Breaking

Showing posts with label Half Yearly Examination. Show all posts
Showing posts with label Half Yearly Examination. Show all posts

Tuesday, December 30, 2025

Sunday, December 14, 2025

Monday, December 01, 2025

Thursday, January 02, 2025

Tuesday, December 24, 2024

Saturday, December 21, 2024

Thursday, December 19, 2024

Monday, December 16, 2024

Saturday, December 14, 2024

Thursday, December 12, 2024

Friday, December 06, 2024

Wednesday, December 04, 2024

Saturday, November 30, 2024

Sunday, November 24, 2024

Tuesday, December 26, 2023

December 26, 2023

தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு எப்போது?: வெளியானது "அப்டேட்"

தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு எப்போது?: வெளியானது "அப்டேட்"

தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி 2ல் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல், அதனை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்தினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி 2ல் நடத்தப்படும். பயிற்சிக்காக பள்ளிகள் அளவிலாவது தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சியில் வாலிபால் போட்டிகளும், வேலூரில் செஸ் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இவை மாணவர்களின் விளையாட்டு திறன்கள் மேம்பட உதவிகரமாக இருக்கும். 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது கற்றலில் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, December 21, 2023

December 21, 2023

அரையாண்டு தேர்வில் இரட்டை வினாத்தாள் பள்ளிக் கல்வி தனி ரூட்

அரையாண்டு தேர்வில் இரட்டை வினாத்தாள் பள்ளிக் கல்வி தனி ரூட்

தமிழகத்தில் நடக்கும் அரையாண்டு தேர்வில் தொடக்க கல்விக்கு உட்பட்ட 6-8 ம் வகுப்புக்கும், பள்ளி கல்விக்கு உட்பட்ட 6,- 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனி வினாத்தாள் வழங்கப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது.

மாநில அளவில் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்த பொது வினாத்தாளை பின்பற்ற கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்படு இருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் முடிவால் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலித்து மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.


ஆனால், தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட நடுநிலை பள்ளிகள் (6 முதல் 8 ம் வகுப்பு) உட்பட அனைத்து வகுப்புகளிலும் மாநில வினாத்தாள் வழங்கப்படுகிறது.

அதேநேரம், உயர் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 6, - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட வினாத்தாள் வழங்கப்படுகிறது. ஒரே வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்குவதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பள்ளி கல்வி, தொடக்க கல்விக்கு தனித்தனி இயக்குநர் உள்ளனர். அவர்கள் உத்தரவுப்படி தேர்வு நடந்தாலும் ஒரே பாடத் திட்டங்களை பயிலும் மாணவர்களுக்கு இருவேறு வினாத்தாள் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இரண்டு வினாத்தாள் முறையால் மாநில அளவில் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறனை எவ்வாறு மதிப்பிட முடியும்.

சிவகங்கையில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாவட்ட வினாத்தாளில் கணித தேர்வில் வினாவிற்கு உரிய படமின்றி கேட்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தவிர்க்க இனிமேலாவது ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்த கல்வித்துறை 'கறார்' உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.
December 21, 2023

அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா?

அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா?

தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வுகளை ஜனவரியில் நடத்தி கொள்ள ஆலோசனை திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரியில் பள்ளிகள் திறப்பின் போது விடுபட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த திட்டம்

எனவே திட்டமிட்டபடி டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். சில தனியார் பள்ளிகள் டிசம்பர் 3 புதன் கிழமை வரை விடுமுறை விட திட்டமிட்டுள்ளன. எனவே பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறை நாட்கள் குறைந்து விடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.

Monday, December 11, 2023

December 11, 2023

மாநில அளவில் பொது வினாத்தாள் மூலம் தேர்வு - ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு



மாநில அளவில் பொது வினாத்தாள் மூலம் தேர்வு - ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

இரண்டாம் பருவத் தேர்வில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் மூலம் தேர்வு- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு- முதலமைச்சருக்கு மனு!

Kootani Letter

CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog