Breaking

Showing posts with label TET/TRB. Show all posts
Showing posts with label TET/TRB. Show all posts

Wednesday, November 24, 2021

November 24, 2021

TRB தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

TRB தேர்வு:

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து TRB தேர்வு வாரியமும் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்து தேர்வு தேதியை வெளியிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் அந்த தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

Wednesday, October 20, 2021

October 20, 2021

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், டிஆர்பி நடத்த உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று முன்தினம் இரவு அரசாணை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.

2022-ம் ஆண்டு வரை

இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும்.

மேலும், மனிதவள மேலாண்மைத் துறை கடந்த செப்.13-ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 31-ம்தேதியாகும். தற்போது வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்படும். அதேபோல, இணையவழி தேர்வு தேதியும் தள்ளிப்போகும் சூழல் உருவாகும்.

முதல்வருக்கு நன்றி

தங்கள் கோரிக்கையை ஏற்று, வயதுவரம்பை உயர்த்த ஆணையிட்டமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா,பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் ஆகியோருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் மற்றும் 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்

Tuesday, October 19, 2021

October 19, 2021

முதுநிலை ஆசிரியர் நியமனம்: வயதுவரம்பில் தளர்வுகள் அதிகரித்து அறிவிப்பு

"பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதுவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வு 2022 இறுதிவரை மட்டுமே பொருந்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளியின் ஆசிரியர் பணி நியமனத்திற்கான எந்தவித நேரடி நியமனத்திற்கான அறிவிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பணி நியமனத்திற்கான உச்ச வயதுவரம்பினை பணி அறிவிப்புக்காக காத்திருந்த பலர் தாண்டிவிட்டனர். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 40 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனப் பல தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதுவரம்பினை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 முதல் 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45 முதல் 50 ஆகவும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வயது வரம்பு நீட்டிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். மேலும் இந்த உச்ச வயது வரம்பினை அறிவிப்பை வரும் 31.12.2022 அன்று வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்குப் பொருந்தும்.

2023 ஜனவரி 1 முதல் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி கடைசி தேதி அக்டோபர் 17 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கடைசி தேதியை அக்டோபர் கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு ஆணை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. "

Friday, October 08, 2021

Tuesday, October 05, 2021

October 05, 2021

PG TRB தேர்வுக்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது, கட்டண விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 2021-ல் 40 வயது நிரம்பியிருக்கக் கூடாது. Kaninikkalvi.blogspot.com

கணினித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெறும். கணினித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்குத் தகுதி பெறுவர். இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் உரிய விவரங்கள், புகைப்படத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக்தில் அடுத்த வார இறுதிக்குள் சமர்ப்பித்து, பயிற்சி வகுப்புக்குப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55938 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்''.Kaninikkalvi.blogspot.com

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
October 05, 2021

TNTEU - கல்லூரிகளில் B.Ed/M.Ed பட்ட வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசு முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - நாள்: 04.10.2021

TNTEU இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் B.Ed/M.Ed பட்ட வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசு முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - நாள்: 04.10.2021

பின்பற்ற வேனிடிய வழிகாட்டு நெறிமுறைகள்:

1. B.Ed/M.Ed பட்ட வகுப்பினை முடித்த மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் (Mark Sheet and Provisional or Convocation & Transfer Certificate) நகல்களை எடுத்து வரவேண்டும்.

2. B.Ed/M.Ed பட்ட வகுப்பினை பயின்ற கல்லூரியிலிருந்து தமிழ் வழியில் பயின்றதற்கான Bona-fide Certificate - ஐ பெற்று வருதல் வேண்டும்.

3. தமிழ் வழிச்சான்றிதழ் பெறுவதற்கு, மாணாக்கர்கள் தங்களது கோரிக்கை கடிதத்துடன், வரிசை எண் 1 & 2 -இல் மேற்குறிப்பிட்ட இணைப்புகள் மற்றும் ரூ.150/-க்கான "The Registrar, Tamil Nadu Teachers Education University, Chennai - 600 097". என்ற முகவரிக்கு பெறப்பட்ட வங்கி வரைவோலையுடன் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்து, காலதாமதமின்றி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Saturday, October 02, 2021

October 02, 2021

முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத, தேர்வு வாரியம் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த ஜெகன்னாதன் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 199 பேர் வாழ் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மேலும் நீடித்து வந்தது.

தற்போது, இந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதிலும் 66 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் முழுமையான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களும் வாழ்நாள் முழுவதும் மேற்கண்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியாத நிலைக்கு தடை விதித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Friday, September 24, 2021

September 24, 2021

TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - G.O.(Ms) No. 08, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated 21.09.2021 - Tamil Nadu Gudielines for conducting examinations for Persons with Disabilities, 2021

September 24, 2021

TRB தேர்வுகளின் வினாத்தாள் தயாரிப்பு பணி - கல்லூரிக்கல்வி இயக்கத்தின் புதிய உத்தரவு

TRB தேர்வுகளின் வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வுப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், காலதாமதம் செய்யாமல் உடனடியாக வர வேண்டும்.
காலதாமதம் செய்யும் கல்லூரிகள்/பேராசிரியர்கள் மீது நடவடிக்கை - கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவு..

Wednesday, September 22, 2021

September 22, 2021

ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வழக்கு

பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.


ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளநிலை, முதுநிலையில் வெவ்வேறு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க இயலவில்லை. எனவே இளநிலை, முதுநிலையில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற அரசாணையை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
September 22, 2021

TRB - உதவியாளர் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு முடித்துவைப்பு

தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு


தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண்பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019-ல் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தது.


அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளை வகுத்து நேற்று (செப். 21) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.


இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், தேர்வர்களைவிட உதவியாளர்களின் கல்வித் தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

Tuesday, September 21, 2021

September 21, 2021

PG TRB - ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு ஆணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு.: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது.
பரமக்குடி சுரேஷ்குமார் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஆணையரும் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Saturday, September 18, 2021

September 18, 2021

ஆசிரியர் பணிநியமனத்தில் வயது வரம்பைரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ் நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்தெரிவித்துள்ளதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ் நாள் சான்றிதழாக மாற்றி மகிழ்ச்சிபகிர்வதற்குள்பணி நியமனத்திற்குவயதுவரம்பு குறைக்கப் பட்டதால் ஆசிளிக்கின்றது ஆசிரியர் வய ரியர்கள் மன உளைச்சலில் உள்ளார்கள். லட்சம் பேர் ஆசிரியர் தேர்வில் தேர்ச் சிப்பெற்றும் பணி கிடைக் காமல் கூலி வேலை செய் துகொண்டிருக்கிறார்கள். இந்தகல்வியாண்டில்5லட் சம்புதிய மாணவர்கள்சேர்ந் துள்ள தால் படிப்படியாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் 2009ல்கொண்டுவந்தபோது பல மாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர் வும் ஒன்று தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப் பட்டது.நாடுமுழுவதும்லட் சக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் சான்றி தழ் 7 ஆண்டுகள் என்பதை வாழ்நாள் சான்றிதழாக மாற்றியது மனமகிழ்ச்சிய துவரம்பு 40 இடஒதுக்கீட் டினருக்கு 45 வயது என்று நிர்ணயித்ததால் ஆசிரியர் பணிகனவாகிபோனது.வய துவரம்பை ரத்துசெய்து ஏற் கனவே இருந்தபடி பழைய முறையினையே பின் பற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்அதில் தெரிவித்துள் ளார்.

Friday, September 17, 2021

September 17, 2021

PG TRB - ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது.
முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Due to Technical and Server errors, the commencement of online application for Post Graduate Assistant / Physical Director Grade-l / Computer Instructor Grade-I recruitment will be floated on 20.09.2021. Inconvenience is regretted.
September 17, 2021

ஆசிரியா் தோ்வில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள்: உரிய விதிகளை வகுக்காமல் தோ்வை அனுமதிக்க முடியாது உயா் நீதிமன்றம்

ஆசிரியா் பணிகளுக்கான தோ்வில் விழித்திறனற்றவா்களை பங்கேற்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியா் தோ்வு வாரியம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை நடத்தியது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விழித்திறனற்றவா்களுக்கு தோ்வு எழுத உதவியாளா்களை நியமிக்க கோரியும், தோ்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் கடந்த 2019-இல் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், விழித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுதொடா்பாக வழிகாட்டுதல் விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரா் தரப்பில், ஆசிரியா் தோ்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தோ்வில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையிலான எவ்வித வழிகாட்டுதல்கள் விதிகளையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.


இதைத்தொடா்ந்து, ஆசிரியா் தோ்வில் விழித்திறனற்றவா்கள் பங்கேற்கும் வகையில் தகுந்த வழிகாட்டுதல் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாதென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
September 17, 2021

PG TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் மீண்டும் ஏமாற்றம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 1-ம் தேதி அன்று தொடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மார்ச 1-ம் தேதி தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.


இந்நிலையில், 2,207 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9-ம் தேதி அன்று வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப். 16 முதல்அக். 17-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து, நேற்று காலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற தேர்வர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு ஏதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இல்லை. மாலை 6 மணி வரையிலும் இதேநிலைதான் நீடித்தது.

Total Pageviews

Search This Blog