Hotel Management Courses
March 12, 2025
Showing posts with label hotel management. Show all posts

Wednesday, March 12, 2025
Wednesday, April 19, 2023
Who is eligible for Nchmct?
April 19, 2023
Hotel Management Entrance Test - ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு: மாணவர்களுக்கு இலவச பயிற்சி
ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு: மாணவர்களுக்கு இலவச பயிற்சி - Hotel Management Entrance Test: Free Coaching for Students
சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவருக்கு பிஎஸ்சி 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, ஒன்றரைஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுதயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.
விண்ணப்பதாரர் 10 மற்றும் 12-ம்வகுப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீதமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
3 வருட முழுநேர பட்டப் படிப்பு (பிஎஸ்சி) பயில தேசிய தேர்வு முகமைமூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில்(என்சிஎச்எம் ஜெஇஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் 2023-24-ம்ஆண்டு நடைபெறும் தேர்வுக்கு ஏப்.27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 2524 6344என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Saturday, April 15, 2023
hotel management
April 15, 2023
ஹோட்டல் மேலாண்மைப் படிப்புகள்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இளநிலை ஹோட்டல் மேலாண்மை மற்றும் பட்டயப் படிப்புகளில் சேருவதற் கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) தெரிவித்துள்ளது.
அத்தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்கான செலவுகளையும் தாட்கோ ஏற்றுக்கொள்ளும்.தேர் வுக்கு வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தல் அவசியம். இத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும் புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 05, 2023
IIT
April 05, 2023
இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்
இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - First in India; 13th in the world: The glittering Chennai Institute of Hotel Management
சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் எனும் மத்திய அரசு நிறுவனம், 'விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது; சர்வதேச அளவில் 13-வது இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகக் குழு தலைவரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: ''மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி கல்வி நிறுவனமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், 1963ல் இருந்து செயல்பட்டு வருகிறது. உலகத்தரத்திலான விருந்தோம்பல் கல்வியை வழங்குவதன் 60-ம் ஆண்டை இந்நிறுவனம் கொண்டாடி வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் 3 வருட B.Sc. Hospitality and Hotel Administration படிப்பும், 2 வருட M.Sc. Hospitality Administration படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, ஒன்றரை ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வளாக நேர்காணல்கள் வாயிலாக 100 சதவீத வேலைவாய்ப்பை இந்நிறுவனம் பெற்றுத் தருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் தர நிலையில் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் CEOWORLD MAGAZINE இதனை தெரிவித்துள்ளது. தகுதி தேர்வு, தேர்வு பெற்றவர்களின் கருத்துக்கள், பணியாளர்களின் கருத்துகள், வேலைவாய்ப்பபை பெற்றுத் தரும் விகிதம், சர்வதேச நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களை CEOWORLD MAGAZINE நிறுவனம் தர வரிசைப்படுத்தி உள்ளது. அதன்படி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு முன்பாக, இந்நிறுவனம் 2017ல் சர்வதேச அளவில் 34வது இடத்தையும், 2018ல் 28வது இடத்தையும், 2019ல் 24வது இடத்தையும், 2020ல் 22வது இடத்தையும், 2021ல் 18வது இடத்தையும், 2022ல் 14வது இடத்தையும் பிடித்தது. நிறுவனத்தின் தரம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை CEOWORLD MAGAZINE உறுதிப்படுத்தி இருக்கிறது. உலக அளவில் முதல் 15 இடங்களைப் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாக இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் விளங்குகிறது.
இந்நிறுவனத்தின் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு மூலமாகவே நடைபெறுகிறது. இந்நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் https://nchmjee.nta.nic.in என்ற இணையளத்தின் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.''