Breaking

Showing posts with label Group - 1. Show all posts
Showing posts with label Group - 1. Show all posts

Thursday, September 01, 2022

September 01, 2022

‘குரூப் - 1” தேர்வு மதிப்பெண் வெளியீடு

'குரூப் - 1' தேர்வில் பெண்களுக்கு முக்கியத்து வம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால், மதிப்பெண் விபரங்களை, அரசு பணி யாளர் தேர்வாணைய மான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அரசு துணை துறைகளில் கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, குரூப்-1 பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, 2021ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத் தப்பட்டது.

இதில், 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பிர தான தேர்வுக்கு தகுதி பெற்ற, 3,800 பேரின் விப ரம் மட்டும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப் பட்டது. இந்த ஆண்டு மார்ச் 4, 5 மற்றும் 6ம் தேதி பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை யில் வெளியாகின.

இதில், 137 பேர் நேர் காணலுக்கு தேர்வாகி, ஜூலை 15ல் நேர்காணல் நடத்தி, அதே நாளில் மதிப் பெண்கள் வெளியிடப்பட் டன. இதில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, டி.என்.பி.எஸ். சி., அலுவலகத்தில் கவுன் சிலிங் நடத்தப்பட்டது.

பணி நியமனம் பெற் றவர்களில், 87 சதவீதம் பெண்கள். இதனால், தேர்வர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பெண் களுக்கான இட ஒதுக் கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டு உள்ளதா கவும், ஆண் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு உள் ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, பிர தான தேர்வு ஆகிய இரண் டிலும் பங்கேற்ற அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் விபரங்களையும், டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டுள் ளது. www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Tuesday, August 23, 2022

August 23, 2022

92 இடங்களுக்கான குரூப் -1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

92 இடங்களுக்கான குரூப் -1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆக்டோபர் 30-ல் நடக்கும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர். 92 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா், ஏழு ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோ்வு அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையிலும் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்.

Monday, August 22, 2022

August 22, 2022

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்ஸி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆக.22. இதற்கான முதல்நிலைத் தோ்வு அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் செப்.2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

குரூப் 1-இல் வெற்றி: ஆண்டிபட்டி பெண் துணை ஆட்சியராக தோ்வு

குரூப் 1-இல் வெற்றி: ஆண்டிபட்டி பெண் துணை ஆட்சியராக தோ்வு

துணை ஆட்சியா் பணிக்கு தோ்வான பிரியா.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த முதுகலை பொறியியல் பட்டதாரி பெண், அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 போட்டித் தோ்வில் தோ்ச்சி பெற்று, துணை ஆட்சியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த மோகன்வடிவேல் மகள் பிரியா. முதுகலை பொறியியல் (கணினி அறிவியல்) பட்டதாரியான இவா், அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 போட்டித் தோ்வில் மாநில அளவில் 7-ஆம் பிடித்து தோ்ச்சி பெற்றாா். இவா், சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில், துணை ஆட்சியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவரது கணவா் சிவசந்திரன் சென்னையில் தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறாா்.

இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளாா். அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற விடாமுயற்சியில், போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று, மாநில அளவில் 7-ஆம் இடம் பிடித்து பணிக்கு தோ்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரியா கூறினாா்

Tuesday, July 19, 2022

July 19, 2022

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Counselling) - PDF (19.07.2022 (COUNS_PHASE_II))

POSTS INCLUDED IN COMBINED ENGINEERING

SUBORDINATE SERVICES EXAMINATION

(POSTS OF JUNIOR DRAUGHTING OFFICER IN PUBLIC

WORKS DEPARTMENT AND JUNIOR ENGINEER IN FISHERIES DEPARTMENT)

(PHASE-II)

The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Original Certificate Verification and Counselling to the post of JUNIOR DRAUGHTING OFFICER IN PUBLIC WORKS DEPARTMENT AND JUNIOR ENGINEER IN FISHERIES DEPARTMENT

(PHASE-II) based on the results of the written examination conducted by the Commission on 18.09.2021 FN & AN and Marks and Rank published on 15.02.2022. The Original Certificate Verification and Counselling for the post of JUNIOR ENGINEER IN FISHERIES DEPARTMENT will be held on 28.07.2022. The Original Certificate Verification and Counselling for the post of JUNIOR DRAUGHTING OFFICER IN PUBLIC WORKS DEPARTMENT will be held on 28.07.2022.The Original Certificate Verification and Counselling will be held at the office of the TNPSC, TNPSC Road, Chennai-600 003.

Individual intimation regarding the date and time of Original Certificate Verification and Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only. Individual intimation will not be sent to the candidates by post.

CLICK HERE TO DOWNLOAD

Friday, July 15, 2022

July 15, 2022

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Oral Test Mark) - PDF

DETAILS OF THE MARKS OBTAINED BY THE CANDIDATES BOTH IN THE MAIN WRITTEN EXAMINATION HELD FROM 04/03/2022 TO 06/03/2022 AND AT THE ORAL TEST HELD FROM 13/07/2022 TO 15/07/2022 RELATING TO THE POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES-I EXAMINATION (GROUP-I SERVICES)

(NOTIFICATION NO. 01/2020, DATED 20.01.2020)

(CONSOLIDATED MARK LIST)

--------------------------

CLICK HERE TO DOWNLOAD

Friday, June 24, 2022

June 24, 2022

குரூப் - 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அறிவிப்பு!

தமிழக அரசு துறைகளின் பல்வேறு பதவிகளுக்கான, 'குரூப் 1, 2' தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சார் - பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட, 67 வகை பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு மே 21ல் நடந்தது.தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:இந்த மாதம் வெளியிடப்படுவதாக இருந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும். துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப் - 1 பதவியில், 66 காலியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்படும்.மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - -2 பதவியில், 110 காலியிடங்களை நிரப்ப, 2018ல் நடத்தப்பட்ட தேர்வின் நேர்முக தேர்வு முடிவுகள், நீதிமன்ற வழக்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் உதவி வழக்கறிஞர் பணியில், 50 காலியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும்.தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை - -1 பதவியில், 25 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது.இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 29ம் தேதி முதல், ஜூலை 7 வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog