CONDOLENCE
December 21, 2025
Showing posts with label CONDOLENCE. Show all posts

Sunday, December 21, 2025
Friday, August 25, 2023
CONDOLENCE
August 25, 2023
விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணம்

தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலன் உயிரிழப்பு.
மாணவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடியபோது மாணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாக அறிக்கை.
Friday, May 19, 2023
Monday, February 20, 2023
Trophy
February 20, 2023
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!!
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!! - Chief Minister Condolences to District Collector who died while playing in Chief Minister's Trophy!!!
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
Thursday, August 11, 2022
Tamil Nadu Agricultural University
August 11, 2022
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, March 15, 2022
TEACHERS
March 15, 2022
ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் கலைச்செல்வன் வயது 16 தற்கொலை செய்து கொண்டார்.
கலைச்செல்வன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவர் தேர்வில் பார்த்து எழுதியதாக ஆசிரியர் அவரை திட்டி உள்ளார் இதனால் மன உளைச்சல் அடைந்த கலைச்செல்வன் பள்ளி மொட்டை மாடியில் சென்று கீழே குதித்தார். எதில் கலைச்செல்வன் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார்.
புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கி வருகின்றனர் மேலும் ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒருபுறம் கருத்து எழுந்துள்ளது.

Sunday, February 06, 2022
WhatsApp
February 06, 2022
ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
ஒரத்தநாடு அருகே ஆசிரியர் திட்டியதால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் வித்யா (17). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி வித்யா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை சக மாணவர்கள் முன்னிலையில் கணித ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அதே பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இதற்கான காரணத்தை வித்யா வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்து ஆசிரியர் சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Wednesday, January 26, 2022
STUDENTS
January 26, 2022
உடல் பருமனால் விரக்தி; பள்ளி மாணவி தற்கொலை
திருச்சி: உடல் பருமனால் விரக்தியடைந்த பள்ளி மாணவி, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, கன்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷர்மிளா. எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவர், சில ஆண்டுகளாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மகள் ஷிவானி, 13, தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷர்மிளா, கதவை தட்டியுள்ளார். மகள் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, ஷிவானி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரணையில், ஷிவானி உடல் பருமனாக இருந்ததால், தாயிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஷிவானி, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Friday, January 14, 2022
Sunday, December 26, 2021
CONDOLENCE
December 26, 2021
நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை
நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் பேராவூரணி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (46). இவரது மனைவி நாகூர் மாலா (40). இவர்களது மகள் துளசி(18). 2018 ஆம் ஆண்டு பேராவூரணி தனியார் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்விலும் அவர் 306 மதிப்பென் பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பொறியியல் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் என்று சொல்லி சான்றிதழ்களை தர காலதாமதப்படுத்தி பொறியியல் கவுன்சிலிங் முடிந்தபிறகு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு படிப்பிலும் சேர முடியவில்லை என்று துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி, நாகூர் மாலா இருவரும் சனிக்கிழமை வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஓட்டு வீட்டின் கூரையில் துளசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலை வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், துளசி தூக்கிட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துளசியின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பேராவூரணி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மாணவியின் மரணம் குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்.
பேராவூரணி வட்டாட்சியர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, December 23, 2021
Sunday, December 19, 2021
TEACHERS
December 19, 2021
நெல்லை மாணவர்கள் பலி: மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் இறந்த சம்பவத்தில் மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி கைது செய்யப்பட்டனர்.
நெல்லை 4வது ஜெ.எம்., நீதிமன்ற நீதிபதி ஜெய்கணேஷின் குடியிருப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிசம்பர் 31 வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நுாற்றுக்கணக்கான சிறுபான்மை பள்ளிகளை நடத்தி அரசு நிதியுதவி பெறும் சி.எஸ்.ஐ., சபையின் லே செயலர் உள்ளிட்ட நிர்வாகம் மாறும்போது தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்டோரை மாற்றிவிடுகின்றனர். அவர்களின் பணி அனுபவம் குறித்து கவனிப்பதில்லை. சாப்டர் பள்ளியில் முந்தைய தலைமையாசிரியாக இருந்த ஜெபக்குமார் என்பவரை மாற்றிவிட்டு பெர்சிஸ் ஞானசெல்வியை நியமித்துள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியை, முந்தைய தலைமையாசிரியர் தினமும் சுற்றிவந்து கவனிப்பார். மாணவர்களுடன் பேசுவார். சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தபோதும் சக மாணவர்கள் மட்டும் தான் அவர்களை மீட்டுள்ளனர்.பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் காரில் வருகின்றனர். ஆனால் மாணவன் சுதீஷ் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் நான்கு பேர் காயத்துடன் தவித்தனர். அப்போதும் ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனரே தவிர, தங்கள் கார்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் பொதுமக்கள், மாணவர்கள் சம்பவத்தின் போது உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போலீசார் நடத்திய விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இரங்கல் இல்லை
சி.எஸ்.ஐ., பிஷப், லே செயலர், சி.எஸ்.ஐ., சபை நிர்வாகத்தில் இருக்கும் திருநெல்வேலி தி.மு.க., எம்.பி., ஞானதிரவியம் ஆகியோர் மாணவர்கள் இறப்பிற்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவுமில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.17 குழுக்கள் நியமனம்திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து அறிய வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சி துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகளை கொண்ட 17 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையளிப்பார்கள் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

பாலியல் தொல்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை

பள்ளி பாதுகாப்பானது இல்லை. பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். சென்னை மாங்காடு, சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு வரலட்சுமி (20), கலையரசி (எ) நந்தினி (17) என 2 மகள்கள் உள்ளனர். வரலட்சுமி, அதேபகுதி தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கிறார். நந்தினி, பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி கீதா மற்றும் மகள் நந்தினி மட்டும் இருந்தனர்.
சிறிதுநேரத்தில் தாய் கீதா, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது நந்தினி ஒரு அறைக்குள் இருந்தார். வெகுநேரமாகியும் நந்தினி அறைக்குள் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் கீதா, கதவை தட்டினார். அப்போதும் சத்தம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நந்தினி தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த மாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நந்தினி தங்கியிருந்த அறையை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆங்கிலத்தில் கைப்பட நந்தினி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் யாரையும் நம்பக்கூடாது என்று உருக்கமாக எழுதி இருந்ததுடன் இதற்கு மேல் முடியவில்லை மனது மிகவும் வலிக்கிறது. பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அந்த கனவு அடிக்கடி வந்து என்னை டார்ச்சர் செய்கிறது. என்னால் நிம்மதியாக படிக்க முடியவில்லை. என்னுடைய கனவுகள் கலைந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடமும் மகன்களிடமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும்படி கற்பிக்கவும்.
எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு உறவினரையும் ஆசிரியரையும் யாரையும் நம்பவேண்டாம். அம்மா நான் போய்ட்டு வாரேன், இன்னொரு உலகத்துக்கு. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். பள்ளி எப்போதும் பாதுகாப்பானது இல்லை. எனக்கு நீதி வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. நந்தினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது உடல்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் கூறினர்.

Saturday, December 18, 2021
Friday, December 10, 2021
STUDENTS
December 10, 2021
மறைந்த முப்படை தலைமை தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கோவை, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். அவர்களுக்கு இந்தியா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தணிகைஅரசு, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, பள்ளி ஆசிரியர்கள் லதா சேகர் சீனுவாசன், கலைவாணன், பொற்கொடி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் செங்குட்டுவன் உள்பட பலர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கூரம் விஸ்வநாதன், நகரத் தலைவர் அதிசயம் குமார், நகர பொது செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட பட்டியலின தலைவர் சிலம்பரசன், ரயில்வே வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சங்கரமடம் இரங்கல்: காஞ்சிபுரம் சங்கரமட மேலாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரத தேசத்தின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் அதிகாரிகள் அகால மரணம் அடைந்தது துரதிஷ்டவசமானது. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.ஜெனரல் ராவத், நமது நாட்டின் முப்படைகளின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பல உயரிய நிலையில் மிகத் திறம்பட பணியாற்றியவர்.
இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதி என்ற பெருமைக்குரியவர். அவரது தியாகமும் நாட்டுக்கான அவர் செய்த சேவைகளும் எதிர்கால தலைமுறைக்கு என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என கூறப்பட்டுள்ளது.மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவாயில் அருகே டாக்டர் அம்பேத்கர் இசிஆர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் சரவணன், செயலாளர் லோகநாதன், பொருளாளர் தாமஸ், சிந்தனை சிவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Saturday, November 20, 2021
Saturday, November 06, 2021
CONDOLENCE
November 06, 2021
சேலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் விஷமருந்தி தற்கொலை..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் தற்கொலை செய்துக்கொண்டார். தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் மருத்துவம் படிப்பதற்காக வீரகனூரில் உள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு 156 மதிப்பெண் வாங்கிய அவர், இந்த முறை 261 மதிப்பெண் பெற்றார்.
பட்டியலினத்தை சேர்ந்த சுபாஷ், இந்த ஆண்டும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைக்காது என்று முடிவு செய்து 2ம் தேதி வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்துவிட்டார். மயங்கி விழுந்த அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலன் தராமல் சுபாஷ் இறந்துவிட்டார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Saturday, October 16, 2021
Saturday, October 09, 2021
TEACHERS
October 09, 2021
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் ,மைலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மணிவாசகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நாகர்கோயில் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்துவந்த மாணிக்கவாசகம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வீடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து தேர்தல் பணி செய்து வந்த நிலையில், இரவு சுமார் 1 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக அருகேயுள்ள பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணிக்கவாசகம் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணிக்கவாசகத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 06, 2021
HeadMaster
October 06, 2021
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்ம மரணம் - கொலையா? என போலீசார் விசாரணை
தலைமை ஆசிரியர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு உஷாராணி என்ற மனைவியும், காவியக்கண்ணி, சரண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் என்ஜினீயர் ஆவார்கள். உஷாராணி உஞ்சினி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த செல்வராஜ், மாலையில் பள்ளி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அவர் சோழன்குறிச்சி அய்யனார் கோவில் அருகில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதனை கண்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜின் கழுத்தில் காயம் இருப்பதால், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக செல்வராஜின் உறவினர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து செல்வராஜுக்கு ஏதேனும் முன்விரோதம் இருந்ததா?, அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.