Breaking

Showing posts with label MBA. Show all posts
Showing posts with label MBA. Show all posts

Friday, January 26, 2024

January 26, 2024

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ. - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால அளவு:

2 ஆண்டுகள்.

தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://doms.iitm.ac.in/admission எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:

'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, அட்மிஷன் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர்: ரூ. 1600எஸ்.சி.,

எஸ்.டி.,: ரூ. 800

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: https://doms.iitm.ac.in/

Wednesday, January 10, 2024

January 10, 2024

MBA, MTech படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள்

What is the entrance exam for MTech in Tamil Nadu?

Tamil Nadu MTech Admission is done on the basis of a state-level entrance exam. Candidates can either qualify for the GATE exam or qualify for the CEETA PG exam. Tamil Nadu MTech Admission is conducted by Anna University and is done based on the CEETA PG 2023.

Which entrance exam is best for MBA in Tamil Nadu?

TANCET – Tamil Nadu Common Entrance Test (TANCET) is a state-level exam administered by Anna University for admission to MBA programmes in Tamil Nadu

Who is eligible for TANCET exam for MTech?

TANCET 2024 MCA Eligibility Criteria

Candidates must have obtained a minimum aggregate of 50 per cent in the qualifying exam (45 per cent for reserved category candidates). Candidates are eligible if they have completed their education in any of the following patterns: 10 + 2 + 3 / 4 / 5 years pattern

Is TANCET compulsory for MBA?

The TANCET eligibility criteria 2024 is also essential for admission to MBA, MCA, and ME/MTech/MArch/MPlan programs. Candidates not satisfying these criteria may be disqualified from the counselling and admission process.

Can I join MTech without GATE?

In order to get direct admission in Mtech without GATE, you must cover the other eligibility of the course: You must have a BTech degree with minimum qualifying marks. If you have a sponsored seat, you must have worked for at least 2 years. You must be granted a 2-year study leave by the employer.


எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் இன்று (ஜனவரி 10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.

இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன. 10) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Monday, January 01, 2024

January 01, 2024

குறுகியகால MBA படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்குAICTE எச்சரிக்கை!

In 2013, the Supreme Court of India ruled that colleges in India no longer need approval from the All India Council for Technical Education (AICTE) to offer Master of Business Administration (MBA) programs. The court ruled that MBA is not a technical course, and that the AICTE does not have control over affiliated university colleges. The court also ruled that the University Grants Commission (UGC) is the only body whose approval is necessary for colleges to offer MBA courses

What if MBA college is not AICTE approved?

An AICTE approval is necessary for colleges that offer technical courses. Since an MBA is not a technical course, an AICTE approval is not a necessity; non AICTE courses can operate freely in India. If you are aiming to get admission into a private MBA college, then an AICTE approval is not necessary

Does MBA come under AICTE?

Master's in Business Administration (MBA) is a degree course provided by the University or colleges recognized by the Universities which are approved by University Grants Commission (UGC), and sometimes also by All India Council for Technical Education (AICTE).

Is online MBA approved by AICTE?

Indira Gandhi National Open University (IGNOU) provides a Master of Business Administration (MBA) program with a duration of 2 to 4 years. This online MBA program holds accreditation, recognition, and approval from AICTE, UGC, and DEC. The entire program is available at a total fee of Rs 62,000/-. Which is better for MBA AICTE or UGC?

UGC is internationally recognised while AICTE is not. If a college is UGC approved then it is not necessarily to be AICTE approved. So,UGC approved college is better.

குறுகியகால MBA படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்குAICTE எச்சரிக்கை! Short-term MBA not allowed: AICTE warning to students!



குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்ட அறிவிப்பு:

சில தன்னம்பிக்கை பேச்சாளர்கள், 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு, உடனடி வகுப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் (crash course) நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏஐசிடிஇ அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக்கூடாது. எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலைப் படிப்பாகும். இது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அதனால், எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது. மாணவர்கள் அத்தகைய தவறான, மோசடியாக தகவல்களை நம்பி, அந்த படிப்புகளில் சேரவேண்டாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, July 16, 2022

Monday, July 11, 2022

July 11, 2022

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை திங்கள் முதல் (ஜூலை 11) ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும், விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பாா்க்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 01, 2022

July 01, 2022

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக சென்னை பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி நிறுவனத்தில் டிசம்பர் 2021 எம்பிஏ நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog