Breaking

Showing posts with label Medical Education. Show all posts
Showing posts with label Medical Education. Show all posts

Thursday, September 22, 2022

September 22, 2022

Eligibility for medical courses is now a one-time payment - மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.

ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

Friday, September 09, 2022

September 09, 2022

மாணவர்களே, கலந்தாய்வில் புதிய நடைமுறை.. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு..!

The Directorate of Medical Education has announced that it has introduced a new procedure for medical consultation. In a press release issued by the Directorate of Medical Education in this regard, 'NEET UG examination for admission to junior medical courses including MPBS, BDS in medical colleges has been conducted and the results have been announced.

After allotment of 757 seats for the 15% all-India quota of 5,050 seats in 35 government medical colleges in Tamil Nadu, the Directorate of Medical Education is going to conduct the counseling for the remaining 4,293 seats and government quota seats in other private colleges. Notification for medical consultation will be out in a day or two. Students can apply to participate in the counseling from next week.

First the All India Quota Seats Consultation will be held then the State Quota Seats will start. The Directorate of Medical Education has introduced a new procedure for medical consultation in the current year. Accordingly, at the time of medical consultation, after allotment of seats, students have to pay one year's tuition fees to the examination board.

By this, additional fees or denial of admissions will be completely prevented when students visit the colleges in person after the consultation. The examination committee will later release the tuition fees paid by the students to the concerned colleges,” it said.
மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், மீதமுள்ள 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்த உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும். மாணவர்கள் அடுத்த வாரம் முதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.

நடப்பு ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மருத்துவக் கலந்தாய்வின்போதே, இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக் குழுவிடம் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதன் மூலம், கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும்.

மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும்’ என்று அதில் தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog