Breaking

Showing posts with label RBI. Show all posts
Showing posts with label RBI. Show all posts

Friday, June 06, 2025

Saturday, February 03, 2024

February 03, 2024

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!



KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் ஆா்பிஐ இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கேஒய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும் அறிமுகமில்லாத நபா்களிடம் பொதுமக்கள் பகிரக் கூடாது.

இது தொடா்பாக தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபா்கள் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவா்களிடம் டெபிட், கிரெடிட் காா்டு தகவல்கள், கடவுச்சொல், ஓடிபி உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.

கைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி மட்டுமின்றி மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இதுபோன்ற மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றுகூறி பதற்றத்தை உண்டாக்கி மோசடி செய்யும் விஷமிகளும் உள்ளனா்.

எனவே, இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

KYC புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது அல்லது வங்கி சேவைக்கான தொடா்பு எண்ணை பயன்படுத்துவதே முறையான செயல்முறையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 31, 2024

January 31, 2024

Paytmன் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி



பேடிஎம்மின் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி

விதிமீறல்களில் தொடந்து ஈடுபட்டதால் பேடிஎம் மீது இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.

யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முன்னர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேடிஎம், வங்கி சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாதது தணிக்கையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

புதிதாக வைப்புநிதி பெறவோ, கடன் பரிவர்த்தைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது என்றும் முன்கூட்டிய பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட சேவைகளை வழங்க பேடிஎம்-க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்.29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது,

வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் வைத்துள்ள தங்கள் பணத்தை இருப்பு உள்ள வரை திரும்ப பெற்றுக்கொள்ள இயலும் எனவும் ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்தவும் பணப் பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது

Thursday, November 16, 2023

November 16, 2023

Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!



Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பு

Reserve bank of india (RBI) வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி! Reserve bank of india (RBI) interest rate hike, teachers and government employees shocked!

அனைத்து வங்கிகளிலும் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு அக்டோபர் மாத ஊதியத்தில் அதிகமாக பிடித்ததால் அதிர்ச்சி 7 % வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு தற்போது வீட்டுக்கடன் 9.5 % வட்டிவீதம் அதிகரிப்பால் தோராயமாக 10 லட்சத்திற்கு ரூ.2000 வட்டி அதிகமாக கட்ட வேணடடியது உள்ளது. அதனால் ஒருவர் 500000 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றிருந்தால் 10,000 அதிகமாக வட்டி பிடித்தம் செய்யய்பப்டுள்ளது. இதனால் மாத ஊதியத்தில் அதிகமாக செலவழிக்க வேண்டிய உள்ளது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வட்டி விகிதம் தீடீர் அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி ஏற்கனவே வீட்டு கடன் பெற்றோர் இருமடங்கு வட்டி கட்டி வரும் நிலையில் இப்பொழுது கூடுதலாக வட்டி கட்டுவது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்கின்றனர். மேலும் நகைகக்கடன் விவசாயக்கடனிலும் வட்டி 8 லிருந்து 8.5 % உயர்ந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog