Breaking

Showing posts with label TECHNOLOGY. Show all posts
Showing posts with label TECHNOLOGY. Show all posts

Monday, March 18, 2024

Thursday, October 12, 2023

October 12, 2023

Passwordless login with passkeys - பாஸ்வேர்ட் நடைமுறைக்கு விடைதரும் கூகுள்... இனி எல்லாமே பாஸ்கீ மட்டுமே!





What is a passkey?

Passwordless login with passkeys | Authentication | Google ...

A passkey is a digital credential, tied to a user account and a website or application. Passkeys allow users to authenticate without having to enter a username or password, or provide any additional authentication factor. This technology aims to replace legacy authentication mechanisms such as passwords.

Why use passkey?

Use passkeys to sign in to apps and websites on iPhone ...

Passkeys are more secure than passwords, because they're uniquely generated for every account by your own device, and are less vulnerable to phishing. And they work on all your devices that are signed in to the same Apple ID.

How do you use passkey?

Use your passkey to sign in on a different device

When you sign in on a computer with a passkey for the first time, a QR code appears on the computer. To sign in, scan the QR code with your phone's camera. The next time you sign in with this computer and phone combination, you won't need to scan a QR code பாஸ்வேர்ட் நடைமுறைக்கு விடைதரும் கூகுள்... இனி எல்லாமே பாஸ்கீ மட்டுமே!

கூகுள் பாஸ்கீ

கூகுள் கணக்குகளை அணுக, வழக்கமான பாஸ்வேர்ட்(Password) நடைமுறைகளுக்கு அப்பால் பாஸ்கீ(Passkey) முறையை அமல்படுத்த முடிவாகி உள்ளது. இதனால் கூகுள் கணக்குகளை பராமரிப்பதில் எளிமை கிட்டுவதோடு, பாதுகாப்பும் பல அடுக்குகளுக்கு அதிகரிக்க வாய்ப்பாகிறது.

இதன்படி கூகுள் கணக்குகளை திறப்பதற்கு வழக்கமான பாஸ்வேர்ட் மற்றும் அதனைத் தொடரும் இரண்டு படியிலான சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு இனி விடைதரலாம். கூகுள் மட்டுமன்றி ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெக் உலகமே பாஸ்வேர்ட் நடைமுறைகளை தலைமுழுக முடிவு செய்துள்ளன. பாஸ்வேர்ட் நடைமுறைகள் காலம் கடந்தவை என டெக் உலகு நம்புகிறது. கூகுள் பாஸ்கீ

பயனர்களை பொறுத்தளவிலும் பாஸ்வேர்ட் என்பதை சுமையாகவே பாவிக்கிறார்கள். அந்த சுமையை தவிர்க்க, பெரும்பாலானவர்களின் பாஸ்வேர்ட் என்பது ஊகிக்க எளிமையாக அமைந்திருக்கின்றன. பாஸ்வேர்ட் என்பதன் நோக்கமும் இதனால் அடிபடுகிறது. மறுபக்கம் கடினமான பாஸ்வேர்ட் கொண்டு கட்டமைத்தவர்கள், அந்த பாஸ்வேர்டை மறந்துவிட்டு தடுமாறித் தவிக்கிறார்கள்.

இத்தகைய பாஸ்வேர்ட் நடைமுறையை கைவிட்டு, பாஸ்கீக்கு நகர்வதன் மூலம் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பை அதிகரிக்க அதன் தாய் நிறுவனமான அல்பாபெட் முடிவு செய்துள்ளது. பாரம்பரிய பாஸ்வேர்ட் நடைமுறைகள் மற்றும் அதனையொட்டிய இரு படி சரிபார்ப்புகளுக்கு மாறாக கைரேகை, முக ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் நுட்பங்களுக்கு இனி பயனர்கள் நகரலாம்.

ஆனால் தனிநபரின் பயோமெட்ரிக் தரவுகள், கூகுள் போன்ற பெரு நிறுவனங்களின் பிடியில் சிக்குவதை, தனியுரிமைக்கு முக்கியத்துவம் தரும் பயனர்கள் வெறுக்கக்கூடும். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், இந்த பயோமெட்ரிக் தரவுகளை இதர மூன்றாம் நபர்களிடம் பகிரப்போவதில்லை என கூகுள் உறுதியளிக்கிறது. இணையத்தில் பாதுகாப்பு

பாஸ்கீ நடைமுறை மூலம் சந்தேகத்துக்குரிய அணுகலை கூகுள் கணக்குகள் தாமாக ரத்து செய்துவிடும். அல்லது கூடுதல் சரிபார்ப்புகளை கோரும். குறிப்பாக சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உரிய நபருக்கு உடனே அறிவிக்கும். இந்த பாஸ்கீ நடைமுறைகளை ஆன்ட்ராய்டு மட்டுமன்றி ஐபோன் சாதனங்களிலும் சுலபமாக இயக்கலாம்.

அதே வேளையில் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சாதனங்களில் பாஸ்கீகளை அமைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பகிரப்படும் சாதனங்கள், பயனர்களின் கூகுள் கணக்குகளை எளிதாக அணுக உதவுவதால், ஆபத்தை விளைவிக்கக் கூடும். பயனர்கள் தங்கள் கணக்கை வேறு எவரேனும் அணுகலாம் என்று அஞ்சினாலோ அல்லது பாஸ்கீ சேமிக்கப்பட்ட தனி சாதனத்தை இழந்தாலோ, அவர்கள் விரைந்து தங்கள் கூகுள் கணக்குகளின் பாஸ்கீகளை ரத்து செய்துவிடலாம்.

மாறாக பாஸ்வேர்டு நடைமுறையே போதும் என்பவர்கள் அதற்கான பாரம்பரிய உள்நுழைவு முறைகளை வழக்கம்போலவே பின்பற்றவும் கூகுள் வழிசெய்கிறது.

Tuesday, December 27, 2022

December 27, 2022

இந்த 49 போன்களில் டிசம்பர் 31-க்கு பின் WhatsApp சேவை நிறுத்தம்

இந்த 49 போன்களில் டிசம்பர் 31-க்கு பின் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்

ஆண்டுதோறும் வாட்ஸ்ஆப் ஒரு சில போன்களில் தனது சேவைகளை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டும் சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளது.

கோடிக்கணக்கான பயனர்களுடன் உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்குகிறது. அவ்வப்போது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதோடு செயலியில் வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதால், சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு நிறைவுக்கு வரும் வேலையில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் சில ஐ-போன் மாடல்களுக்கும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் காலாவதியான மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்டுள்ள போன்களில் மட்டுமே நிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு செய்தி தகவலின் படி ,டிசம்பர் 31 அன்று வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பல பிறாண்டுகளில் கிட்டத்தட்ட 49 ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை நிறுத்துகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அச்சப்படத்தேவை இல்லை. அந்த போன்களை பயன்படுத்துவார்களின் சேவை பாதிக்கப்படாது அவர்களுக்கு எந்த ஒரு அப்டேட்களும் புதிய features-களும் இனி கிடைக்காது.

தனது சேவைகளை எந்தெந்த போன்களில் நிறுத்தப்போகிறது?

1.Grand S Flex ZTE, 2.Grand X Quad V987 ZTE, 3.HTC Desire 500, 4.Huawei Ascend D, 5.Huawei Ascend D1,

6.Huawei Ascend D2, 7.Huawei Ascend G740, 8.Huawei Ascend Mate, 9.Huawei Ascend P1, 10.Quad XL,

11.Lenovo A820, 12.LG Enact, 13.LG Lucid 2, 14.LG Optimus 4X HD, 15.LG Optimus F3,

16.LG Optimus F3Q, 17.LG Optimus F5, 18.LG Optimus F6, 19.LG Optimus F7, 20.LG Optimus L2 II,

21.LG Optimus L3 II, 22.LG Optimus L3 II Dual, 23.LG Optimus L4 II, 24.LG Optimus L4 II Dual, 25.LG Optimus L5,

26.LG Optimus L5 Dual, 27.LG Optimus L5 II, 28.LG Optimus L7, 29.LG Optimus L7 II, 30.LG Optimus L7 II Dual,

31.LG Optimus Nitro HD, 32.Memo ZTE V956, 33.Samsung Galaxy Ace 2, 34.Samsung Galaxy Core, 35.Samsung Galaxy S2,

36.Samsung Galaxy S3 mini, 37.Samsung Galaxy Trend II, 38.Samsung Galaxy Trend Lite, 39.Samsung Galaxy Xcover 2, 40.Sony Xperia Arc S,

41.Sony Xperia miro, 42.Sony Xperia Neo L, 43.Wiko Cink Five, 44.Wiko Darknight ZT, 45.Apple iPhone 5 46.Apple iPhone 5c, 47.Archos 53 Platinum

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNEB - Bill Easy Calculator - New Software

TNEB - Calculator- Software

TANGEDGO புதிய கட்டண விகிதத்தை வெளியிடப்பட்டது.

எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறையை இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் கௌதம் உருவாக்கியுள்ளார்.

Click here TNEB calculator software

Monday, January 31, 2022

January 31, 2022

WhatsApp குழுக்களின் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை அட்மின்கள் அழிக்கும் வசதி

வாட்ஸ்ஆப் குழுக்களின் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை அட்மின்கள் அழிக்கும் வசதி விரைவில் கொண்டு வரப்படவுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப்பை செயலியை உலகம் முழுவதும் பல கோடி பேர் உபயோகித்து வருகின்றனர். இந்த செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, விடியோ கால், வாய்ஸ் கால், குரூப் கால் போன்ற வசதிகள் உள்ளன. பல செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஆரம்பிக்கப்பட்டாலும் வெற்றி காண முடியவில்லை. இருப்பினும், வாட்ஸ்ஆப் குரூப்பில் உறுப்பினர்கள் அனுப்பும் தேவையில்லாத செய்திகளை அந்த குரூப் அட்மினால் அழிக்க முடியாத குறை பல நாள்களாக பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்ஆப் டிராக்கரான டபள்யூஏ பெட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,

வாட்ஸ்ஆப் குழுக்களில் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை இனி அட்மின்களே அழித்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அட்மின்களால் செய்தி அழிக்கப்பட்டால், ‘இந்த செய்தி அட்மினால் அழிக்கப்பட்டது’ என்று குழுக்களில் உள்ள பிற உறுப்பினர்களுக்கு தெரியும் வசதியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்ப்யூட்டர் அல்லது இணையதளம் மூலம் ‘வாட்ஸ்ஆப் வெப்’ பயன்படுத்துவதற்கு இரு முறை சரிபார்த்தல் (2 ஸ்டெப் வெரிபிக்கேஷன்) முறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Friday, September 24, 2021

September 24, 2021

செல்போன் புகைப்படங்களைப் பாதுகாக்க கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

"ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் உள்ள புகைப்படங்களை கடவுச் சொல்லுடன் பாதுகாக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட செல்போன்களில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், தொடர்புகள், விடியோக்கள் உள்ளிட்டவைகளின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் பயனர்களின் புகைப்படங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களை கூகுள் போட்டோஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கூகுள் போட்டோஸில் உள்ள புகைப்படங்களை யாரும் அணுகமுடியாதவண்ணம் கடவுச்சொல்லின் மூலம் பயனர்கள் பாதுகாக்க முடியும்.


கூகுள் பிக்சல் செல்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறிப்பிட்ட கோப்பை கடவுச் சொல்லின் மூலம் பாதுகாக்கக்கூடிய இந்த வசதியில் பாதுகாக்கப்பட்ட கோப்புகளை செயலிகள் அணுக முடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது."

Tuesday, August 03, 2021

August 03, 2021

செப் 27 முதல் ‘இந்த’ மொபைல்களில் கூகுள் சேவைகள் ( யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே) நிறுத்தம்!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே போன்ற செயலிகளை செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல்:

இந்த காலத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஆண்ட்ராய்டு மொபைல் மாறிவிட்டது. மேலும் இணைய சேவைகளை பெற பலர் கம்ப்யூட்டரை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி அனைத்து சேவைகளும் மொபைல் போன் மூலமாகவே வந்துவிட்டது. மொபைல் போன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா சூழல் என்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பழைய ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பழைய ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சர்ப்ரெட் போன்கள் உபயோகிப்பவர்கள் செப்டம்பர் 27 ஆம் தேதியில் இருந்து யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே போன்ற செய்திகளை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய மொபைல்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற சூழல் உருவாகி விட்டது. அதிலும் யூடியூப் போன்ற செயலிகளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தேடு பொறியான கூகுள், குறைவான பணத்தை கூட செலுத்தும் வசதி கொண்ட ஜிபே ஆகியவை தற்போது தவிர்க்க முடியாத சேவைகளாக உள்ளது. இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பு காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
August 03, 2021

Telegram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - New Update குரூப் வீடியோ கால் வசதி!

நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக மக்களின் தேவைக்கேற்ப தகவல் தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை தொடந்து தற்போது Telegram வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஓன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 1000 பார்வையாளர்களுடன் குரூப் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அப்டேட்:
சேட் செய்வதற்கு எவ்வாறு WhatsApp பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பெரிய பைல்களை பரிமாறிக் கொள்வதற்கு Telegram பயன்படுகிறது. மேலும் டெலிக்ராமில் உள்ள குரூப்களில் உறுப்பினர்கள் சேர்வதற்கான வரைமுறைகள் இல்லை. இது போன்ற பல அம்சங்களை கொண்டு உள்ளது. தற்போது இதனை தொடர்ந்து சில புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. அதன்படி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ காலில் தற்போது 1000 பார்வையாளர்கள் இணைவதற்கான சாதியத்தை கொண்டு வந்துள்ளது.

இது குரூப் வீடியோ அழைப்புகள் 2.0 என பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணையும் 1000 பார்வையாளர்களில் 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் பங்கேற்கவும், மீதமுள்ளவர்கள் அதனை பார்க்கவும் மட்டுமே முடியும். இது போன்ற அப்டேட்கள் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முன்பை விட வீடியோ செய்திகளை உயர் தரத்தில் பதிவிடும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இனி வழக்கமான விடீயோக்களை 0.5x அல்லது 2x வேகத்தில் பார்ப்பது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. டெலிக்ராமில் உள்ள மீடியா பிளேயர் இப்போது பயனர்களை 0.5x, 1.5x மற்றும் 2x பிளேபேக் வேகத்தில் உள்ளடக்கத்தை கொண்டு இயங்க தயாராகியுள்ளது. இதனை தொடந்து பயனர்கள் தங்கள் திரையை பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் டெலிக்ராம் செயலியில் உள்ள மீடியா எடிட்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு அப்டேட்களுடன் களமிறங்கி உள்ளது டெலிக்ராம் செயலி.

Monday, July 26, 2021

July 26, 2021

ரெட்மி மொபைலின் முதல் 5ஜி செல்போன்: ரெட்மி நோட் 10T 5G யின் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் மொபைல்களில் முக்கியமான இடத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ரெட்மி தனது மலிவுவிலை 5 ஜி ஸ்மார்ட்போனான 10 டி 5 ஜி என்று மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 5 ஜி சோதனை இப்போதும் சோதனைக்கட்டத்தில் உள்ளதால், இதுவரை இங்கு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை சூடுபிடிக்கவில்லை. இந்த சூழலில் ரெட்மி தனது மலிவுவிலை 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, ரெட்மி நோட் 10 டி 5 ஜி என்று அழைக்கப்படும் இந்த மாடல் இந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது, தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஜியோமியின் ரெட்மி நோட் 10 டி 5 ஜி மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் ரூ .13,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.15,999 ஆக உள்ளது. இரண்டு வகை போன்களும் போகோ எம் 3 புரோ 5 ஜி மற்றும் ரியல்மி நர்சோ 30 5 ஜி ஆகியவற்றுக்கு இணையாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 10 டி 5ஜி மாடல் குரோமியம் ஒயிட், கிராஃபைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மிண்ட் பச்சை ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 10 டி 5 ஜி மெலிதான அமைப்புடன் உள்ளது, இது 193 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் வடிவமைப்பு நார்சோ 30 5 ஜி அல்லது போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி மாடல்களை போன்று கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லை. ரெட்மி நோட் 10 டி 5 ஜி 6.5 இன்ச் முழு எச்டி திரை, 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பெட்டியில் 22.5W சார்ஜருடன் வருகிறது. குறைந்த விலை ரெட்மி நோட் 10 இல் கூட கிடைக்கக்கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த வகையில் இல்லை.
July 26, 2021

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி

அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக் கல்வி தொலைக்காட்சிதான் ஒரே வழி என்ற நிலை தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் அதை மாற்றுவோம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்களே புதுமையான முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். பள்ளிகளைத் திறந்தால்தான் மாணவர்கள் படிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கல்வியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே அவர்கள் படிக்க முடியும் என்ற நிலை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து இருக்கக்கூடாது. அடுத்தடுத்த ஊடகங்கள் மூலம் மாணவர்களை அணுகவேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி இல்லை என்பது உண்மைதான். இணைய வசதியும் இடையூறாக உள்ளது. இதுதொடர்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை இன்று சந்தித்துப் பேச உள்ளேன். இவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.

2020- 21ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 2.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூலை 24-ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

Wednesday, July 21, 2021

July 21, 2021

உங்களுக்கே தெரியாமல் உங்களின் செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா?: காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள்

செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும்,
மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து, அதன் மூலம் பணத்தையும் திருட முடியும். ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ, வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும்.

அதன் மூலம், நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம். செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ…

* வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும். அப்படி எனில், மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்.

* நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும். அது, ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும். உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும். *போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும். மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும்.

* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும்.

* போன் வித்தியாசமாக செயல்படும். வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும். ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது.

* வித்தியாசமான பாப்-அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும். செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும். அதில், வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள்.

* போட்டோ, வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும். அது, ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது. * நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும்.

* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும். ஆனால், நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால், யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம்.

* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும்.

- இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள். உடனே, உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள். அப்படி செய்தால், உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும்.

Tuesday, July 20, 2021

July 20, 2021

இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி, இருப்பிடம், வருமானம், அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி, இருப்பிடம், வருமானம், அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், OBC சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றுதழ், விதவை சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், விவசாயத்திற்கான அடங்கல் ஆகியவற்றை எல்லாம் நீங்கள் இனி உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே விண்ணப்பத்து பெற முடியும்.

உங்களுக்குத் தேவையான அரசு சான்றிதழ்களை பெற இனி VAO அலுவலகங்களுக்கோ, தாலுகா அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து சான்றிதழ்களுக்கும் இப்போது உங்கள் மொபைல் போனிலேயே விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# எனும் வலைத்ததிற்குச் சென்று முதலில் New User என்பதை கிளிக் செய்து Register செய்து கொள்ள வேண்டும்.

● Register செய்யும் போது உங்களுடைய முழு பெயர், முகவரி, தாலுக்கா, மாவட்டம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login ID, password ஆகியவற்றை சரியாக உள்ளிட வேண்டும். அடுத்து திரையில் Captcha குறியீட்டை உள்ளிட்டு Sign Up பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.

● இப்போது நீங்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு OTP ஒன்று வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு சரிபார்த்ததும் உங்களுக்கான கணக்கு திறக்கப்படும். ● இப்போது https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# வலைத்தளத்திற்குச் சென்று நீங்கள் உருவாக்கிய Username, Password, Captcha code ஆகியவற்றை கொண்டு Login செய்து கொள்ள வேண்டும்.

● Login ஆனதும், Department Wise எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். ● அதில் Revenue Department எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் வருவாய் துறை மூலம் கிடைக்கும் சேவைகளின் பட்டியலைக் காணலாம்.

● அவற்றில் உங்களுக்கு தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

● எடுத்துக்காட்டாக உங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென்றால் Community Certificate என்பதை கிளிக் செய்கிறீர்கள் என்றால், புதிதாக ஒரு பக்கம் திறக்கும். ● அதில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், சேவை விவரம் மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்கள் இருக்கும்.

● அதை படித்துவிட்டு, Proceed எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

● இப்போது CAN நம்பர் என்று சொல்லக்கூடிய குடிமக்கள் கணக்கு எண் தேவைப்படும். உங்களிடம் இல்லை என்றால் Register CAN என்பதை கிளிக் செய்து புதிய CAN எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும்.

● CAN எண்ணுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை உடன் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, PAN கார்டு போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.

● விண்ணப்பத்தாரரின் விவரங்களைப் பூர்த்திச் செய்துவிட்டு, அடுத்து அடுத்து தற்போதைய முகவரி, நிலையான முகவரி, வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை உள்ளிட வேண்டும். ● அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து CAN எண்ணை பெற்றதும் CAN எண்ணை உள்ளிட்டு தேடுதலை தொடங்கி உங்களுக்கான விண்ணப்பத்தை தொடங்கலாம்.

● நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்குத் தேவையான ஆவணங்களான Photo ID proof, address proof, பிறப்பு சான்றிதழ், self declaration ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.

● பதிவேற்றியதும், Make Payment எனும் விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.60/- கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற வழிகளைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

● இப்படி நீங்கள் விண்ணப்பித்து முடித்ததும் ஓரிரு நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழைப் பெற முடியும்.

Wednesday, July 14, 2021

July 14, 2021

உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சூப்பர் ஐடியா!!

உங்களது மொபைலில் இணைய வசதியின் வேகம் குறைவாக இருப்பதால் அதிக நேரம் வீணாகும். அதனை சரி செய்ய உங்கள் இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் முறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

இணைய வேகம்:

தற்போது நாடு முழுவதும் அனைத்து நேரடி சேவைகளும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே நேரடியாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பயில்கின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையினர் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். இதனால் அனைத்து குடும்பங்களிலும் இணைய வசதி அத்தியாவசியமாகி விட்டது. நமது இணையத்தின் வேகம் குறைவாக இருந்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

உங்கள் மொபைலில் இணையத்தின் வேகத்தினை வீட்டில் இருந்த படியே அதிக சில வழிமுறைகள் உள்ளது. வழிமுறைகள்:

முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதில், Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்பதில் இணையத்திற்காக பயன்படுத்தும் சிம்மை தேர்வு செய்ய வேண்டும். முன்னதாக இணையத்திற்கு பயன்படுத்தும் சிம்மை sim 1ல் போட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஜியோ சிம் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது sim settings ல் சென்று access point names பக்கத்தில் + என்ற சிம்பள் இருக்கும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.

அதில், Edit access point என்ற பக்கம் திறக்கப்படும்.

அதில், Name என்பதில் www.jio.com என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.பின் APN என்று இருக்கும் அவற்றில் jioNet என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது, USer Name மற்றும் Server என இருக்கும் இரண்டிலும், www.google.com என டைப் செய்து ஒகே கொடுக்க வேண்டும்.

அதில், MCC என்பதில் 405 என டைப் செய்து, அடுத்ததாக 865 அல்லது 868 என்று type செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

அதில், Bearer என்ற தேர்வு இருக்கும். அதில், unspecified என்று கிளிக் செய்யப்பட்டிருக்கும். அதனுடன் LTE என்பதையும் கிளிக் செய்யவேண்டும்.

இப்பொழுது, Access point names என்பதின் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதில் சென்று இந்த செட்டிங்ஸை சேவ் செய்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது உங்களது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஆன் செய்தால் இணையத்தின் வேகம் அதிகமாக கிடைக்கும்.

Tuesday, July 06, 2021

July 06, 2021

WhatsApp ல் உங்க அக்கவுண்ட்டை யாராவது பிளாக் செய்து உள்ளனரா? அறிந்து கொள்ள சில குறிப்புகள்!

உங்கள் வாட்ஸ் அப் கணக்குகளை யரேனும் பிளாக் செய்திருந்தால் அவற்றை நாம் சில குறிப்புகள் மூலம் எளிதான முறையில் அறிந்து கொள்ள முடியும். இது குறித்து வாட்ஸ் அப் அதன் கேள்விகள் பக்கத்தில் (FAQ) பட்டியலிட்டுள்ளது.

பிளாக் கணக்கு

சிறந்த தகவல் தொடர்பு நிறுவனமான வாட்ஸ் அப் செயலி அதன் பயனர்களுக்கு பல நன்மைகளை அளித்து வருகிறது. அதாவது உலகின் எந்தவொரு இடத்தில் உள்ளவர்களையும் எந்தவொரு நேரத்திலேயும் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம். இந்த செயலியில் செய்திகளை அனுப்புவது, பேசுவது, புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவது உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கம் செய்வது போன்ற பயன்பாடுகளும் உள்ளது.

அந்த வகையில் உங்கள் கணக்குகளை யாரேனும் ஒருவர் பிளாக் செய்திருந்தால், அதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது. இந்த வழிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அதன் கேள்விகள் பக்கத்தில் (FAQ) பட்டியலிட்டுள்ளது. அதன் படி பயனர்களது வாட்ஸ் அப் கணக்குகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சில வழிகளை வாட்ஸ் அப் பகிர்ந்துள்ளது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் உங்களது கணக்குகள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், அந்த நபரது last seen செயல்பாடுகள் தெரியாது. தொடர்ந்து உங்களது கணக்குகளை பிளாக் செய்திருக்கும் நபரது chat box ல் last seen ஐ நீங்கள் இனி பார்க்க முடியாவிட்டால், அவர்கள் உங்கள் கணக்கை பிளாக் செய்திருக்கலாம். இருப்பினும், last seen ஐ மறைக்கும் பயன்பாடுகள் வாட்ஸ் அப்பில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அந்த நபரின் சுயவிவரங்கள் குறித்த எந்த அப்டேட்களையும் உங்களால் காண முடியாது. அந்த நபரது ப்ரொபைல் படம் உங்களுக்கு தெரியாது.

இதை தொடர்ந்து உங்கள் கணக்கை பிளாக் செய்திருப்பதாக நீங்கள் சந்தேகிக்கும் நபரது வாட்ஸ் அப் கணக்குக்கு செய்திகளை அனுப்ப வேண்டும். இந்த செய்திகள் பயனருக்கு சென்ற பின்னாக முதலாவது ஒரு டிக் மட்டுமே காணப்படும். தொடர்ந்து அந்த செய்திகள் அனுப்பப்பட்டதுக்கு பின்னாக இரண்டாவது டிக் வராவிட்டால், உங்கள் கணக்கு பிளாக் செய்திருக்கிறதென்று அர்த்தமாகும். இது தவிர வாட்ஸ் அப்பில் உங்கள் கணக்கை பிளாக் செய்திருப்பவர்களை அழைக்க முயற்சித்தாலும் தொடர்பு கொள்ள முடியாது. இந்த அனைத்து செயல்பாடுகளும் உங்கள் கணக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டால், உங்கள் கணக்கு பிளாக் செய்திருப்பதாக அர்த்தம். வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் பிறரது கணக்குகளை தடுக்க, முதலாவது Settings குள் செல்லவும். பிறகு Account என்பதில் Privacy என்பதை தேர்வு செய்யவும். பிறகு Blocked என்பதில் Add New என்ற ஆப்ஷனில் பிளாக் செய்ய வேண்டிய நபரை தேர்ந்தெடுக்கவும். தற்போது வெளிவரவுள்ள ஜிபி வாட்ஸ் அப் பயன்பாட்டின் குளோன் பதிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்தால், உங்கள் வாட்ஸ் அப் கணக்கை நிரந்தரமாக இழக்க நேரிடும்
July 06, 2021

இனி வாட்ஸ் அப் மூலம் HD வீடியோ அனுப்பலாம்!!

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக தளமான வாட்ஸ் அப்பில் ஹெச்.டி வீடியோ அனுப்பும் வசதி விரைவில் வர இருக்கிறது.

அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் ஆட்டோமேட்டிக், பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோமேட்டிக் விருப்பத்தினை தேர்வு செய்வதன் மூலம் வீடியோவை அப்படியேவும், பெஸ்ட் குவாலிட்டி ஆப்ஷன் மூலம் வீடியோவை உயர் தரத்தில் ஹெச்.டியாக அனுப்பலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. டேட்டா சேவ் முறை மூலம் வீடியோக்களின் அளவைக் குறைத்து அனுப்பலாம் . வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசும்போதும் வீடியோவின் தரத்தை நிர்ணயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் வாட்ஸ் அப் விரைவில் வழங்க உள்ளது.

வாட்ஸ் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஹெச்.டி வசதி இல்லை. வீடியோக்கள் சாதாரண அளவிலேயே பகிரப்படுகின்றன. இந்த நிலையில் மாற இருக்கிறது. அடுத்த வர உள்ள 2.21.14.6 அப்டேட்டில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

Total Pageviews

Search This Blog