Breaking

Showing posts with label NEET Exemption Bill. Show all posts
Showing posts with label NEET Exemption Bill. Show all posts

Thursday, April 06, 2023

April 06, 2023

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர தாமதிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர தாமதிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை. மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

- நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை ஆகும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை விரைவாகப் பெறுவதற்கு மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசும் எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும். மத்திய அரசும் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேநேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Saturday, July 23, 2022

July 23, 2022

நீட் விலக்கு மசோதா - 6 வகையான கேள்விகளுக்கு தமிழக சட்டத்துறை விளக்கமான பதில்

நீட் விலக்கு மசோதா குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதம் ஆகும். இந்த மசோதா அரசமைப்பு சட்டம் பிரிவு 14ஐ மீறுவது என்ற ஆட்சேபனையை ஏற்க முடியாது.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களில் அடிப்படையிலான சேர்க்கை முறை வேறு எந்த சேர்க்கை முறையை விடவும் நியாயம், சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரசமைப்பு சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மசோதா தேசிய கல்வி கொள்கை 2020ஐ மீறியுள்ளது என்று மத்திய அமைச்சகங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள வாதம் முற்றிலும் ஏற்க முடியாது. தேசிய கல்வி கொள்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தேசிய கல்வி கொள்கை மாநில சட்டமன்றத்துக்கு வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது என்பதால், மாநில சட்டமன்றங்களுக்கு உயர்கல்வி குறித்து சட்டம் இயற்ற முழு அதிகாரம் உள்ளது. மசோதா குறித்த ஒன்றிய அரசின் 6 வகையான கேள்விகளுக்கு தமிழக அரசின் சட்டத்துறை பல்வேறு விளக்கங்களுடன் கூடிய சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது.

இதையும் படிக்க | வகுப்பு12|கணினி அறிவியல்|பாடம் 15|SQL மூலம் தரவுகளை கையாளுதல்|பகுதி5

இது ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏற்புடைய பதிலாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.புதிய ஜனாதிபதி அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர். நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் என்றே நாம் நம்புவோம். இந்த விஷயத்தில் வேகமான செயல்பாட்டை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஒவ்வொரு காயாக நகர்த்தி கொண்டு இருக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்துள்ள விளக்கத்தில்,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மே 2ஆம் தேதி தமிழக ஆளுநர் மூலம் பெறப்பட்டது.

நீட் விலக்கு மசோதா மீது மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை ஜூன் 21 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)

தமிழக அரசு பதிலளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவெடுப்பதற்கு தேவைப்படும் காலவகாசம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 19, 2022

July 19, 2022

"நீட் மசோதாவிற்கு எப்போது ஒப்புதல்..?" - மத்திய அரசு புதிய பதில்

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக ஒன்றிய அரசு தகவல்!! மேலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால நிர்ணயம் எதுவும் இல்லை என்றும் பதில்

இதையும் படிக்க | அரசு பணியில் வெளிமாநில இளைஞர்கள்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
GOVERNMENT OF INDIA

MINISTRY OF HOME AFFAIRS

LOK SABHA

UNSTARRED QUESTION NO. 409

TO BE ANSWERED ON THE 19TH JULY, 2022/ ASHADHA 28, 1944 (SAKA)

TAMIL NADU REENACTED BILL FOR NEET

409. SHRI S. VENKATESAN:

Will the Minister of HOME AFFAIRS be pleased to state:

(a) whether the Government of Tamil Nadu re-enacted bill seeking the students from the State to be exempted from the National Entrance-cum- Eligibility Test (NEET) has been forwarded to the Union Government for approval; and (b) if so, the status and progress thereof and the time by which this bill is likely to be approved?

ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF HOME AFFAIRS (SHRI AJAY KUMAR MISHRA) (a) A Bill namely 'The Tamil Nadu Admission to Undergraduate Medical Degree Courses Bill, 2021', reserved by the Hon'ble Governor of Tamil Nadu, for consideration and assent of the Hon'ble President of India was received in the Ministry on 02.05.2022.

(b) As per practice, Bills reserved by the Hon'ble Governors of States for consideration and assent of Hon'ble President of India are processed in this Ministry in consultation with the nodal Central Ministries/Departments.

Accordingly, the consultation process with nodal Central Ministries/ Departments concerned with the Bill was initiated. Ministry of Health & Family Welfare and Ministry of AYUSH furnished their 'comments' on the Bill which have been shared with Government of Tamil Nadu on 21.06.2022 and 27.06.2022 respectively for their comments/clarifications. The consultation process in such cases takes time and therefore no fixed time can be prescribed for such approval.

Wednesday, July 13, 2022

July 13, 2022

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? -தமிழக அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.

நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை. நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக மே 4-ஆம் தேதி முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழக மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
July 13, 2022

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை பதில்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு தொடர் பரிசீலனையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 மார்ச் 29 அன்று ஆளுநர் செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது‌.

மிகவும் கால தாமதமாக (98 நாட்கள் கழித்து) ஜூலை 7, 2022 தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று கிடைக்கப் பெற்றோம். பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டச் செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது. “சம்மந்தப்பட்ட அதிகாரி”யின் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்துக் கொள்வது. ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செயலகத்திலா?

ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று மாண்புமிகு முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து, “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை”யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடிப் பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும் என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகாரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி உள்ளோம்.

தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Total Pageviews

Search This Blog