Breaking

Showing posts with label PTA. Show all posts
Showing posts with label PTA. Show all posts

Tuesday, October 03, 2023

October 03, 2023

போராடும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச முன்வர வேண்டும் - பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வலியுறுத்தல்



The principal should come and talk to the struggling teachers - insists the president of the parent teacher association - போராடும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச முன்வர வேண்டும்

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வலியுறுத்தல்

மதுரை ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்,'' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்

சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் செப்., 27 முதல், 30 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை.

மன உளைச்சல்

மாணவர்களை திறன் மிக்கவராக மாற்றும் ஆசிரியர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை சூழல் இருந்தால் தான் சிறப்பாக கற்பிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களை மாநில அரசு கண்டுகொள்வதே இல்லை. பலர் திருமணம் செய்யக்கூட முடியாமல் வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்.

ஒரே பணியை செய்யும், சம அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதும் அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வருத்தம்

ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்தித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.

அரசிடம் கோரிக்கை வைத்து போராடும் எவரையும், அரசுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது. ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை முதல்வர் நேரில் அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் போராடுவது சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Friday, December 16, 2022

December 16, 2022

பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வேண்டும்: 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வேண்டும்: 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

பொங்கல் பண்டிகை வர உள்ளது. அரசு பள்ளிகளில் 10 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிகிற 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

கோரிக்கை குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :

பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். பண்டிகை முன்பணத்தை எங்களின் மாத சம்பளத்தில் தவணையாக பிடித்தம் செய்து கொள்ளலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை பகுதிநேர ஆசிரியர்கள் கற்று தருகிறோம்.

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் அரசின் போனஸ் கிடைக்கிறது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் 2012ம் ஆண்டு முதல் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் அட்வான்ஸ் இதுவரை கிடைக்க செய்யவில்லை.

எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கல் போனஸ் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற 181வது வாக்குறுதியை 12ஆயிரம் குடும்பங்கள் எதிர்நோக்கி காத்துள்ளோம். 19 மாதங்கள் ஆகிவிட்டது.

எனவே,எங்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும் . முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின் வேண்டுகோள் நிறைவேறும் நிலை உள்ளது.

இனி முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

--------------------------------------

எஸ்.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

Friday, October 07, 2022

October 07, 2022

மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்கள்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்கள்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மழலையா் வகுப்புகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் செய்வது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். அதையேற்று மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி என்பதை அறிவுறுத்தி ஒரு மையத்துக்கு ஓராசிரியா் வீதம் 2,381 நபா்களை தோ்வு செய்ய வேண்டும்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம். அதில் தகுதியானவா்கள் இல்லாத நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவா்களை நியமனம் செய்யலாம். இவா்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்ற வேண்டும். பள்ளி வேலை நாள்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை பணி நேரமாகும். கல்வியாண்டின் இறுதி நாளில் அவா்கள் பணிகள் நிறைவடைந்துவிடும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தரப்படும். இதற்காக நிகழ் கல்வியாண்டுக்கு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 28, 2022

September 28, 2022

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 11, 2022

August 11, 2022

முதன்மை கல்வி அலுவலருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கண்டனம்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்களாக மற்ற ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத அலுவலர்களும் 50 ரூபாய் கொடுத்து தேசிய கொடியை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் மாவட்ட பொறுப்பாளர் திரு.பழ.கௌதமன் கூறுகையில்...

கரூர் மாவட்ட முதன்மை செயலாளரின் செயல் கடும் கண்டத்துக்குரியது. எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கொடிகள் பெறப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்கலாக மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொடிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். எமிஸ் இணையதளத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது ஒரு முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.அவருக்கு திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.
August 11, 2022

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

சென்னை:'சுதந்திர தின விழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. 'எமிஸ்' இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு, 50 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல், 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் - TN PTA Rules And Regulations - PDF

Thursday, July 07, 2022

July 07, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tuesday, July 05, 2022

July 05, 2022

பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 16 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 24 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகம், வட சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், வில்லிவாக்கம், சென்னை-49. deonortha2section என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

மாவட்ட கல்வி அலுவலகம், தென் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8. deosouth08@gmail. com என்ற மின்னஞ்சலிலும், மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை , சென்னை-15க்கு deocnc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், கிழக்கு சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-05க்கு deocne@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
July 05, 2022

Breaking : தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க உயர்நீதிமன்ற மறுப்பு!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு என்ன அவசரம்?

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கு.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

Monday, July 04, 2022

July 04, 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான காலி பணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வருகின்ற 6-ந் தேதி ஆகும்.

குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் காலி பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு:-

திருத்தணி கல்வி மாவட்டம் deotiruttani@gmail.com, திருவள்ளூர் கல்வி மாவட்டம் deotlr@nic.in, ஆவடி கல்வி மாவட்டம் deoaavadi@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் deoambt@gmail.com, பொன்னேரி கல்வி மாவட்டம் deopon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
July 04, 2022

தற்காலிக ஆசிரியர் பணி - Temporary Teachers Post - Application Form - PDF

13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.

தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

Temporary Teachers Post - Application Form -

CLICK HERE TO DOWNLOAD
July 04, 2022

ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியரின் பத்திரிக்கை செய்தி!

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியரின் பத்திரிக்கை செய்தி!

Friday, July 01, 2022

July 01, 2022

ஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?

ஆசிரியர் நிரந்தர பணி நியமனத்தில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது வரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ” தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நிரந்தரமாக ஆசிரியரை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? இது போன்ற முறையற்ற, தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் தகுதியற்றவர்கள் பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது மாணவர்களின் நலன் சார்ந்தது.

ஆகவே, அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Thursday, June 30, 2022

June 30, 2022

13,331 இடைக்கால ஆசிரியர் நியமனம்: ஒரு பார்வை - கட்டுரை

அண்மையில், தமிழ்நாடு அரசு, 13,331 ஆசிரியர்களை இடைக்காலமாக நியமிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மொத்தம் 13,331 காலிப் பணியிடங்கள். இந்தப் பணியிடங்களில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் 7.9-இல் குறிப்பிட்டுள்ள அம்சம்தான் இது.
இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10 மாதங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாதங்களும் பணியாற்ற உள்ளனர். இந்த பணிக்காலமும் நிரந்தரமில்லை என்பதுதான் உச்சக்கட்ட சோகம். காலிப்பணியிடத்துக்கு கல்வித்துறை நிரந்தர ஆசிரியரை நியமித்துவிட்டால், இடைக்காலமாக பணியாற்ற வந்தவர் வெளியேற்றப்படுவார். இதுதான் அரசு உத்தரவு.
அந்தந்த பள்ளி அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ள பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இவர்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு விதிப்படி, "டெட்' எனப்படும் தகுதித் தேர்விலும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்ற ஒருவரால்தான் ஆசிரியர் பணி பெற முடியும். ஆனால், இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்படவில்லை. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போது, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், "இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.
அரசின் இந்த உத்தரவுப்படி, இடைக்கால ஆசிரியர்களுக்கான தகுதி, பட்டப்படிப்பு மட்டுமே. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களும் பட்டப்படிப்பு படித்தவர்கள்தான். அவர்கள் ஆசிரியருக்கான தகுதி பெற்றவர்கள் இல்லை. முறையான தகுதி பெறாத ஒருவரால், 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க முடியுமா?
இடைக்கால ஆசிரியருக்கு தகுதி தேவையில்லை என அரசு நினைக்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க இந்தத் தகுதி போதுமென அரசு கருதுகிறதா? அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் கல்வித்துறையே அக்கறையற்று இருப்பதை ஏற்க இயலாது.
இடைக்காலமாக நியமிக்கப்பட உள்ள 13,331 பேரில், 90 சதவிகிதத்தினர் கற்பித்தலில் அனுபவம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். மாணவர்களுக்குப் புரியும்படி கற்பித்தல் ஒரு கலை. அனுபவமில்லாதவர்களுக்கு எளிதில் அது கைவராது. அவர்கள் மாணவர்களுடன் பழகி, அவர்களது உளவியலை உள்வாங்கிட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகிவிடும். எஞ்சிய சில மாதங்களில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
13,331 பேருக்கும் சொற்பத் தொகையை கொடுத்து, அவர்களது சேவையை எட்டு முதல் பத்து மாதங்களுக்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்புவது உழைப்புச் சுரண்டல் ஆகாதா?
விலைவாசி உயர்ந்துவிட்ட இன்றைய சூழலில், மாதம் ரூ.7,500 என்பது எப்படி போதுமானதாக இருக்கும்? அரசின் இந்த நகர்வு, எண்ணிக்கையை பெருக்குவதற்கானதாக மட்டுமே இருக்கும். எட்டே மாதத்தில், புதிதாக வரும் ஒரு ஆசிரியரால் மாணவர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியுமா? உளவியல் ரீதியாக இது சாத்தியமா?
2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண். 177-இல் குறிப்பிடப்பட்டிருந்தது. காலிப்பணியிடங்கள் இல்லை என்பதைக் காட்ட இடைக்கால ஆசிரியர் நியமனத்தில் அக்கறை காட்டும் பள்ளிக்கல்வித்துறை, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பாராமுகமாக இருப்பது ஏனோ?
நிலைமை இப்படியிருக்க, பத்து மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும் 13,331 பேருக்கு அரசு எந்த வகையில் முன்னுரிமை தரப்போகிறது? வழக்கமான பணி நியமனத்தில் இவர்களுக்கு சலுகை தரப்படுமா? மேலும், பள்ளி மேலாண்மைக் குழுதான் ஆசிரியர்களைத் தேர்வு செய்யப்போகிறது. இதில் அரசியல் தலையீடோ, பணப் பரிவர்த்தனையோ இருக்காது என்பதை அரசால் அறுதியிட்டுக் கூற முடியுமா?
அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் திமுக, "லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப்பணி லட்சியத்தைச் சிதைக்கும் அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று கூறுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி லட்சியத்தை அக்னிபத் திட்டம் சிதைக்கும் என்றால், இடைக்கால ஆசிரியர் நியமனம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆசிரியர் பணி லட்சியத்தை சிதைக்காதா?
டெட் தகுதி தேவைப்படாத சிறப்பு ஆசிரியர்கள் 11,000 பேரை தமிழக அரசு இடைக்காலமாத்தான் நியமனம் செய்தது. பணி நியமனம் கோரி அவர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதே மனநிலையோடு தற்காலிக ஆசிரியர்களும் பணியில் சேரலாம். தற்போது பணிபுரிந்துவரும் வேலையைக் கூட உதறிவிட்டு, நிரந்தர ஆசிரியராகிவிடலாம் என்ற நப்பாசையில் சிலர் பணியில் சேரலாம்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கல்வித்துறை மீண்டுமொரு அசாதாரண சூழலையே ஏற்படுத்தியிருக்கிறது.

Total Pageviews

Search This Blog