகாப்பு நாளினை முன்னிட்டு, இணையதளத்தில் பயனாளர்கள் எவ்வாறு தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வாட்ஸ்ஆப், எவ்வாறு சமூக வலைத்தளப் பக்கங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளது. மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதலைக் கொண்டிருக்கிறது.
வாட்ஸ்ஆப்பின் பயனர் வழிகாட்டியானது, ஆன்லைனில் இருக்கும் சிக்கல்களை எடுத்துரைப்பதோடு, நாம் உறங்க வேண்டிய நேரத்தில் கூட உறங்காமல், அதிக நேரம் விழித்திருந்து நமது பொன்னான நேரத்தை ஆன்லைனில் அல்லது நமது செல்லிடப்பேசிகளில் செலவிடுவதால், நமது பாதுகாப்பை அது உறுதி செய்ய உதவுகிறதாம்.
அதற்காக, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிமையான, பயனுள்ள தீர்வுகளை வழங்குவதாகவும் கூறுகிறது. பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் அதாவது முகவரி, செல்லிடப்பேசி எண், டெபிட்/கிரெடிட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை பகிரக் கூடாது.
தனிநபர் தங்களது புரொஃபைல் பிக்சர், கடைசியாக ஆன்லைன் வந்தது, ஆன்லைன் டேட்டஸ், தங்களைப் பற்றி, ஸ்டேட்டஸ் என அனைத்தையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், செல்லிடப்பேசி எண் நம்மிடம் இருக்கும் கான்டாக்ட் ஒன்லி அல்லது யாருமே பார்க்கக் கூடாது என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஆன்லைன் வந்தால் அது யாருக்கெல்லாம் தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதையும் தனிநபர்கள் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்ஆப் பயனாளர்கள் வேண்டுமென்றால் டிரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் செல்லிடப்பேசி திருட்டுப் போனால் இது பயன்படும்.
ஃபார்வார்டு ஆகும் அனைத்துத்தகவல்களையும் உண்மைதானா என்பதை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ்ஆப் கொண்டு வந்திருக்கிறது. எனவே, உண்மை என்று தெரியாத எதையும் யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது.
ஒருவேளை மோசடியான தகவல்கள் ஏதேனும் வந்தால் அது பற்றி பயனாளர்கள் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற மோசடித் தகவல்களுடன் ஒரு லிங்க் இணைக்கப்படும். அதனை கிளிக் செய்தால் உங்கள் அனைத்துத் தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. அந்த தகவல்கள் வரும் எண்ணை தொடர்ந்து அழுத்தினால் பிளாக் அண்ட் ரிப்போர்ட் என்று வரும் அதனை தேர்வு செய்யவும்.
போலி செய்தியா? எப்படி கண்டுபிடிப்பது?
இந்தியாவில் மட்டும் 10 உண்மை கண்டறியும் அமைப்புகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளன. எனவே, அதன் மூலம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். போலியான தகவல்களை பகிராமல் தடுக்கலாம். போட்டோ, விடியோ, குரல் பதிவு என எது பற்றியும் உண்மை கண்டறிந்த பிறகே அதனை முழுமையாக நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, October 01, 2022
WhatsApp Web
October 01, 2022
WhatsAppல் மற்றவர்கள் டெலிட்( Delete for everyone ) செய்த மெசேஜை திரும்ப படிக்க முடியும்.. எப்படி தெரியுமா? - You can read back deleted messages on WhatsApp.. Do you know how?
'How long is delete for everyone on WhatsApp?
How long does the Delete for everyone option last?
Can Delete for everyone message be recovered?
Can I delete WhatsApp message for everyone after 1 hour?
வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை திரும்ப படிக்க முடியும்.. எப்படி தெரியுமா? - You can read back deleted messages on WhatsApp.. Do you know how?
WhatsApp trick: வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை, அதாவது (Delete for everyone)கொடுக்கப்பட்ட மெசேஜை படிக்க விரும்பினால், அதை செய்ய முடியும். அது பற்றி இங்கு பார்ப்போம்.
வாட்ஸ்அப் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். தகவல் பகிர்ந்து கொள்ள எளிதாக இருப்பதால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. மெசேஜிங், ஆடியோ கால், வீடியோ கால், லொகேஷன் சேரிங் வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. சமீபத்தில் கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்கள் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியும் உள்ளது. அதாவது, தங்களுக்கு மட்டும் டெலிட் செய்வது (Delete for me) மற்றொன்று யாருக்கும் காண்பிக்காத படி டெலிட் செய்வது (Delete for everyone) ஆப்ஷன் கொடுப்பது.
அப்படி, Delete for everyone கொடுத்த மெசேஜை படிக்க விரும்பினால், அதை படிக்க முடியும். இதற்கு மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் டவுன்லோடு செய்ய வேண்டும்.
டெலிட் செய்யப்பட்ட மெசேஜை படிப்பது எப்படி?
Step 1: முதலில் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து ‘Get Deleted Messages’ என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
Step 2: அடுத்து இந்த செயலியைப் பயன்படுத்த சில அனுமதிகளை கேட்கும். அதைக் கொடுத்த பிறகு செயலி ஓபன் ஆகும்.
Step 3: வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஏதும் செய்யப்பட்டால், இந்த செயலியைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த செயலி backgroundயில் இயங்குவதற்கான அனுமதி கேட்கும். அதற்கு உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் -ஆப்ஸ் & நோட்டிபிக்கேஷன் சென்று அனுமதி கொடுக்க வேண்டும். இது தவிர, நோட்டிபிக்கேஷன் மற்றும் ஸ்டோரேஜிற்கு அனுமதி கேட்கும்.
மேலும் ஒரு நபரின் வாட்ஸ்அப் பக்கத்தை ஓபனில் வைத்திருக்கும் போது, மெசேஜ் டெலிட் செய்யப்பட்டால் அதை திரும்ப பார்க்க முடியாது.
Monday, August 29, 2022
WhatsApp Web
August 29, 2022
WhatsApp Tricks and Tips | August 2022 | 72p - PDF
WhatsApp is a really straightforward messaging app to use, but there's a lot more going on under the surface than simply allowing you to message your friends and exchange GIFs. There are plenty of fun WhatsApp tricks out there to learn from secret WhatsApp messaging features to convenient ways of customizing your experience so it looks and works better for you.
All the following tips and tricks are great ways to enjoy WhatsApp even more, and entirely for free too.
WhatsApp Tricks and Tips | August 2022 | 72p - PDF
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Thursday, August 25, 2022
WhatsApp Web
August 25, 2022
WhatsAppல் வந்த Linkஐ கிளிக் செய்து ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியை!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து, ரூ.21 லட்சத்தைப் பறிகொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் பணமோசடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் எல்லாவற்றுக்கும் இணையத்தையே நம்பியிருந்தனர். இதைப் பயன்படுத்தி பெரும்பாலான மோசடியாளர்கள் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் மூலம் சாதாரணர்களை குறிவைத்து வலை விரித்து அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாரிச் சுருட்டி ஓட்டம் பிடிக்கின்றனர். அப்படியொரு வாட்ஸ் அப் மோசடிச் சம்பவம் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்த வரலக்ஷ்மி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு வாட்ஸ்அப்பில் அறியாத தொடர்பில் இருந்து (Unknown Contact) லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆர்வமிகுதியில் இவரும் அந்த லிங்கை கிளிக் செய்துவிட, சில நிமிடங்களுக்கு பின் இவரது வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக மெசேஜ் வரத் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளூர் போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
போலீசார் வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான ஒப்புதலை வரலக்ஷ்மி தான் தந்திருக்கிறார் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மோசடி லிங்கை கிளிக் செய்ததும் வரலக்ஷ்மியின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எப்படி லிங்கை கிளிக் செய்தவுடன் பணம் பறிபோனது என்பது குறித்தும், பணத்தை மீட்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
தெரியாத நபர் அல்லது எண்ணிலிருந்து பெறப்படும் இணைப்புகளை (லிங்க்) எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யக் கூடாது. நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் லிங்கின் உண்
மைத்தன்மையை உறுதிப்படுத்தவும். இதைச் செய்வதற்கு அந்த லிங்கின் url ஐ சரியாகச் சரிபார்க்கவும். அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள இணைப்புகளை மட்டும் கிளிக் செய்யவும்.
உதாரணமாக, 'gov.in.co' அல்லது 'co.com' போன்ற பின்னொட்டுகளை கொண்ட லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளைக் கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் தான் அனுப்பப்படுகின்றன.
மேலும் பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
Sunday, August 21, 2022
WhatsApp Web
August 21, 2022
WhatsAppல் இதுவரை அறியாத வசதிகள்.. அதன் பயன் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!
வாட்ஸ்அப் பிரபலமான சமூகவலைதளம் ஆகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. பிரைவசி செட்டிங்கில் மாற்றங்கள் கொண்டு வருகிறது. அந்தவகையில் அண்மையில் 3 வசதிகளை அறிமுகப்படுத்தியது.
நோட்டிபிகேஷன் கொடுக்காமல் குரூப்பிலிருந்து வெளியேறுவது, ‘View once’ மெசேஜை ஸ்கிரின்சாட் எடுக்க முடியாது, online status காண்பிப்பதை நிர்வகிப்பது என 3 அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதேபோன்று கணினி, லேப்டாப்பிற்கு என்று நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டது.
வாட்ஸ்அப்பில் பயனர்களின் தேவைக்கு ஏற்ப பல வசதிகள் உள்ளன. ப்ளூ டிக், ஆன்லைன் ஸ்டேடஸ் நிர்வகிப்பது எனப் பல உள்ளன. அந்தவகையில் ப்ளூ டிக் ஆப்ஷன் ஆப் செய்தால், மற்றவர்கள் அனுப்பிய செய்தி நீங்கள் படித்து விட்டீர்கள் என்றாலும் அது அவர்களுக்கு தெரியாது. ப்ளூ டிக் ஆப்ஷன் நிர்வகிப்பதில் சிக்கல் இருந்தால், வேறு சில வழிகளும் உள்ளது. அனுப்பியவருக்கு தெரியாமல் செசேஜை படிக்க சில வழிகள்.
நோட்டிபிகேஷனில் செசேஜ் பார்ப்பது
இது எளிமையான வாட்ஸ்அப் ட்ரிக் என்று கூறலாம். செசேஜ் வந்தவுடன் நோட்டிபிகேஷனில் யார் அனுப்பியுள்ளார்கள் என தெரிந்து விடும். அந்தவகையில் நோட்டிபிகேஷன் பாரில் செசேஜை ஸ்லைடு டவுன் செய்து படிக்கலாம். அப்படி செய்யும்போது, அனுப்பியவருக்கு தெரியாமல் மெசேஜ் படிக்க முடியும்.
வாட்ஸ்அப் பாப்-அப்
வாட்ஸ்அப் பாப்-அப் ‘WhatsApp Pop-ups’ வசதி பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மெசேஜ் நோட்டிபிகேஷனுடன், வாட்ஸ்அப் பாப்-அப் நோட்டிபிகேஷனும் வரும்.
இதைப் பயன்படுத்த: வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று செலக்ட் நோட்டிபிகேஷன் ஆப்ஷனுக்குள் சென்று பாப்-அப் நோட்டிபிகேஷன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின் 3 ஆப்ஷன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். Only when the screen is “off”, Always show pop-up, or Only when screen is “on”. இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் விட்ஜெட்
வாட்ஸ்அப் விட்ஜெட் (WhatsApp widget) ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது. வாட்ஸ்அப் விட்ஜெட்டை ஹோம் ஸ்கிரினில் வைத்து வாட்ஸ்அப் செயலியை திறக்காமல் மெசேஜை படிக்கலாம்.
read receipts ஆப்ஷன்
பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அனுப்புநரின் செய்திகளை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை என்றால் read receipts ஆப்ஷனை ஆப் செய்து விடலாம்.
இதற்கு, வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று Open Accounts ஆப்ஷனுக்குள் சென்று பிரைவசி பட்டனை செலக்ட் செய்து turn off the read receipt ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

Thursday, August 04, 2022
WhatsApp Web
August 04, 2022
இனி ஸ்மார்ட்ஃபோனே இல்லாமல் WhatsApp பயன்படுத்தலாம்.. அறிமுகமாகிடுச்சு புதிய அப்டேட்..!
WhatsApp: இனி ஸ்மார்ட்போனே இல்லாமல் WhatsApp பயன்படுத்தலாம் என்ற புதிய அப்டேட்டை WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp முதன்மையானதாக உள்ளது.
WhatsAppன் உரிமையாளர்கள் தங்கள் பயனர்களை கவர்ந்திழுக்க மற்றும் அவர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க தளத்தை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை நீங்கள் உங்கள் போனில் மட்டுமே WhatsAppஐ பயன்படுத்தி வந்தீர்கள் ஆனால் இப்போது உங்கள் பிசி அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம், அதுவும் போனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம் என WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டிகள் வாய்ந்த தொழில்நுட்ப உலகில் WhatsAppன் தாய் நிறுவனமான மெட்டா அடிக்கடி புதுப் புது அப்டேட்களை அடுக்கடுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வாட்ஸ்அப் இல்லாமல் போன் அம்சம் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பயனர்கள் தொலைபேசியில் ஆன்லைனில் இல்லாமல் ஒரே நேரத்தில் நான்கு இணைக்கப்பட்ட சாதனங்களில் WhatsApp ஐப் பயன்படுத்தலாம். எளிமையான சொற்களில், நீங்கள் உங்கள் மொபைலில் பிஸியாக இருந்தாலும் அல்லது உங்கள் மொபைலை அணைத்திருந்தாலும் கூட, உங்கள் கணினியில் WhatsApp இன் இணைய பதிப்பைப் பயன்படுத்தலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் செயலில் உள்ள இணைய இணைப்பு இல்லாமல் உங்கள் பிசி, டேப்லெட், லேப்டாப் அல்லது வேறு எந்த சாதனத்திலும் WhatsApp இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம் என்பது எப்போதோ அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
ஆனால் அனைத்து பயனர்களும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், மற்ற சாதனங்களில் WhatsAppஐ இணைக்க தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தொலைபேசி இல்லாமல் இயங்குதளத்தைப் பயன்படுத்த அந்த சாதனத்திலிருந்து வெளியேற வேண்டியதில்லை. நீங்கள் வெளியேறினால், உங்கள் பிசி/லேப்டாப்பில் WhatsAppஐ இணைக்க உங்கள் மொபைலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையில், மொபைல் போனே இல்லாமல் WhatsAppஐ பயன்படுத்தலாம். வழிமுறைகள்;
முதலில் WhatsApp Web, web.whatsapp.com க்குச் செல்லவும். WhatsApp டெஸ்க்டாப்பிலும் ஓபன் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணினியில் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளுடன் திரையில் QR குறியீட்டைக் காணலாம்.
பின்வருவனவற்றைப் பின்பற்றி உங்கள் தொலைபேசியில் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்: WhatsApp அமைப்புகள் கணைக்டேட் டிவைஷ் ஆப்ஷனில் ஒரு சாதனத்தை இணைக்கவும்.
'கணைக்ட் டிவைஷ்' என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு ஸ்கேனர் திறக்கும், உங்கள் மொபைலின் ஸ்கேனரை உங்கள் கணினியில் உள்ள WhatsApp QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
வாட்ஸ்அப் இப்போது உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது, நீங்கள் வெளியேறவில்லை தவிர, எந்த நேரத்திலும் உங்கள் ஃபோன் இல்லாமல் அதைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் தொலைபேசி மூலம் உங்கள் கணினியில் WhatsApp ஐ இணைக்க மேலே உள்ள படிகளை மீண்டும் பின்பற்ற வேண்டும்.
இந்த புதிய முறையினை தொழிநுட்ப வல்லுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.