Breaking

Showing posts with label Private Sector Employment Camp for Adi Dravidians and Tribals. Show all posts
Showing posts with label Private Sector Employment Camp for Adi Dravidians and Tribals. Show all posts

Saturday, August 20, 2022

August 20, 2022

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை)

பரமத்தி வட்டார அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ,ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டாரங்களைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தோ்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அலகினை 04286 - 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 14, 2022

July 14, 2022

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை முன்தினம் நடக்க உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளன. அப்போது, பட்டதாரிகள் (பிஇ உட்பட), டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளன. இதில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 16ம் தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள், மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் என நடக்க உள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog