Breaking

Showing posts with label CoSE PROCEEDINGS. Show all posts
Showing posts with label CoSE PROCEEDINGS. Show all posts

Friday, June 23, 2023

Thursday, April 06, 2023

April 06, 2023

163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 (Physical Director Grade 1) ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

CoSE - PD 1 Deployment.pdf - Download here...

PD 1 SURPLUS DETAILS 2022 -2023.pdf - Download here

PD 1 Need And Vacant List 2022 -2023.pdf - Download here

Wednesday, March 15, 2023

March 15, 2023

01.01.2023 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

01.01.2023 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் பட்டதாரி ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DSE Proceedings - Download here...

Friday, October 21, 2022

October 21, 2022

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

Saturday, October 01, 2022

October 01, 2022

CoSE - DEO PROMOTION LIST - 47 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF

CoSE - DEO PROMOTION LIST - 47 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF - Order of the Commissioner of School Education granting promotion/transfer to 47 High/High School Headmasters as District Education Officers

CLICK HERE TO DOWNLOAD

Saturday, September 24, 2022

September 24, 2022

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Associate Director of School Education processes depending on the transfer of ministry staff who have been in the same office for more than 3 years!

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - நெறிமுறைகள் - சார்பு.

பார்வை:

1. அரசாணை நிலை எண் 10 பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறை, நாள்: 07.01.1994

2. அரசாணை எண்.101, ப.க.(வ.செ.) பள்ளிக் கல்வித்துறை, நாள்.18.05.2018

3. அரசாணை எண்.151, பள்ளிக்கல்வி (SE1(1), துறை, நாள்.09.09.2022

4. சென்னை –6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.24689/அ4/இ1/2019, நாள்.12.08.2022.

பார்வை (2) மற்றும் (3) இல்காணும் அரசாணையின்படி கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனை முன்னிட்டு சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டும் ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், பார்வை (1)இல் காணும் அரசாணையின்படி, நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும்பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திட கீழ்க்கண்ட நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்கவகையிலும், அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 01.06.2022 அன்றைய நிலையில், மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள பட்டியலின்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. புதிய அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு பணியிடம் அனுமதித்து, பார்வை (3) இல் கண்டவாறு அரசாணை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அப்பணியிடங்களைக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மேலும் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி கலந்தாய்வினை செவ்வனே செய்து முடிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

1. மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும்.

2. 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு / பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

4. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

5. அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

6. பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிருவாக மாறுதல் அளிக்கப்படும்.

7. தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள, அவர்தம் பட்டியலை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

8. பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பார்வை (4)இல் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

9. மேற்கண்ட மாறுதல் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக (DPI) அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி ஆணையரகத்தில் இணைப்பில் கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

10. ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும்நிலையில் பணியாளரின் பதவியில் சேர்ந்த நாளினை (Cadre seniority and not the station seniority)முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்.

11. மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் சில பணியாளர்கள் எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் அப்பணியாளர்களுக்கு இடம்பெற்றிருப்பாராயின் மூன்றாண்டுகளுக்கான மாறுதல் அளிக்கத் தேவையில்லை.

மாவட்ட அளவில் அனைத்து அமைச்சு / பொதுப்பணியிடங்களுக்கும் (மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் / முறையான கண்காணிப்பாளர்கள் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் / இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் வரை) இணைப்பில் கண்ட பட்டியல்படி மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு. உடனுக்குடன் தங்கள் மாவட்ட அளவில் உள்ள காலிப்பணியிட விவரங்களை (Resultant Vacancy) பதவி வாரியாக தனித்தனியாகப் பட்டியலிட்டு அவ்வப்போது ஆணையரகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செவ்வனே செயல்படுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.

இணைப்பு:- பட்டியல் (அட்டவனை) CLICK HERE TO DOWNLOAD

Wednesday, September 14, 2022

September 14, 2022

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - In 2010, the director of school education ordered to request details of part-time temporary vocational teachers whose certificates were checked!

09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் & 2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Tuesday, September 13, 2022

September 13, 2022

01.08.2022 நிலவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

01.08.2022 நிலவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

PROCEDURE OF JOINT DIRECTOR OF SCHOOL EDUCATION DEPENDING ON TEACHER POST DETERMINATION AS ON 01.08.2022

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, September 06, 2022

September 06, 2022

பள்ளிக் கல்வி 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியர் - - இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் - திட்டம் அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் - (சுயநிதிப் பிரிவு நீங்கலாக) 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் - வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் - EMIS Portal -ல் இணையதளத்தில் பதிவு செய்தல் - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (தொழிற் கல்வி) செயல்முறைகள்

பள்ளிக் கல்வி 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியர் - - இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் - திட்டம் அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் - (சுயநிதிப் பிரிவு நீங்கலாக) 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் - வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் - EMIS Portal -ல் இணையதளத்தில் பதிவு செய்தல் - தொடர்பாக.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (தொழிற் கல்வி) செயல்முறைகள்,


CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Monday, September 05, 2022

September 05, 2022

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Saturday, September 03, 2022

September 03, 2022

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

CLICK HERE TO DOWNLOAD

Friday, September 02, 2022

September 02, 2022

பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2022-23 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் நினைவு தினம் - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 05.09.2022 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Saturday, August 27, 2022

August 27, 2022

06.09.2022 மற்றும் 07.09.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம்



மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 06.09.2022 மற்றும் 07.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் தகவல் - தெரிவித்தல் - சார்பு.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Wednesday, August 24, 2022

August 24, 2022

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD

Saturday, August 13, 2022

August 13, 2022

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

Sunday, July 31, 2022

July 31, 2022

15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Total Pageviews

Search This Blog