Breaking

Showing posts with label holiday for schools. Show all posts
Showing posts with label holiday for schools. Show all posts

Monday, October 14, 2024

Thursday, January 18, 2024

January 18, 2024

ஜன.20 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



ஜன.20 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Friday, November 03, 2023

November 03, 2023

காற்று மாசுபாடு காரணமாக 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர்

காற்று மாசுபாடு காரணமாக 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர்


டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் அவசர கால சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு; மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்; காற்று மாசுபாட்டால், 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் காற்றின் தரம் கடுமையான அளவைத் தொட்டதை அடுத்து, தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடுமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அவை பள்ளிகள் விடுமுறை முதல் கட்டிடப் பணிகளுக்கான தடை வரை நீள்கின்றன.

டெல்லி - என்சிஆரில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் நகருக்குள் டீசல் டிரக்குகள் நுழைவதும் தடைசெய்யப்படுகிறது. ’கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ - ஜிஆர்ஏபி நிலை 3 என்பவதாக குறியிடப்பட்டதை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. அதிகரித்து வரும் காற்று மாசு அளவுகள் மற்றும் ஜிஆர்ஏபி நிலை 3 என்பதை செயல்படுத்துவது குறித்து, அனைத்து துறைகளின் கூட்டம் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் தட்பவெப்ப நிலைகள் காரணமாக, காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று தர மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.

தொடக்கப் பள்ளிகளுக்கான 2 நாள் விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். குழந்தைகள் நலன் நாடும் வகையில், டெல்லி அரசு தற்போது அறிவித்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கான விடுமுறை, தேவையைப் பொறுத்து நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Monday, April 17, 2023

April 17, 2023

திரிபுராவில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை



திரிபுராவில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை - Holiday for all government schools in Tripura from tomorrow In response to the scorching heat, all government schools in Tripura have been declared holiday from tomorrow. The Tripura government has announced that schools will be closed from tomorrow to April 23.

கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது.

Friday, February 17, 2023

February 17, 2023

சிவராத்திரியை முன்னிட்டு நாளை 18.02.2023 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO அறிவிப்பு

நாளை 18.02.2023 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO அறிவிப்பு

சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Monday, September 19, 2022

September 19, 2022

Insist on holiday for schools -'ப்ளு' காய்ச்சல் - பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

Insist on holiday for schools - பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

Necessary steps should be taken to create awareness among the parents about 'Blue' fever which is spreading among children in Tamil Nadu and to bring it under control. Former Chief Minister Panneer Selvam said that the Tamil Nadu government should take measures to postpone the exams and give holidays to schools, especially elementary schools, for a while until the fever is brought under control. Regarding this, Minister Subramanian gave an answer and gave an interview to a reporter in Chennai: There is no need to give holidays to schools. To investigate and publish reports on the nature of the disease. Students' studies will be affected if schools are given holidays. Special vaccination camps are being held at 50,000 places in Tamil Nadu. The vaccination camp will be held till September 30. This is what he said.

தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் 'ப்ளு' காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் பதில் அளித்து, சென்னையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வே ண்டிய அவசியம் இல்லை. நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்ககைளை வெளியிட வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடை பெற்று வருகிறது. செப்டம்பர் 30ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog