Breaking

Showing posts with label HM Promotion. Show all posts
Showing posts with label HM Promotion. Show all posts

Sunday, February 18, 2024

February 18, 2024

பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?



4% Reservation in Promotion - Will the Expectations of Disabled Govt Servants Fulfilled? - பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காகவும், சமூக நீதிக்காக பாடுபடும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்தும் தமிழகத்தில் இதுவரை நடைமுறைப் படுத்தாதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பாரா என எதிர்பார்த்துள்ளனர் மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34-இன் படி மாற்றுத்திறனாளிகளின் சம உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் 2021-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியது.



அதன்படி மத்திய அரசு பணியிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தீர்ப்பை ஏற்று ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.



ஆனால், சமூக அக்கறையுடன் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் திமுக அரசு இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் சில மாற்றுத் திறனாளி அரசு அலுவலர்கள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 % இட ஒதுக்கீடு 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என 2023 ஜனவரியில் தீர்ப்பு வழங்கினார். ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டிய தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் 7 மாதமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது.

இதனால் தமிழகத்திலுள்ள மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக மன வேதனையுடன் உள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் கூறியதாவது: “உடலில் ஊனமுடையவர்களை வார்த்தைகளில் கூட ஊனப்படுத்தி விடக்கூடாது என எண்ணிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க அரசாணை பிறப்பித்தார்.

அவரது கொள்கை வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு 4% இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.” என்றனர்

Friday, March 24, 2023

March 24, 2023

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இனிமேல் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் வரவே முடியாது என்றும், பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே வரமுடியும் என்றும் வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

பட்டதாரி ஆசிரியராக இருக்கும் ஒருவர் தம்முடைய பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதுகலை ஆசிரியர்/ உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். (உரிய தகுதியைப் பொறுத்து)

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவுடன் அந்தத் தேதியை அடிப்படையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். @kaninikkalvi

பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்திற்காக அவருக்குக் கிடைத்தது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு.

ஆனால் இவ்வளவு நாள்களாக விதிகளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தார். அவ்வாறு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும் வந்தார். ஆனால் அவ்வாறு வருவது அவருக்கு பதவி உயர்வு அல்ல. பணிமாறுதல் மட்டுமே. ஏனெனில் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இரண்டும் சமமான ஊதிய அமைப்பைக் கொண்டவை. பட்டதாரி ஆசிரியராக இருந்து அந்தப் பணிக்காலத்தை வைத்து முதுகலை ஆசிரியராகச் சென்றவர் ஒரே நேரத்தில் அங்கு பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணிக்காலத்தை வைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலிலும் இடம் பெறுகிறார். இங்கு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றாத காலத்தையும் கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிமாறுதலுக்கும் வருகிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.

அதனால் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக வரக்கூடாது என்ற தீர்ப்பினால் அவர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லை; அதே போல் அவர்களுக்கு உரிமையானது எதையும் இழக்கவில்லை.

இதற்கு முன்னர் ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 500 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற்றார்கள். 300 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வெறும் 50 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயன்பெற்றார்கள். அதில் 250 பேர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களாக இருந்து பணிமாறுதலில் வந்துவிட்டனர்.

இனிமேல் என்ன ஆகும்? @kaninikkalvi ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர்களாகவும், 300 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆகமொத்தம் 800 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மொத்தப் பணிக்காலத்திலும் ஒரு பதவி உயர்வைக் கூட காணாமல் பணிநிறைவு அடைந்த நிலை இனிமேல் வராது.

அவ்வகையில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லாமல் அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தங்கள் பணிக்காலத்தில் ஒரு பதவி உயர்வு பெற்று ஊதிய உயர்வினைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நல்ல நிலையை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை நிலை என்னவென்பதை அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Friday, October 21, 2022

October 21, 2022

தமிழ்,ஆங்கிலம், கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல்!



தமிழ்,ஆங்கிலம், கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல்!

Tamil covering letter Proceedings click here
Tamil Promotion Panel list - click here
Tamil  promotion  Proceedings click here

English covering letter  proceedings - click here
English Promotion Panel- click here

Maths  covering letter proceedings - click here
Maths Promotion Panel- click here

Science covering letter proceedings - click here
SciencePromotion Panel- click here

Social science covering letter proceedings - click here
Social sciencePromotion Panel- click here

Monday, September 12, 2022

September 12, 2022

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியல்

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 31 .5 .2008க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள்] முன்னுரிமை பட்டியல்

Eligible Middle School Headmaster Priority List for District Education Officer Promotion

CLICK HERE TO DOWNLOAD

Monday, August 29, 2022

August 29, 2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றத்தின் உத்தரவு - Date : 29-08-2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Daily Status

Madras High Court

In The Court Of The Hon'ble Justice CNR Number :HCMA010984882022

Case Number :WP/0017500/2022

A.Rajavelu Versus School Education Department

Date : 29-08-2022

Business : d

Disposal Date : 29-08-2022

The Hon'ble Justice

Saturday, August 27, 2022

August 27, 2022

வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல்

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2022 நிலவரப்படி வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


MSHM to BEO 2022 Panel - CLICK HERE TO DOWNLOAD

Thursday, August 25, 2022

August 25, 2022

தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக பயிற்சி - 9.5 கோடி ஒதுக்கீடு : அன்பில் மகேஷ் கருத்து

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்துக்காக ஒன்பதரை கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போது, மாணவர்களின் நலனுக்காக சில இடங்களில் பின்வாங்குவதில் தவறில்லை. போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு விரைவில் நனவாகும்.

அதற்காக காவல்துறை முழு ஈடுபாட்டுடன் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 22, 2022

August 22, 2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு



தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் 24.08.2022க்கு ஒத்திவைப்பு

Daily Status

Madras High Court

In The Court Of:The Hon'ble Justice CNR Number :HCMA010984882022

Case Number:WP/0017500/2022

A.Rajavelu Versus School Education Department

Date: 22-08-2022

Business : at 2.15 p.m.

Next Purpose : PART HEARD AT 2.15 P.M.

Next Hearing Date : 24-08-2022

The Hon'ble Justice

Friday, July 22, 2022

July 22, 2022

HM Promotion - தடை தொடர்கிறது!

HM Promotion - தடை தொடர்கிறது!

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு 05.08.2022க்கு ஒத்திவைப்பு - கலந்தாய்வுக்கு தடை தொடர்கிறது!

Total Pageviews

Search This Blog