Breaking

Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts
Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு, சமூகநலன், காவல் துறை சாா்பில் ஆக.12-ஆம் தேதி முதல் விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஆக.11-ஆம் தேதி விழிப்புணா்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், ஆக. 12 முதல் 19 வரை மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணா்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை: பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், பற்றாக்குறைகள், குழந்தை பருவ நோய்கள், தாமதமான வளா்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்தும் அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும். வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணா்வு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக நலத்துறை: சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுதல், குழந்தை திருமண தடை சட்டம், மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல், இளஞ்சிறாா் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். காவல்துறை: போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மேற்கூறியவை மட்டுமின்றி, மாணவா்களுக்கான அவசர உதவி எண் - 1098, பள்ளிக் கல்வித்துறையின் மாணவா் உதவி எண் 14417 ஆகியவை குறித்தும் தெரியப்படுத்தப்படவுள்ளது.

ஆக. 11-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணா்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும். போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கான கட்டுரை, ஓவியம், வினா- விடை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

Thursday, July 28, 2022

July 28, 2022

1920-இல் பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டம்: தமிழக அரசின் உத்தரவில் தகவல்

1920-இல் பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டம்: தமிழக அரசின் உத்தரவில் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது. இது தொடா்பான தமிழக அரசின் உத்தரவு: ஏழை, எளிய சமூகக் குழந்தைகளின் காலடிகள் கல்விச் சாலையை எட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பள்ளியில் உணவளிக்கும் திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது, அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம். மன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. 1920 செப்.16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. பின்னா், சேத்துப்பட்டு, மீா்சாகிப்பேட்டை பகுதிகளில் இயங்கிய மேலும் நான்கு பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக, ஐந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது 811-லிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே 1,671 ஆக உயா்ந்தது. 1957-இல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வா் காமராஜா் தொடக்கி வைத்தாா். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.18 என்ற அளவில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை 1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடக்கப்பட்டது. சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. பின்னா் வாரத்துக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டது. சட்டப் பேரவையில் 1998-ஜூலை 23-இல் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்பின், 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தைத் தொடா்ந்து, காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

"வேலை செய்ய கூடாது" - ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு



வேலை செய்ய கூடாது" - அரசு ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் செல்வ கதிரவன் என்பவர் மாலை 4.15 க்கு மேல் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியை உமா 4.15 மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது என கூறியுள்ளார். இதற்கு கதிரவன் மறுப்பு தெரிவித்ததால் தலைமை ஆசிரியை உமா, இளநிலை உதவியாளர் கதிரவனை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரவன் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி வரவழைத்து பள்ளி கதவை திறந்து விட்டுள்ளனர்.

Monday, July 25, 2022

July 25, 2022

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

*பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் :

பள்ளிக்கல்வித்துறை!!

ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

*மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது.

Friday, July 22, 2022

July 22, 2022

280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவிகள், மாணவர்கள் என தனித்தனியாக பள்ளிகளும், இருபாலரும் பயிலும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறித்து கேரள அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதையும் படிக்க | 72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிகள்

கேரளாவில் மகளிர் பள்ளிகள் 280, ஆண்கள் பள்ளிகள் 164 என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டு முதல் (2023-2024) கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு அவற்றை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குழந்தை உரிமைகள் ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கழிவறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இணைக்கல்வியின் அவசியம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | Announcement of Joint Entrance Examination (Main) – 2022 Session 2 (July 2022) - Reg

இந்த புதிய செயல் திட்டம் அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து 90நாட்களுக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Wednesday, July 13, 2022

July 13, 2022

அரசுப் பள்ளியில் மோதல் 12 மாணவர்கள் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 12 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.

இதில், 2 மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் பள்ளியிலும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாகவும், அதுதொடர்பான பிரச்சினையில் மோதல் நடந்ததும் தெரியவந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து டிசி கொடுத்து நீக்குவது எனவும், 12 மாணவர்களை 1 மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது எனவும் முடிவு செய்து அறிவித்தனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் 10-ம் வகுப்பும் மற்றவர்கள் 12-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

Tuesday, July 05, 2022

July 05, 2022

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா: சிறப்பாக விமர்சனம் செய்தால் அயல் நாட்டு சுற்றுலா - தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என்றும், இதில் சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அயல் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்:

மிஸ்டர் பீன் தெரியாத குழந்தைகள்

உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் கேட்டபோது, சார்லி சாப்ளினை அவனுக்குத் தெரியவில்லை. இன்றைய குழந்தைகளுக்குப் பிடித்தமான மிஸ்டர் பீன்? அவரையும் தெரியவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள சிறார்களிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாலே அவர்கள் சர்வசாதாரணமாக இந்தப் பெயர்களை உச்சரிப்பதைப் பார்க்கலாம். சிறார் திரைப்பட விழா

நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். மாறாக இணைய வசதி இல்லாத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் வாழும் சிறார்களுக்கு ஓடிடி குறித்தெல்லாம் தெரிவதில்லை. குழந்தைகள் பார்ப்பதற்கென்று தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டாமா? தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இப்படி யோசித்ததன் விளைவுதான் இன்று சிறார் திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ளது.



மாதம் தோறும்

மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ’சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் பள்ளிக் கல்வி துறை வகுத்துள்ளது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின் வாயிலாக இவ்வுலகத்தை புதிய பார்வையில் மாணவர்களைக் காண வைப்பதும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். தனி பாடவேளை

இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும்.

திரையிடுதலுக்குத் தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

வினாடி - வினா

திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும் திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள். திரைப்படம் முடிந்தபின்னர், அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும்.

சிறந்த விமர்சனங்களுக்கு பரிசு

5மாணவர்களை இத்திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்களுக்குப் பேசவைக்கப்படுவார்கள். மாணவர்கள் திரைப்படம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுதி அளிக்கலாம் அல்லது வரைந்தும் அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும். ஸ்பாட் லைட்

திரையிடப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கக்கூடும் என்பதை குழந்தைகளை அவர்களின் கற்பனைகொண்டு எழுத வைக்கப்படுவார்கள். கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ‘ஸ்பாட்லைட்’ என்கிற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் தனிநபர் ஒருவருக்கும் அணி ஒன்றிற்கும் பரிசுகள் வழங்கப்படும்.

’இந்தக் கதை எங்கே நிகழ்கிறது?, ‘இந்த இடத்தில் நிகழ்கிறது என எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?’, ’ஏதேனும் ஒரு பாத்திரத்திற்கென தனியாக ஒரு வண்ணமோ அல்லது குறிப்பிட்ட ஒலியோ இசையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் இடம்பெறும். ஒவ்வொரு மாதமும் திரையிடலுக்கு முன்பாக பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஸ்பாட்லைட் நிகழ்வுக்கென தனியாக கேள்விகளை உருவாக்கலாம்.

பள்ளி அளவில் சிறந்த மாணவர்கள் தேர்வு

’சிலவர் ஸ்க்ரீன் ஆப்’ என்கிற ஒரு கைப்பேசிச் செயலி உருவாக்கபட்டு அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். திரையிடல் முடிந்த நாளிலேயே அதற்கான பின்னூட்டங்கள் செயலி வழியாக பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான சுட்டி பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும் ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். கலைதுறை வல்லுநர்களோடு கலந்துரையாடல்

சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். கலைத்துறை சார்ந்த வல்லுநர்களோடு இம்மாணவர்களை கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

அயல் நாட்டு சுற்றுலா

மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களிலிருந்த 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்த மேலும் அறிந்துகொள்ளும் வகையில் அயல்நாடொன்றிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். திரைப்படங்கள் குறித்த விமர்சனப் பார்வையை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும் என்பதே இத்திரையிடலின் நோக்கம்.

Monday, July 04, 2022

July 04, 2022

பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அரசுப் பள்ளியில் இடநெருக்கடி

12th
பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வெங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் இடநெருக்கடி

கல்பாக்கம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை ஏளிய மாணவர்களுக்கு ஞானம் தரும் போதிமரமாக இருக்கிறது வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி.

25 ஆசிரியர்களைக் கொண்டு சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அறிவை புகட்டும் அரும்பணியை செய்து வருகிறது. நடந்து முடிந்த பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்ற 113 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். செங்கல்பட்டு மாவட்ட அளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே அரசுப்பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தியது.

இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஏற்கெனவே 6 முறை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியின் பெருமை அறிந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வெங்கம்பாக்கம் அரசு பள்ளிக்கு படையெடுக்க, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததது பெருங்குறையாக உள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 17 செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில்தான் தற்போது பள்ளி இயங்கி வருகிறது. போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் இடநெருக்கடியுடன் கல்வி கற்கின்றனர். கழிப்பறை வசதிகளும் சொல்லும்படி இல்லை என்பது கூடுதல் துயரம். இதேபள்ளியில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கே போதுமான வகுப்பறைகள் இல்லாததால், புதிதாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனை நெருக்கடியிலும் முழுமையான தேர்ச்சி குறித்து தலைமை ஆசிரியை மீனாகுமாரியிடம் கேட்டபோது, “கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் மற்றும் வாழ்க்கைக் கல்வி குறித்தும் கற்பிக்கிறோம். ஆசிரியர்களுக்கு பெற்றோர் தரப்பில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது.

இதனால்தான் 100 சதவீத தேர்ச்சி சாத்தியமானது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை 1,200-த்தை தாண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் பெருமை பொங்க.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறியதாவது: பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் இடநெருக்கடியைப் போக்க பள்ளிக்கு கூடுதல் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். இடம் தந்தால் சென்னை அணுமின் நிலையம் வகுப்பறை கட்டித் தர தயராக உள்ளது.

இங்குள்ள வனத்துறை நிலம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என 67 ஏக்கரில் 5 ஏக்கரை ஒதுக்கினால் போதும். விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகத்துடன் கூடிய கட்டிடங்களை கட்ட முடியும்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறைகளுக்கு மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கைதான் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Total Pageviews

Search This Blog