school students
November 28, 2024
Showing posts with label school students. Show all posts

Thursday, November 28, 2024
Sunday, September 24, 2023
school students
September 24, 2023
ஜூசில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம்
ஜூசில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த
பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம்
எலுமிச்சை ஜூஸில் சிலிக் கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர ரணி தமிழ் காலனியை சேர்ந்தவர்கள் சரளா (36), ஜீவ தரணி (21), கவுதம் (19) மற்றும் பள்ளி மாணவர்கள் பிரித்திகா (13), கவுசிகா (7), லோகேஷ் குமார் (13), எஸ்வந்தி (11), சுஜன் (9), நிவேதா (9), நிஷாந்தி (10), ருத்ரன் (9), தாரிகா (13), ஹரீஷ் (15). இவர்கள் விடுமுறை தினமான நேற்று தங்களது வீட்டின் அருகே இருந்த மரத்திலிருந்து எலுமிச்சை பழங்களை பறித்து ஜூஸ் தயாரித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒருவரது வீட்டில் இருந்து ஐஸ்கட்டி பாக்கெட்டை ஜூஸில் கலந்து அனைவரும் குடித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஐஸ்கட்டி பாக் கெட்டை பார்த்தபோது அது ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனடியாக, அவர் களுக்கு ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முத லுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Thursday, April 13, 2023
Virtual reality education
April 13, 2023
கிராம பள்ளி மாணவர்களுக்கு மெய்நிகர் உண்மை கல்வி மாதிரி
கிராம பள்ளி மாணவர்களுக்கு மெய்நிகர் உண்மை கல்வி மாதிரி -
Virtual reality education model for village school students
கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழில்நுட்பங்கள் வாயிலாக கற்றல் திறன் பெறும் 'விர்ச்சுவல்ரியாலிட்டி' கல்வி மாதிரியை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனும் மெய்நிகர் உண்மை அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கும் பணியில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் மாதிரிகளை, 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்வதாகும்.
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி முறையானது, மாணவர்களுக்கு அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை வழங்கும். அதனுடன், மாணவர்கள் புரிந்து படிக்கவும் வழி செய்யும்.
அதேபோல், தொழில்நுட்பங்கள் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டால், மாணவர்களின் கற்றல் வலுப்பெறும்.
மேலும், மாணவர்கள் உயர் கல்விக்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். இதன் வாயிலாக, நேரடி வகுப்பறைகளில் உள்ள சிரமங்கள் களையப்படும். இதன் துவக்கமாக, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெரின் சிமிராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோர் 'மெமரிபைட்ஸ்' எனும் மொபைல் போன் செயலியை உருவாக்கிஉள்ளனர்.
இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் செயல்படக்கூடியது. அனைத்து நாடுகளிலும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல் எனும், ஐ.நா., சபையின் இலக்கை அடைய, இந்த திட்டம் உதவும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரலாறு, மொழிப் பாடங்கள், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவிக்கலாம்.
இந்த திட்டம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடையே நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை இணைக்கும் பாலமாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Sunday, February 05, 2023
VIDEOS
February 05, 2023
மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!!
மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!! A new technique used by school students to keep their body and brain active..!!
CLICK HERE TO WATCH THE VIDEO
மெக்சிகோ மாணவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டே படிக்கும் வண்ணம் பைக் மேசைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன... பெடல்கள் பொருத்தப்பட்ட நேர்த்தியான மேசைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு மெக்சிகோ பள்ளி மாணவர்கள் படிக்கவும் செய்கின்றனர்... அதே சமயம் pedaling செய்து கொண்டே உடற்பயிற்சி செய்து கலோரிகளையும் எரிக்கின்றனர்... உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் இயங்கும் போது இயல்பாகவே மூளையும் சுறுசுறுப்படைவதாக மாணவர்கள் உற்சாகம் தெரிவிக்கின்றனர்...

Thursday, January 19, 2023
school students
January 19, 2023
பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம்
Coimbatore tops the state level in art festival for school students பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம்
கோவை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ் 1, பிளஸ் 2 என மூன்று பிரிவுகளில் 207 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் 1.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளிலும், வட்டார அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 12,364 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டனர்.
சேலம் இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மூன்றாம் இடமும் பிடித்தன. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் ஊக்குவிப்பு ஆகியவை மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற ஊக்கமளிப்பதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, September 22, 2022
Sports Competition
September 22, 2022
10 Types of Sports Competition - School Education Circular - பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை - New for School Students, 10 Types of Sports Competition - School Education Circular
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, September 16, 2022
Which coaching is best for NEET?
September 16, 2022
NEET coaching classes for government school students - அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை NEET coaching classes for government school students from next month!
Chief Minister M.K. NEET coaching classes for government school students from next month. Stalin started it. The action has been taken when the pass rate of government school students in the NEET examination has fallen sharply.
It has been said that the NEET training which usually starts in December is going to start earlier this year. Officials of the school education department have said that improved NEET training will be provided to increase the pass rate.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கயுள்ளார். நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, September 04, 2022
Students Happy
September 04, 2022
பள்ளி மாணவர்களுக்கு ஜாலி! - வாரத்துக்கு ஒரு நாள் புத்தக பை கிடையாது
பள்ளி மாணவர்களுக்கு ஜாலி வாரத்துக்கு ஒரு நாள் புத்தக பை கிடையாது
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில பள்ளி கல்வித்துறை, மாணவர்களின் பாட புத்தக பைகளின் எடை தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அரசு குறிப்பிட்ட எடையை நிர்ணயித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கம்யூட்டர், பொது அறிவு, விளையாட்டு, உடற்கல்வி, சுகாதாரம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட பாடங்களை, புத்தகங்கள் இன்றி கற்பிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
1, 2ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தக பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். 3, 4, மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 1.7 கிலோ முதல் 2.5 கிலோ வரை இருக்கலாம். 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முதல் 3 கிலோ வரையும், 8ம் வகுப்பு படிப்போர் 2.5 முதல் 4 கிலோ எடை வரையும் எடுத்து வரலாம். 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4.5 கிலோ எடை வரை புத்தகங்களை கொண்டு வரலாம். வாரத்துக்கு ஒருநாள் குறிப்பிட்ட நாளில் புத்தக பையின்றி பள்ளிக்கு வர மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

Monday, August 22, 2022
school students
August 22, 2022
இன்ஜினியரிங் கவுன்சிலிங்: அரசு பள்ளி மாணவர் 57 பேருக்கு 'சீட்'
-இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கின் முதல் நாளில், அரசு பள்ளி மாணவர்கள், ௫7 பேர் இடங்கள் பெற்று உள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 443 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது.இதில், 130 மாணவர்கள் பங்கேற்று, ஆன்லைனில் விருப்ப பதிவு செய்தனர். அவர்களின் விருப்பப்படி, நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆன்லைனில் உத்தரவு வழங்கப்பட்டன.
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், 21; விளையாட்டு பிரிவில், 34 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், 2 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.இதையடுத்து, சிறப்பு பிரிவில் உள்ள அரசு பள்ளி ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு, 'சாய்ஸ் பில்லிங்' வசதி நேற்று துவங்கியது. இன்று இரவு, 7:00 மணிக்குள் தங்களுக்கான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான பதிவு முடிகிறது. இதில், 2,426 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று பதிவு செய்வோருக்கு, நாளை காலை, 8:00 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை நாளை இரவு, 7:00 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.உறுதி செய்தவர்களுக்கு, நாளை மறுநாள் காலையில், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இதையடுத்து, 25ம் தேதி பொது கவுன்சிலிங்கின் முதல் சுற்று துவங்க உள்ளது. கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, 1800- 425-0110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, August 11, 2022
viral
August 11, 2022
ஆட்சியரிடம் விடுமுறை வேண்டாம் என்ற 6-ம் வகுப்பு சிறுமி - சமூக ஊடகங்களில் வைரல்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பது பொதுவான நம்பிக்கை.
இருப்பினும், கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, எல்லா குழந்தைகளும் விடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார், ஏனெனில் அவர் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையைத் தொடர்ந்து பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. செவ்வாய்கிழமை முகரம் பண்டிகை காரணமாக விடுமுறை.
இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் சபூரா நெளஷத் என்ற மாணவி, புதன்கிழமையும் (நேற்று) விடுமுறை அளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த மாணவியின் மின்னஞ்சலை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆட்சியர் கீதா, அந்த மாணவியின் படிக்கும் ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டியுள்ளார். சிறுமியின் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

Sunday, July 24, 2022
பள்ளி மாணவர்கள்
July 24, 2022
கனியாமூர் பள்ளி மாணவர்கள் படிப்புக்கு நடவடிக்கை: எம்.பி., மனு
கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில், படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எம்.பி., கோரிக்கை மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி., கவுதம சிகாமணி அளித்துள்ள மனு:சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மான முறையில் இறந்தார். இதனையடுத்து, பள்ளியில் நடந்த விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால், 4,000 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதையும் படிக்க | மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில், அவர்கள் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.