private medical colleges
May 29, 2023
Showing posts with label private medical colleges. Show all posts

Monday, May 29, 2023
Sunday, April 16, 2023
Which is the No 1 medical colleges in Tamil Nadu?
April 16, 2023
தமிழகத்தில் மேலும் 2 மருத்துவ கல்லுாரிகள்...
தமிழகத்தில் மேலும் 2 மருத்துவ கல்லுாரிகள்... -
2 more medical colleges in Tamil Nadu...
தமிழகத்தில் 300 இடங்களுடன், இரு தனியார் மருத்துவ கல்லுாரிகள் துவக்க, தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மேலும், சென்னை இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், 50 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டம், நந்தா மருத்துவ கல்லுாரியில், முதல் ஆண்டு சேர்க்கை துவக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
நந்தா மருத்துவ கல்லுாரி, ஈரோடில் இருந்து 6 கி.மீ., துாரம் உள்ள பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கல்லுாரியில், 150 இடங்களுக்கு சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைப்பில் உள்ள இக்கல்லுாரியின் மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு தகுதி மற்றும் இடஒதுக்கீடு விதிகளின்படி நடத்தப்படும். தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சார்பில், பெரம்பூரில் உள்ள சீனிவாசன் மருத்துவ கல்லுாரியில், 2021ல் மாணவர் சேர்க்கை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, 150 இடங்களுடன், புதிதாக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் மருத்துவமனை துவக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மற்றும் முதுகலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 15, 2023
private medical colleges
April 15, 2023
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை, அறுவை அரங்கம், மயக்க மருந்து தொழில்நுட்பம் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், 2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர், மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர், ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர், எலும்பியல் தொழில்நுட்பவியலாளர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த சேர்க்கை சம்பந்தமான விவரங்களை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக் கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவல கத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, September 10, 2022
What is the lowest fee of private medical college?
September 10, 2022
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணம்: மறுஆய்வுக்கு உத்தரவு
நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில் பாதி இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டணத்தை வசூலிக்கும்படி, தேசிய மருத்துவ கமிஷன், 2022 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, போரூர் ராமச்சந்திரா, ஆதிபராசக்தி, பி.எஸ்.ஜி., உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைகளும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன.'அரசு கல்லுாரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை, தனியார் கல்லுாரிகள் வசூலிப்பது சாத்தியமற்றது; வசூலித்தால், கல்லுாரிகளை நடத்த முடியாது' என கூறப்பட்டது.
பொருந்தும்
மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தேசிய மருத்துவ கமிஷன் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டியதில்லை. தேசிய மருத்துவ கமிஷனின் உத்தரவு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.இடங்களின் எண்ணிக்கை மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கான கட்டணங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணங்கள், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக உள்ளன.சில மாநிலங்களில் 15 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களாகவும், 85 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 30 சதவீதம் மட்டுமே உள்ளன.எனவே, 2022 பிப்ரவரியில் பிறப்பித்த உத்தரவை, தேசிய மருத்துவ கமிஷன் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அதிகாரம்
தற்போதைய சட்டத்தில், 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தேசிய மருத்துவ கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இரண்டு வகையான மாணவர்களுக்கு இடையில், கட்டண விகிதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால், மாணவர்களின் தகுதியை பலி கொடுத்ததாகி விடும்.தகுதி பட்டியலில் கீழே இருப்பவர்கள், அதிக கட்டணத்தை செலுத்த முன்வர மாட்டார்கள். அதனால், அந்த இடங்கள் காலியாக இருக்கும். அதனால், கல்வி நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் தான் இழப்பு.
மீண்டும் பரிசீலனை
வெவ்வேறு மாநிலங்களில் விபரங்களை சேகரித்து, விரிவான பணிகளை மேற்கொண்டு இருந்தாலும், சில அம்சங்களை, நிபுணர்கள் குழு பரிசீலனைக்கு எடுக்கவில்லை.நிபுணர்கள் குழு பரிந்துரை அளிக்கும் போது, இரண்டு வகையான மாணவர்களுக்கு இடையே கட்டண விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், தகுதி பலியாகி விடும் என்பதை பரிசீலிக்கவில்லை.எனவே, மீண்டும் பரிசீலித்து, புதிய உத்தரவை, விரைவில் தேசிய மருத்துவ கமிஷன் பிறப்பிக்க வேண்டும். அதுவரை, தற்போது இருக்கும் கட்டண விகிதத்தை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.